“தலைவரே... நீங்க ஐந்நூறு கோடி வாங்கிட்டுத்தான் அந்தக்கட்சியோடு கூட்டணி வெச்சதா மக்கள் பேசிக்கறாங்க.''

“விடுய்யா... அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்!''
- ரிஸால் ரிஸானி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"தலைவரை ஜெயிலர் ஏன் முறைக்கிறார்?"

"கூட்டணிக்காகக் கதவுகளைத் திறந்து வைக்கணும்னு தலைவர் சொன்னாராம்!"
- பர்வீன் யூனுஸ்.
“தலைவர் எந்த தைரியத்துல அதே தொகுதிலேயே நிற்கிறார்?”

“தொகுதி மக்கள் அவரோட முகத்தை மறந்திருப்பாங்கன்ற தைரியத்துலதான்!”
- தீபிகா சாரதி
“என்னய்யா, இன்னைக்குக் கூட்டம் அதிகமா இருக்கு?"

"கூட்டம் முடிந்ததும் உங்களை சி.பி.ஐ கைதுபண்ணும்னு சும்மா ஒரு புரளியைக் கிளப்பிவிட்டிருக்கோம் தலைவரே!"
- அதிரைபுகாரி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism