பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

``நிபந்தனையற்ற ஜாமீனுக்கு வழிவகை செய்யும் எந்தக் கட்சியோடும் எங்கள் தலைவர் நிபந்தனையற்ற கூட்டணி வைக்கத் தயார் என்பதை...’’

- கோவை.நா.கி.பிரசாத்

ஜோக்ஸ் - 2

``நான் உங்களைக் காதலிக்கிற விஷயம் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சிடுச்சு.’’

``அப்புறம் என்னாச்சு?’’

``உங்களை நினைச்சு ரொம்பப் பரிதாபப்பட்டாங்க..!’’

- கோ.மோகன்ராம், இரட்டணை 

ஜோக்ஸ் - 2

``பத்து வருசமா இங்கே பேசன்ட்டா இருக்காரு டாக்டர்.’’

``அதுக்கு..?’’

``இப்போ பென்சன் கேக்கறாரு..!’’

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 2

``ஆளுங்கட்சியுடன் கூட்டணி இருக்கிறதா இல்லையா என்பது தெரியாததால், கட்சித் தலைவர்களில் பாதிப்பேர் அவர்களைத் திட்டியும் மீதிப்பேர் பாராட்டியும் பேசும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!’’

- எஸ்.முகம்மது யூசுப்.