“போருக்குப் போகலாமா என்றதும்... சரி என்றும் சொல்லாமல், வேண்டாம் என்றும் சொல்லாமல் சில வீரர்கள் அமர்ந்துள்ளார்களே ?”
“அவர்கள் நோட்டா வீரர்களாம் மன்னா!”


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- வீ.விஷ்ணுகுமார்
``இந்தப் போருக்கு என்ன பெயர் வைத்துள்ளீர் தளபதி?’’
``டைட்டில் இன்னும் செட் ஆகவில்லை மன்னா... இப்போதைக்கு `மன்னர் 42' என்று நீங்கள் புறமுதுகு காட்டிய எண்ணிக்கையை வைத்துள்ளேன்!’’

- வீ.விஷ்ணுகுமார்
“என்ன டாக்டர்... ஸ்கூல் பில் தர்றீங்க..?”
“ஆபரேசன் பில்லை, எல்கேஜி படிக்கிற என் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸா கட்டிருங்க..!”

- சி.சாமிநாதன்
“நீங்க பேசுங்க தலைவரே...”
“இருய்யா, காக்கா கத்துது... யாராச்சும் வருவாங்க..!”

- சி.சாமிநாதன்
- ஓவியங்கள்: கண்ணா