Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

"கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கு யாரு வருவாங்கன்னு சரியா சொல்ல முடியுமா, எப்படி?"

ஜோக்ஸ் - 2

"தலைவர் பைஜாமா குர்தாவுல இருந்தா தேசியக் கட்சிக்காரங்க, வேட்டி சட்டையில இருந்தா மாநிலக் கட்சிக்காரங்க வராங்கன்னு அர்த்தம்!"

ஏந்தல் இளங்கோ

"அந்த டாக்டர் ஏன் ரொம்ப டல்லா இருக்கார்?"

ஜோக்ஸ் - 2

"ஆபரேஷன் பேஷன்ட் கோ பேக் டாக்டர்னு போராட்டம் பண்ணுறாராம்..."

சீர்காழி .ஆர்.சீதாராமன்

``தலைவர் வாட்ஸ் அப்-ல பெயருக்கு பதிலா நம்பர்களா இருக்கே ஏன்?’’

ஜோக்ஸ் - 2

``அதெல்லாம் ஜெயில்ல இருக்கிற கைதிகளோட நம்பர்கள்!’’

 - அம்பை தேவா

“கடவுளாலேகூட முடியாதது எல்லாம் தேர்தல் அறிக்கையிலே இருக்கணும்…”

ஜோக்ஸ் - 2

“ஏன் தலைவரே?”

“அப்பதான் ஜனங்க நம்புவாங்க…”

-  தஞ்சை தாமு