
“தலைவர் மாதிரி யதார்த்தவாதியைப் பார்க்கவே முடியாது!”
“எப்படி?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“மேடையில் பேசும்போது ‘ஒரு நிமிஷம் சிந்தித்துப் பாருங்கள்’னு சொல்லிட்டு ஒரு நிமிஷம் கேப் விடுவார்னா பார்த்துக்கயேன்!”
- எஸ்.முகம்மது யூசுப்.

"தேர்தல் முடிந்த பிறகு எங்களது எம்.பி-க்கள் எதிர்க்கட்சிக்குத் தாவ வாய்ப்பு இருப்பதால், எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க விரும்புவர்களும் எங்கள் கட்சிக்கே வாக்களிக்குமாறு..."
- அஜித்

“கல்யாணத்துக்கு வந்தவங்கள்லாம் மண்டபத்துக்கு வெளியே நிக்கிறாங்களே, ஏன்?”
“சாப்பாடெல்லாம் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியிருக்காங்க. அதை எதிர்பார்த்து நிக்கிறாங்க!”
- எஸ்.முகம்மது யூசுப்.

"மன்னா தங்கள் வாளுக்கு...’’
“வேலை வந்துவிட்டதா அமைச்சரே?”
“இல்லை மன்னா, நல்ல விலை வந்துள்ளது. தள்ளி விட்டுடலாமா?”
- தஞ்சை சுபா