“கூட்டணிதான் முடிவாயிடுச்சே தலைவரே... திரும்பவும் கூட்டணி குறித்துப் பேச எதுக்கு ஒரு குழுவை அமைக்கறீங்க?”

"தேர்தல் முடிவு வந்ததும் புதுசா கூட்டணி பேச வேண்டியிருக்குமே!"
- அஜித்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“என்ன டாக்டர் கன்சல்டிங் பீஸ் ஆயிரம் ரூபாயா?”

“ஆமா. ஸ்கேன், எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட்லாம் எடுக்கச் சொல்லமாட்டேன்!”
- எஸ்.முகம்மது யூசுப்
“கூட்டணியை நம்பி மோசம்....போயிட்டோம்யா...!"

“எப்பவும் டெபாசிட் மட்டும்தானே போகும் தலைவரே...!”
- பழ.அசோக்குமார்
“இந்த டாக்டர் ஏன் இவ்வளவு பீஸ் வாங்கறார்?”

“அரியர்ஸ் இல்லாம டிகிரி முடிச்சவராம்!”
- அம்பை தேவா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism