Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/raja.paramasivam.315
ஐந்து நிமிடமாவது படிக்க வேண்டிய பதிவை, பதிவிட்ட மறுநொடி லைக்கி டுறவர், ஆகச் சிறந்த அவமானத்தை எழுதியவனுக்குத் தருகிறார். 

facebook.com/syed.khalee.5 
தொலைச்சிபுடுவேன்... தொலைச்சி புடுவேன்னு மோடி சொன்னது பாகிஸ்தானை இல்லையாம்.. ரபேல் டாக்குமென்ட்டையாம்... ஹய்யோ... ஹய்யோ!!!

facebook.com/Ilango Krishnan
எங்கள் திருமணப் பரிசாக மோடிக்கு வாக்களியுங்கள் என்று பீகாரில் ஒரு கல்யாணப் பத்திரிகையில் கேட்டிருக் காங்களாம். பயபுள்ள! இவன் வாழ்க்கைல ஒரு கஷ்டம்ங்கிறதால எல்லோரும் நாசமாப்போகணும்னு நினைக்குது பாரேன். நல்லா இருங்க தம்பி! இதுவும் கடந்து போகும்.

facebook.com/Arul Ezhilan
ரயில்வேப் பணிகளில் தமிழக மக்களைப் புறக்கணித்து, வடவர்களை நிரப்பிய மோடி, அதற்கு எம்ஜிஆர் பேர் வெச்சா என்ன; மஞ்சுளா பேர் வெச்சா என்ன?

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

facebook.com/Avudaiappan S
‘‘இது ராணுவக் கட்டுப்பாடு கொண்ட கட்சி” -பிரேமலதா. அந்தக் கட்டுப் பாட்டில் “நீ’’ ``வா” ``போ” என, பத்திரிகை யாளர்களைப் பேசலாம்னு விதி இருக்கு போல!

facebook.com/brinda.keats
தமிழ்ப்பெண்களின் தேசிய உடை நைட்டினு ஒரு தமிழ் சீரியல் டைரக்டர்க்குக்கூடத் தெரியாதா? ஒரு சீரியலில்கூட பார்த்ததே இல்லை!

facebook.com/syed.khalee.5   

எதுக்கு துரைமுருகன் வீட்டுக்குப் போனீங்க? நாங்க ஏழு சீட்டு கேட்டம்லே.. அதிமுக நாலு சீட்டு தர்றோம்னு சொல்லிட்டாங்க... மீதி மூணு சீட்டு தி.மு.க தருவாங்களான்னு கேக்கப் போயிருந்தோம்.

twitter.com/mohanramko
காத்துக்கொண்டிருப்பது சுகம்னு சொல்றவங்க... ஞாயிற்றுக்கிழமை சலூன் கடைக்கு வந்து பாருங்க!

twitter.com/SubashiniBA

அது எப்படி 350 கிலோ வெடி மருந்து உள்ள வருது..! ரபேல் பைல் வெளிய போகுது..! என்ன ஆட்சி நடத்துறீங்க..! 

twitter.com/kusumban@kusumbuonly

வீட்டுல இருந்த கடுப்பை எல்லாம்தான் படத்துல தீவிரவாதிங்ககிட்ட விஜய காந்த் காட்டினாரு போல...

twitter.com/ItsJokker

‘சுய கழிவிரக்கம்’ போன்றொரு நோயும் இல்லை. ‘சுய சமாதானம்’ போன்றொரு மருந்தும் இல்லை!

twitter.com/thoatta

8 வருசத்துல இவங்க கட்டுனது அந்தம்மாவுக்கு சமாதிதான். அடுத்த முறை கூட்டியாந்து அதுக்கும் பேர மாத்தாம இருந்தா போதும் :-/ 

twitter.com/MJ_twets
ஹீரோக்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். ஆனா நாமதான் சினிமாவில் மட்டுமே கொண்டாடிக்கிட்டு இருக்கோம்! 

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar
ரெண்டு கடன்காரன்கிட்ட பொய் சொல்லி நம்ப வைக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போகுது, இந்த மத போதகரெல்லாம் எப்படி இத்தனை பேரை நம்ப வைக்கிறாங்களோ?! 

twitter.com/Thaadikkaran
வண்டி மிர்ரர்ல பார்த்துத் தலையை சீவிட்டு, கண்ணாடியைப் பழையபடி இல்லாம அப்டியே வச்சிட்டுப் போறவங்களை கருட புராணத்தின்படி தண்டித்தா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்!

facebook.com/santhosh.narayanan.319
ரயிலில் இருக்கிறேன். ரவுடி பேபி பாட்டைப் பார்த்தால்தான் நாலுமாதக் குழந்தை புட்டிப்பால் குடிக்குது என்கிறார், மொபைலை நீட்டியபடி அப்பா. இந்த ஸ்டேட்டஸை இரண்டு விதங்களில் முடிக்கலாம். 1. இன்னும் நாலு தலை முறைக்குத் தமிழனுக்கு சினிமாவிலிருந்து தான் சி.எம். 2. யுவனை வெல்ல எவண்டா.

twitter.com/Kozhiyaar
அம்மா மனசு கஷ்டப்பட்றக் கூடாதுன்னு தான் பாதிப் பசங்க கோயிலுக்கே போறாங்க!

சைபர் ஸ்பைடர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism