
News
ஓவியங்கள்: கண்ணா

"சொத்து எதுவும் இல்லைனா, சொத்து எதுவும் இல்லைன்னு எழுதுங்க. அதை விட்டுட்டு மக்கள்தான் என் சொத்துன்னெல்லாம் வேட்பு மனுல எழுதி எதுக்கு சீன் காட்டறீங்க?"
- அஜித்

"அனைத்துக் கட்சியினரும் நம்ம தலைவரை ஏன் பேச கூப்பிடறாங்க!?"
"டெபாசிட் இழப்பீட்டைத் தாங்குவது எப்படின்னு க்ளாஸ் எடுக்காவாம்...!"
- கோவை.நா.கி.பிரசாத்

“யோவ்... நல்ல நேரம் பாருங்கய்யா... வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் பண்ணிடலாம்...”
“தேர்தல் முடிஞ்சு அமைச்சரவைப் பட்டியலே ரிலீஸ் பண்ணிட்டாங்க... தலைவரே...!”
- பழ.அசோக்குமார்

"அடுத்தது நம்ம ஆட்சிதான்யா..."
"எப்படி தலைவரே அவ்வளவு கன்ஃபார்மா சொல்றீங்க..? "
"யார் ஆட்சிக்கு வர்றாங்களோ... அங்கே போய்ச் சேர்ந்துடுவோம்ல"
- ஜெ.மாணிக்கவாசகம்