

‘‘உன் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஆன்ட்டியைப் பார்த்தா எல்லா எலிகளும் ஓடிடுமா... அது எப்படி?’’
‘‘அவங்க ‘கேட் வாக்’ பண்ணுவாங்க!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘வாழைப்பழத்தைச் சாப்பிட்டுட்டு தோலை ஏன்டா என்கிட்ட கொடுக்கிறே?’’
‘‘தோல்(ள்) கொடுப்பான் தோழன்னு சொல்வாங்களே தெரியாதா உனக்கு!’’

“உன் பேர் என்ன?”
“ராமராஜன்”
“வீட்டுல எப்படிக் கூப்பிடுவாங்க?”
“கிட்ட இருந்தா மெதுவாவும், தூரமா இருந்தா சத்தமாவும்...’’

ABக்குப் போர் அடிச்சா என்ன செய்யும்?
CD போட்டுப் பாக்கும்..
EFக்கு உடம்பு சரியில்லைனா எங்கே போகும்?
GH போகும்...
IJKLக்கு எனிமி யாரு?
MN(எமன்)
OP ரேஷனுக்குப் போனா என்ன செய்யும்?
Qல நிக்கும்.
RSக்குத் தலைவலிச்சா என்ன செய்யும்?
T குடிக்கும்
UVWXYக்குப் பறக்க ஆசை வந்தா..?
Z(ஜெட்)ல போகும்.

1 ஊர்ல 8 மணி 10 மணினு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. 1 நாள்... 8 மணியைப் பார்க்க 10 மணி, 8 மணிக்குப் போனான். 8 மணிக்குப் போன 10 மணி, 10 மணி ஆகியும் 8 மணியைப் பார்க்க முடியலை. ஏன்னா, 8 மணிதான் 10 மணியைப் பார்க்க 8 மணிக்கே போய்ட்டானே. அதனால, 10 மணியால 8 மணியை 8 மணிக்குப் பார்க்க முடியலை. 8 மணியால 10 மணிக்கு 10 மணியையும் பார்க்க முடியலை. 8 மணியும் பாவம்... 10 மணியும் பாவம். இதைப் படிக்கிற நீங்களும் பாவமோ பாவம்!