Published:Updated:

ஃபிராடு ஃபில்ட்டர்... பாலிடிக்ஸ் டிடெக்டர்... இதுக்கெல்லாம் புது டெக்னாலஜி கண்டுபிடிக்கணும்!

வாட்ஸ் அப்ல வர்றதுல எது பிராடு நியூஸ், எது ஒரிஜினல்னே தெரிய மாட்டிங்குது... அதிலும் இந்த மருத்துவக்குறிப்ப படிச்சு படிச்சு கண்டதையும் வதக்கி, வறுத்து, கசாயம் வச்சுக் குடிச்சுக் குடிச்சே வயிறு ஜாம் ஆகிக்கிடக்குது! அதனால எந்த பிராடு நியூசும் வராதபடி அதை ஃபில்டர் பண்றாப்ல பிராடு ஃபில்டர் டெக்னாலஜி கண்டிப்பா வேணும் பாஸ்! தொல்லை தாங்கல!

ஃபிராடு ஃபில்ட்டர்... பாலிடிக்ஸ் டிடெக்டர்... இதுக்கெல்லாம் புது டெக்னாலஜி கண்டுபிடிக்கணும்!
ஃபிராடு ஃபில்ட்டர்... பாலிடிக்ஸ் டிடெக்டர்... இதுக்கெல்லாம் புது டெக்னாலஜி கண்டுபிடிக்கணும்!

நாம டெக்னாலஜில எவ்வளவோ வளர்ந்துட்டோம்னு சொல்லிக்கிட்டாலும், சில நேரம் இதுக்கெல்லாம் ஏதாவது டெக்னாலஜி இருந்தால் நல்லாருக்குமேன்னு தோணும். அதையெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதுறதுக்கு பதிலா இங்க எழுதினாலாவது நம்மூரு விஞ்ஞானிகள் ஏதாவது கண்டுபிடிக்கமாட்டாங்களான்னு ஒரு நப்பாசைதான்!

பெளலிங் ரன்னர்: கிரிக்கெட் பெளலர்களில் ஃபாஸ்ட் பெளலர்கள்தான் பரிதாபத்திற்குரியவர்கள்... ஸ்பின் பெளலர் ரெண்டு ஸ்டெப் நடந்து வந்து பெளலிங் போட்டுடுவார். ஆனால், நம்ம ஃபாஸ்ட் பெளலர்கள் ஒவ்வொரு பால் போடுறதுக்கும் அரை கிலோமீட்டர் ஓடி வரணும். இதுல திடீர்னு பேட்ஸ்மேன் வேற சட்டுன்னு ஸ்டம்ப்பை விட்டு விலகி கடுப்பேத்துவார். அதனால, ஃபாஸ்ட் பெளலர்கள் முன்னபின்ன ஓடாதபடி, பேக்கேஜிங் ஃபேக்டரியில இருக்குற ரன்னர் பெல்ட் மாதிரி பெளலருக்கும் ஒரு ரன்னிங் பெல்ட் வேணும்!

ஃபிராடு ஃபில்ட்டர்: வாட்ஸ் அப்ல வர்றதுல எது ஃபிராடு நியூஸ், எது ஒரிஜினல்னே தெரிய மாட்டிங்குது... அதிலும் இந்த மருத்துவக் குறிப்ப படிச்சு படிச்சு கண்டதையும் வதக்கி, வறுத்து, கசாயம் வச்சுக் குடிச்சுக் குடிச்சே வயிறு ஜாம் ஆகிக்கிடக்குது. அதனால எந்த ஃபிராடு நியூசும் வராதபடி அதை ஃபில்ட்டர் பண்றாப்ல பிராடு ஃபில்டர் புரொகிராமிங் கண்டிப்பா வேணும் பாஸ்! தொல்லை தாங்கல!

அட்மிஷன் ரோபோ: பெரிய பெரிய ஸ்கூல்களில் ஸ்மார்ட் கிளாஸ்லாம் வந்தாலும், அட்மிஷன் அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்குறதுக்காக பெற்றோரை விடியற்காலையிலிருந்தே நிற்க விடுறத மட்டும் மாத்தவே மாட்டிங்கிறாங்க. அதுல என்ன பெருமையோ அவங்களுக்கு! ஆன்லைன்ல தரலாமேன்னு கேட்டால் வேற ஸ்கூல் பார்த்து போகச்சொல்றாங்க. எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல, இந்த அப்ளிகேஷன் க்யூவுல நிக்கிறதுக்கு மட்டும் வாடகை ரோபோ ரெடி பண்ணுங்க பாஸ்! ஸ்கூல் அட்மிஷன் டைம்ல பெற்றோருக்குப் பதிலா ரோபோக்களை நிக்க வச்சிடலாம்.

மியூட் அலர்ட்: எந்தச் செய்திச் சேனலை எடுத்துக்கிட்டாலும் காட்டுக்கத்தலா அரசியல் விவாதம்தான் ஓடிட்டு இருக்குது. அவங்க பேசுறதைப் பார்த்தால் நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும். அதுக்காக விவாதத்தைப் பார்க்காமலும் இருக்கமுடியல. அதனால டிவி விவாதத்துல யாராவது ஓவர் சவுண்டா பேசினால் ஆட்டோமேட்டிக்கா அவங்க பேசுறது மட்டும் மியூட் ஆகுற மாதிரி டிவி தயாரிப்பு கண்டிப்பா வரணும்... அப்படியே டிவி சீரியலில் வில்லிங்க சவுண்டா சவால் விடுறப்பவும் மியூட் அவசியம் பாஸ்.

undo/redo பொருள்கள்: குழந்தைங்க இருக்குற வீட்டுல அம்மாக்கள் நிலைமை ரொம்ப கஷ்டம்! பொம்மைகளை விளையாட எடுத்தால் அப்படியே பரப்பிப் போட்டுட்டு அடுத்து பெயின்ட் பண்ண கிளம்பிடுவாங்க... வாட்டர் கலர் பாட்டில் எல்லாத்தையும் பரப்பிடுவாங்க... அடுத்து துணி அலமாரிக்கும் அதே நிலைமைதான்... கம்ப்யூட்டர்ல `undo/redo' ஆப்சன் இருக்கிற மாதிரி குழந்தைங்க எதையாவது எடுத்துப் பரப்பினால் அதுக்கும் `undo/redo' ஆப்சன் இருக்கணும்... அப்போதான் அம்மாக்களுக்கு நிம்மதி!

எலாஸ்டிக் ரோடு: பீக் அவர்ஸ்ல ஹெவி டிராபிக்ல மாட்டிட்டு ஒவ்வொருத்தரும் படுற அவஸ்தை ரொம்ப மோசம் பாஸ்... எந்தச் சந்துக்குள்ள போனாலும் அப்போ டிராபிக்காதான் இருக்கும். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாதுங்கற சிச்சுவேஷன்தான். அந்த மாதிரி நேரத்துல மட்டும் நம்ம ரோடே எலாஸ்டிக் மாதிரி அகலமாகணும்... பீக் அவர்ஸ் முடிஞ்சதும் சுருங்கிக்கணும்! ரப்பர்ல ரோடு போடுவீங்களோ என்னவோ தெரியாது, ஆனால், இது கண்டிப்பா வேணும்... தினமும் லேட்டா போறதால ஆபீஸ்லயும் கெட்ட பேரு, வீட்டுலயும் கெட்ட பேரு!

தும்மல் சைலன்ஸர்: பலருக்கும் டஸ்ட் அலர்ஜி இருக்குது பாஸ்... கொஞ்சம் டஸ்ட் பட்டாலே மூக்கு ஒழுகும். தும்மல் வந்துக்கிட்டே இருக்கும். ஆபீஸ்லயோ, பொது இடத்துலயோ பெரிய தொல்லையா இருக்கும். ஒவ்வொரு தடவையும் சத்தம் வராமல் கர்ச்சீப்பை வைத்து பொத்திக்கிட்டே இருக்க முடியாது. அதனால் இதுக்கு நல்ல தீர்வு, தும்மல் வந்தால் சத்தமே கேட்காதபடி தும்மல் சைலன்ஸர் ஒண்ணு வேணும். வாய்க்குள்ளயே சின்னதா தேவைப்படுறப்ப மட்டும் ஃபிக்ஸ் பண்ணிக்கற மாதிரி இருக்கணும். வேண்டாம்னா கழற்றிக்கலாம். தும்மல் சத்தத்தால யாருக்கும் தொந்தரவே இருக்காது. அப்டியே மூக்கு ஒழுகுறத நிறுத்த, மூக்குக்குள்ளயே தடவுற மாதிரி டெம்பொரரி லீக்கேஜ் சிமென்ட் இருந்தால் நல்லது!

பாலிடிக்ஸ் டிடெக்டர்: இப்ப தேர்தல் காலம்... ஃபேஸ்புக்ல யார்கிட்டயும் நம்பி பாலிடிக்ஸ் பேச முடியமாட்டிங்குது. தி.மு.கன்னு நம்பி பேசுனால் அவரு அ.தி.மு.கவா இருக்காரு... பா.ஜ.கன்னு நம்பி பேசுனா அவரு காங்கிரஸா இருக்காரு... அதனால பல பேர் அன்ஃப்ரெண்ட் பண்ணினதுதான் மிச்சம்! இந்தச் சிக்கலே இல்லாம ஃபேஸ்புக்ல இருக்குறதுக்கு, யார் யார் என்ன கட்சின்னு ப்ரொபைல்லயே தெரியிற மாதிரி டேட்டா கண்டிப்பா வேணும் பாஸ்!