
"தலைவர் மைக் முன்னால் நின்னுட்டு ஒண்ணுமே பேசாமல் இருக்காரே, ஏன்?."
"கூட்டத்தில் மொத்தமா பத்து பேருக்கு மேல பார்த்துட்டா சந்தோஷத்தில் அவருக்குப் பேச்சே வராது."
- க.சரவணகுமார்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“500 கோடி கொடுத்துட்டாங்களே… அப்புறம் ஏன் கூட்டணியிலேர்ந்து தலைவர் விலகுறாரு…?”
“ஆயிரம் ரூபா கட்டுகளா கொடுத்துட்டாங்களாம்…”
- தஞ்சை தாமு

"என்ன தலைவரே... ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாய் தரச்சொல்லி கட்சி மேலிடம் சொல்லி இருக்குது.. நீங்க வெறும் ஐந்நூறைத் தர்றீங்க..?"
"ஜி.எஸ்.டி. போக அவ்வளவுதான் வரும்.. போய்யா!"
- ஜெ.மாணிக்கவாசகம்

"நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு எங்கள் கட்சி வேட்பாளர்களை நீங்கள் ஜெயிக்க வைக்காவிட்டால், ஜெயிக்கும் வேட்பாளரை இதைவிட கூடுதல் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாவோம் என்பதை..."
- அஜித்