சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

"தலைவருக்கு ரொம்ப வயசாயிடுச்சுன்னு அவருக்கே தெரியுது!"

"எப்படிய்யா சொல்றே?"

"அவர் பிறந்தநாளை முன்னிட்டு நூற்றெட்டு ஜோடிகளுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைக்கறாரே!"

- அஜித்

ஜோக்ஸ் - 3

"விரல்ல அடிபட்டதுக்கு எதுக்கு டாக்டர் தலையை ஸ்கேன் பண்ணணும்னு சொல்றீங்க?"

"தம்பி ஸ்கேன் சென்டர்தான் வெச்சிருக்கான். அவனும் கொஞ்சம் பொழைச்சுப்போகட்டுமே!"

- அஜித்

ஜோக்ஸ் - 3

"உங்க வீட்டுல எல்லா காரியமும் உங்க இஷ்டப்படி நடக்குமா, உங்க மனைவி இஷ்டப்படி நடக்குமா சார்?

"ரெண்டு பேர் விருப்பமும் மாறுபட்டா என் மனைவி இஷ்டப்படியும், இல்லாட்டி என் விருப்பப்படியும் நடக்கும்...!"

- வி. ரேவதி, தஞ்சை

ஜோக்ஸ் - 3

"20 வருசமா எங்க தாத்தாவோட மனசில் இருந்த ஆசை நிறைவேறாமலேயே இறந்துபோயிட்டார்!"

"என்ன ஆசை அது!"

"உள்ளாட்சித் தேர்தல்ல ஓட்டு போடணும்ங்கிறதுதான்!"

- கி.ரவிக்குமார்