
News
ஓவியங்கள்: கண்ணா

“மன்னர் ஏன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வர்றார் ?”
“மன்னர் கொடுத்த சன்மானம் புலவர்கள் வீடுகளில் மண்டிக்கிடக்கிறதாம் !”
- அம்பை தேவா

"என்ன நம்ம தலைவரோட டெபாசிட் தொகையை எதிர்த்துப் போட்டியிடுறவரே கட்டறார்!?"
"இவர் போட்டியிட்டா அவர் ஈசியா ஜெயிச்சிடலாம்னுதான்...!"
- கோவை.நா.கி.பிரசாத்

"இந்தக் கதையை படமா எடுத்தா ரிலீஸ் பண்ற அன்னிக்கே `வெற்றிகரமான 101-வது நாள்’னு விளம்பரம் பண்ணலாம் சார்!"
"அதெப்படி?"
"ஹாலிவுட்ல ஏற்கெனவே நூறு நாள் ஓடியிருக்கே!"
- அஜித்

"தன்னை யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிபெறச் செய்து தனது முப்பதாண்டு கால அரசியல் வாழ்வில் ஓர் கிங் மேக்கராய் வலம் வரும் நமது தலைவரைப் பாராட்ட...!"
- கோவை.நா.கி.பிரசாத்