அரசியல்
சமூகம்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

டி.வி சீரியல்கள், அவென்ஞ்சர்ஸ் பட க்ளைமாக்ஸ் என எதனாலும் பாதிக்கப்படாத ஐடியா அய்யனாரை, பிரதமர் மோடியின் லேட்டஸ்ட் பேட்டி ரொம்பவே பாதித்துவிட்டது. நேரமின்மையால் சுருக்கமாக வெளியான அந்தப் பேட்டியின், விலா வாரியான பதில்களை இங்கே கொடுத்திருக்கிறோம்.

“உங்கள் சிறுவயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?”

பதில்: “நான் சிறுவயதில் மிகவும் காமெடியாகப் பேசுவேன்.”

விலாவாரியான பதில்: “அப்படிப் பேசிப் பேசி நான் வளர்ந்ததைப் பார்த்துத்தான், இப்போது என் கட்சிக்காரர்களும் பேசுகிறார்கள். முக்கியமாக சுப்பிரமணியன் சுவாமி, சாக்‌ஷி மகராஜ், ஹெச்.ராஜா, அமித் ஷா ஆகியோரைச் சொல்லலாம்.”

ஐடியா அய்யனாரு!

“உங்கள் சிறுவயதில் நிறைய பயணிப்பீர்களா?”

பதில்: “நான் என் கிராமம் தாண்டி எங்குமே சென்றதில்லை.”

விலாவாரியான பதில்:
“அந்த ஆசைகளை எல்லாம் தேக்கிவைத்துத்தான், பிரதமரானவுடன் அட்லஸ் மேப்பில் உள்ள ஓர் இடம்கூட விடாமல் எல்லா இடங்களுக்கும் சுற்றித் திரிந்தேன். பசிபிக் கடலில் ஒன்றிரண்டு தீவுகள் மட்டுமே பாக்கி. அடுத்த ஐந்தாண்டுகளில் அதையும் முடித்துவிடுவேன்.”

“சிறுவயதில் உங்களுக்கு வங்கிக் கணக்கு இருந்ததா?”

பதில்: “இருந்தது. ஆனால், அது எனக்குத் தெரியாது. அதில் போட என்னிடம் பணமும் இல்லை.”

விலாவாரியான பதில்:
“அந்தச் சம்பவத்திலிருந்துதான் ஓர் ஐடியா பிடித்தேன். ‘நான் பிரதமரானால் எல்லாருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும்’ என்று அறிவித்தேன். அதை நம்பி ஓட்டுப் போட்டார்கள். இதோ அடுத்த தேர்தல் வரை அந்த வாக்குறுதி பயன்படுகிறது.”

“உங்களுக்கு மாம்பழம் பிடிக்குமா?”

பதில்: “எனக்கு மிகவும் பிடிக்கும்.”

விலாவாரியான பதில்: “
அதனால்தான், ‘பா.ம.க-வை எப்பாடு பட்டாவது கூட்டணிக்குக் கூட்டிட்டு வாங்க’ என்று தமிழக பி.ஜே.பி-யினரிடம் சொன்னேன்.

(பி.கு) என்ன, அந்தப் பேட்டியைக் கிண்டல் பண்றீங்களா என்பவர்களுக்கு... இதிலாவது கொஞ்சம் ஹியூமர் இருக்கு. அந்த நிஜப் பேட்டியில் ஒண்ணுமே இல்ல... போங்க பாஸ்!