
``சம்பள உயர்வுக்காக நம் படைவீரர்கள் நம்மை மிரட்டுகிறார்கள் மன்னா!’’
``என்ன... வேலை நிறுத்தம்தானே செய்வார்கள்?”
``இல்லை மன்னா... எதிரி நாடுகளுக்கு ‘எங்கள் மன்னர் தலைமையில் போர்தொடுப்போம்’ என்று ஓலை அனுப்புவார்களாம்!’’
- பழ.அசோக்குமார்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``இது என்ன வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தறதுக்குப் பதிலா வாக்காளர் அறிமுகக் கூட்டம் நடத்தறாங்க?”
``அந்தக் கட்சிக்கு வாக்களிக்க நாலு வாக்காளர்கள் கிடைச்சிருக்காங்க... அவங்களை அறிமுகம் பண்றாங்க!’’
- அம்பை தேவா

``தலைவர் ஏன் கோபமா இருக்காரு?’’
``தேர்தல் சுற்றறிக்கையில `அனைத்துத் தொகுதியிலும் போட்டி’-னு அச்சடிக்கச் சொன்னதுக்கு `அனைத்துத் தொகுதியிலும் போண்டி’ -னு அச்சடிச்சுட்டாங்க.’’
- ப்ரணா

``மதியம் 12 - 2 கூட்டம் வைப்போம் தலைவரே!’’
``ஏன்யா?’’
``சாப்பிடறதுக்காவது யாராவது வருவாங்கள்ல?’’
- அஜித்