பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

" எல்லாருக்கும் ஓட்டுக்கு பணத்துக்கு பதில் செக் குடுக்கலாம்னு இருக்கேன்யா ..!"

"ஏன் தலைவரே?"

"நாம தோத்துட்டா செக் செல்லாதபடி பண்ணிடலாம்ல?"

- தஞ்சை சுபா

ஜோக்ஸ் - 3

"ஏழைகளுக்குத் தேர்தல் நேரத்தில் கொடுப்பதற்காக, வருமான வரிகூடக் கட்டாமல் தலைவர் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான  பணத்தை பட்டப்பகலில் ரெய்டு என்ற பெயரில் அள்ளிச் செல்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!"

- அஜித்

ஜோக்ஸ் - 3

"எந்த தைரியத்துல நீ பத்தாம் கிளாஸ் முடிச்சுட்டு எம்.பி.பி.எஸ் டாக்டர்னு சொல்லி ஏமாத்துனே?"

"ஒண்ணாங் கிளாஸ் படிச்சுட்டு பத்தாவது முடிச்சிருக்கேன்னு சர்ட்டிபிகேட் வாங்குன தைரியத்துலதான்!"

- அஜித்

ஜோக்ஸ் - 3

"நமது ராணுவ ரகசியம் எதிரிக்குத் தெரியக்கூடாது அமைச்சரே!"

"நம்மிடம்தான் ராணுவமே இல்லையே மன்னா!"

"அந்த ரகசியம்தான் தெரியக்கூடாது என்கிறேன்!"

- அஜித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு