“இந்த ஆஸ்பத்திரில அந்த பேஷன்ட் ரொம்ப வருஷமா இருக்காரு டாக்டர்...”

“அதுக்காக, ஆதார் கார்டுல இந்த அட்ரஸா கொடுக்கறது..?”
- சி.சாமிநாதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘`நமது யானைப்படைகள் வரும்போது ஏன் எதிரிநாட்டு வீரர்கள் வாள்களைப் போட்டுவிட்டு தேங்காய்பழங்களுடன் நிற்கிறார்கள்?’’

‘’கோயில் யானைகளை வாடகைக்கு எடுத்து வந்தோம் என்பதை ஒற்றன் தெரிவித்துவிட்டான் மன்னா!’’
- மகிழினி மணி.எம்

“எங்கள் தலைவரைக் கூட்டணிக்கு அழைத்து பூத் ஏஜென்ட் சீட் ஒதுக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..!”
- கோவை.நா.கி.பிரசாத்

“ஒரு கழுதையைக் கொண்டு வந்து நிறுத்தி, ‘கட்டுடா தாலிய’ன்னாக்கூட என் பையன் யோசிக்காமல் கட்டிடுவான்...”
“உங்களுக்கு என்ன போச்சு... நாளைக்கு உதை வாங்கப்போறது அவன்தானே..!”
- வி.ரேவதி,
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism