
News
ஓவியங்கள்: கண்ணா

``புலவரே... தலை வலிக்குது…
கவிதை பாடுங்க…”
``ஏன் மன்னா...?”
``முள்ளை முள்ளால்தான் எடுக்கணும்...”
- தஞ்சை தாமு

"மேடையில என் பக்கத்துல கூட்டிவந்து உட்கார வைக்கிறீங்களே... யார் இவர்?"
"கூட்டத்துக்கு இவர் மட்டும்தான் வந்திருந்தாரு தலைவரே. என்ன பேசணுமோ அதை உட்கார்ந்தே சொல்லிடுங்க. அவர் கேட்டுட்டுப் போயிடுவாரு!"
- அஜித்

"நாங்கள் ஆட்சியைப் பிடித்ததும் ஓட்டு போட ஒவ்வொரு முறையும் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் சிரமத்தைப் போக்க தேர்தலையே ரத்து செய்வோம் என்பதை..."
- மாணிக்கம்

"யாரங்கே..??"
"யாருமே இல்லை மன்னா, ஜாப் செக்யூரிட்டி இல்லைன்னு எல்லாரும் பேப்பர் போட்டுப் போய்ட்டாங்க!"
- தஞ்சை சுபா