
``கூட்டணில நமக்கு எத்தனை சீட் ஒதுக்கியிருக்காங்க தலைவரே?’’
``கூட்டணியிலிருந்து நம்மை ஒதுக்கியிருக்காங்க!’’
- அம்பை தேவா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``தலைவர் ரொம்ப டென்ஷனா இருக்காரே, என்ன நடந்துச்சு..?’’
``பழைய பேப்பர் வாங்கப்படும்னு கூவிக்கிட்டு வந்தவன், இவர் வீடு வந்ததும் பழைய குற்றப்பத்திரிகை வாங்கப்படும்னு சவுண்டு விட்ருக்கான்...’’
- அதிரை யூசுப்

``இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது எனக்கு என்ன தெரிகிறது என்றால்...’’
``உங்களுக்குக் கண்ணு தெரியலைன்னு தெரியுது. எதிர்ல ஒருத்தர்கூட இல்லை.’’
- க.சரவணகுமார்

``கூட்டணியில் இருக்கும் கட்சியினர் என்னைக் கேவலமாகத் திட்டுவதற்கெல்லாம், கூட்டணி முறிந்த பிறகு மொத்தமாகத் திருப்பித் திட்டுவேன் என்பதை இத்தருணத்தில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்!’’
- அஜித்