
``ஊழல் கறை படிந்தவர்களோடு கூட்டணி இல்லைன்னு சொல்லிட்டு இப்ப அவங்களோடேயே கூட்டணி வெச்சிருக்கிறீங்களே?”
``தேர்தல் செலவைக் கணக்கு போட்டுப் பார்த்ததுல கறை நல்லதுன்னுதான் தோணுது..!’’
- ஜெ.மாணிக்கவாசகம்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``இன்னும் சில வாரங்களில் எங்கள் தலைவர் மத்திய சிறையில் இருப்பாரென்று பழக்கதோஷத்தில் சொல்லிவிட்டேன். அவர் மத்திய அமைச்சராக இருப்பார் என்று இப்போது திருத்திச் சொல்கிறேன்...’’
- திருமாளம் எஸ். பழனிவேல்

``நம்ம கட்சி சார்பா போட்டியிட யாரும் விரும்பலை போலிருக்கு தலைவரே!’’
``எப்படிய்யா சொல்றே?’’
``நேர்காணலுக்குக் கூப்பிட்டா, தலைவரை நேர்ல வந்து பார்க்கச் சொல்லுன்னு எகத்தாளமா பேசறாங்க!’’
- அஜித்

``நம்ம கட்சியோட பலவீனம் என்னய்யா?’’
``அதைப் பத்திப் பேச நாம ரெண்டு பேரு மட்டுமே இருக்கோம்கிறதுதான் தலைவரே!’’
- அஜித்

``சார்! ஒரு கார் நிறைய பணம் கொண்டுபோறாங்க. கேட்டால், `பேங்கில் கொள்ளையடிச்சது'ன்னு கணக்கு சொல்றாங்க!’’
``கணக்கு சொல்லிட்டாங்கன்னா, விட்டுருங்க!’’
- கி.ரவிக்குமார்

``அனைத்துக் கட்சிகளுடனும் நடந்து வரும் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்ததும், நமது எதிர்க்கட்சி எது என்பதைத் தலைவர் அறிவிப்பார். அது வரை பொறுமை காக்குமாறு …’’
- கி.ரவிக்குமார்

``பொதுக்கூட்ட மைதானத்தில் எதுக்கு ரெண்டு திசையில மேடை அமைக்கிறாங்க?’’
``ஒரே கான்ட்ராக்டர்கிட்ட ரெண்டு கட்சியும் ஆட்களை புக் பண்ணிட்டாங்களாம். ஒரு மீட்டிங் முடிஞ்சதும் கூட்டம் அப்படியே அந்தப் பக்கம் திரும்பிடுமாம்!”
- அதிரை யூசுப்

``ஆர்யாவுக்குத் திருமணம், விஷாலுக்கு நிச்சயதார்த்தம் இரண்டும் நடந்தது எங்கள் ஆட்சியில்தான். ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை ....''
- ஹெச். உமர் பாரூக்

``நம்ம தேர்தல் வாக்குறுதிக்கு பப்ளிக்கோட ரியாக் ஷன் எப்படிய்யா இருக்கு..?’’
`` `பிளாக்மெயில் பண்றீங்களா?’னு கேட்கறாங்க தலைவரே..!’’
- ஜெ.மாணிக்கவாசகம்

``தலைவருக்கு முதுகுப் பிடிப்பு இருப்பதால் அவருக்குப் பதில், இவர் காலில் விழுவார் என்பதை...’’
- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

``தனக்குப் பிறகு தன் வாரிசுகள் யாரும் கட்சிப் பதவிக்கு வரமாட்டார்கள் என்று என்ன தைரியத்தில் நம்ம தலைவர் சொல்றாரு?’’
``அதுவரைக்கும் நம் கட்சி இருக்காதுன்ற தைரியத்திலதான்...’’
- கு.ஆராவமுது

``எதிரி மன்னன் ஒரு வாட்ஸப் பிரியனோ?’’
``ஏன் கேட்கிறீர்கள் மன்னா?’’
``ஓலையைப் பெற்றுக்கொண்டு புறா முதுகில் டபுள் டிக் மார்க் போட்டுள்ளானே!’’
- அதிரை யூசுப்