“இந்த ஹோட்டல்ல என்னங்க விசேஷம்?”

“நீங்க அதிகமாக டிப்ஸ் கொடுத்தீங்கன்னா, எல்லா சர்வரும் உங்கள சுத்தி நின்னு கிளாப் பண்ணுவாங்க.”
- அ.வேளாங்கண்ணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“தலைவரே அந்தக் கட்சித் தலைவர் உங்களோட கூட்டணி வைக்க விரும்புறாருன்னு நினைக்கிறேன்.”
“எதை வெச்சுய்யா சொல்ற?”

“உங்கள கன்னா பின்னான்னு திட்டி ஸ்டேட்மென்ட் விடுறாரே.”
- கு.வைரச்சந்திரன்
"மக்கள் உங்களை குழந்தையா பார்க்குறாங்க தலைவரே!"
“எப்படிய்யா சொல்ற?”

"அழவெச்சுப் பார்க்குறாங்களே!"
- நிரவி கஜேந்திரன்
“ டாக்டர் ஆபரேஷன் பண்ணாம ஸ்ட்ரைக் பண்றாரா?”

“ஆமா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்காம்.”
- எம். விக்னேஷ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism