
டக்வொர்த்: இப்போ தெரியுதா, மும்பைதான் கெத்து!
லூயிஸ்: காரைக்குடி பக்கத்துல இருக்குற கானாடுகாத்தான்தான் கெத்து.
டக்வொர்த்: கானாடுகாத்தானா?
லூயிஸ்: ஆமா, அதுதான் என் ஊரு!
டக்வொர்த்: அப்போ, சி.எஸ்.கே-டானு சொல்லிட்டு இருந்ததெல்லாம்...
லூயிஸ்: சென்னைக்கும் எனக்கும் என்ன ப்ரோ சம்பந்தம்...
டக்வொர்த்: இதெல்லாம் அநியாயம் ப்ரோ...
லூயிஸ்: இது இல்ல அநியாயம், இலுமினாட்டிகள் செய்றதுதான் அநியாயம்.
டக்வொர்த்: அவனுங்க எதுக்கு வந்தானுங்க.
லூயிஸ்: எல்லாமே திட்டமிட்ட சதி. வாட்சன் காயம்பட்ட காலோடு ஹாட்ரிக் சிக்ஸ் அடிச்சது எதுக்கு?
டக்வொர்த்: எதுக்கு?
லூயிஸ்: 666... இலுமினாட்டிகளின் குறியீடு!
டக்வொர்த்: ஆத்தி... இதெல்லாம் ஓவர் ப்ரோ!
லூயிஸ்: பார்த்தீங்களா, ஓவருக்கு 6 பந்துதான்.
டக்வொர்த்: கம்முன்னு இருங்க ப்ரோ காண்டாகுது
லூயிஸ்: காண்டாகுதுல, அப்போ நீங்களும் எங்களை கலாய்க்காம கம்முனு இருங்க!
ப.சூரியராஜ்