
ஓ.பி.எஸ் - எடப்பாடி இருவரும் இணைந்து ஒரு படம் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
மேல இருக்குறவன் பார்த்துக்குவான்!
பி.சங்கீதா, திருச்சி 12
ஒரு இட்லி ஒரு கோடி! (ஷங்கர் இயக்கத்தில்)
@kathir_twits
பழனியும் பன்னீரும்
@balasubramni1
ஜாடிக்கு ஏத்த #மோடி.
@sureshforuin
எங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு
@mohanramko
ரெண்டு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை
@mohanramko
அச்சம் என்பது கடமையடா
@sudhansts
நாம் இருவர்
நமக்கு மேலே ஒருவர்
@pachaiperumal23
இலை பாயுதே!
VC Krishnarathnam
குனிவே துணை
PM AnandhaBabu
அடிமைப் படை
Viyan Pradheep
எட்டுவழிச்சாலையும் எட்டணா டீ கடையும்!
Sivag Ganesh


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மோடி எங்கள் டாடி
இயக்கம்: ராஜேந்திர பாலாஜி
சாலமன் பழனிக்குமார்
ஆடாம ஜெயிச்சோமடா!
Aarthi Shekar
லேடி முதல் டாடி வரை
Viyan Pradheep
சேக்கிழாரின் தர்மயுத்தம்
சத்யநாராயணன்
அத்தனைக்கும் ஆசைப்படு
Viyan Pradheep
‘காவி’யத் தலைவர்கள்
Mohamed Yusuf
அமித்ஷா குடும்பத்தார்
சாலமன் பழனிக்குமார்
வடக்கே போகும் ரயில்
Sribalaji Perumal
நாங்கள் மகான்கள் அல்ல
Priya Perumal
90ஸ் கிட்ஸ் அலப்பறைகளில் உங்களால் தாங்கவே முடியாதது எது?
பஸ், டிரெயின்களில் சீஸன் டிக்கெட் எடுத்து காலேஜுக்குப் போனதெல்லாம் மறந்துபோய், வேலை கிடைத்தவுடன், எங்கே போனாலும் கால் டாக்ஸி, ஃப்ளைட்தான் என்று அலப்பறை விடுவது.
என்.சாந்தினி, மதுரை
சிங்கிளா இருக்கிறதே கெத்து-ங்கற மாதிரி பண்றது.
எம்.காளியப்பன், கோவை.
பெரிய சச்சின் டெண்டுல்கர்னு நெனைப்புல தினமும் ‘பேட் எடுத்துக்கிட்டு வாடா... கிரிக்கெட் வெளையாடலாம்’னு கூப்டறது.
மு.நா.பாலாஜி, கர்னாடகா
90-ஸ் கிட்ஸ் என்பதே அலப்பறைதான் பாஸ். இதில் தனியா வேறு அலப்பறை இருக்கா?
@RahimGazzali
ரஜினி,கமல் படத்தை FDFS பார்த்ததை பெருமையா சொல்லுவாங்க
@manipmp
ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்து அதை அடுத்த ஞாயிறு வரைக்கும் விமர்சனம் செய்றது.
@imayavan340
என்னதான் ஸ்மார்ட் போனெல்லாம் வந்தாலும் முதல்ல என்கிட்ட ஒரு கறுப்பு கலர் நோக்கியா டபுள் ஒன் டபுள் ஜீரோ பட்டன் போன் இருந்துச்சு பாரு என ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு பீல் பண்ணுவது.
@selvachidambara
வாழ்க்கையில ஒரே ஒரு இங்கிலீஷ் படம் பார்த்துட்டு, எப்பவும் அந்தப் படத்தோட பெருமை மட்டும் பேசுறது...
@shivaas_twitz
நாங்க எல்லாம் அந்தக் காலத்துல அப்படின்னு ஆரம்பிப்பாங்க..... என்னமோ கிமு-ல பொறந்த மாதிரி.
@SGNatarajan
இப்போ போடுற மாதிரி பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம்ல மார்க் அள்ளி அள்ளிப் போடல. ஆனாலும் நான்தான் 471. ஸ்கூல் ஃபர்ஸ்ட்.
@amuduarattai
அண்ணான்னு கூப்பிட வேண்டியவங்களை, அங்கிள்னு கூப்பிடுவது. இவரை, அங்கிள்னு கூப்பிட வேண்டியவங்களை அண்ணான்னு கூப்பிடச் சொல்வது.
@amuduarattai
கட்டிப்பிடிச்சா குழந்தை பிறந்துரும்னு சொன்னாங்க பாருங்க... இன்னும் அவங்களதான் தேடிட்டிருக்கேன்.
@muralithiya
பிளாக் & வொயிட் டிவி, கலர் டிவி, எல்சிடி டிவி, எல்இடி டிவி, 3D டிவி எல்லாத்தையும் பார்த்த ஒரே தலைமுறை நாங்கதான்னு சொல்றது.
உதயகுமார் க. இரா.
க்ரீம் பிஸ்கட்டில் உள்ள க்ரீமை மட்டும் தின்றுவிட்டு வைப்பது. பால் குடித்துவிட்டு நுரைமீசை நாஸ்டால்ஜியா எனப் புகைப்படத்துடன் முகநூலில் பதிவு போடுவது. காபியில் பிஸ்கட் தொட்டுச் சாப்பிடும் பாவனையில் கரைத்துவிடுவது. மார்வெல், டி.சி காமிக்ஸ் ரசிகர்கள் பேசும்போது இடையில் சக்திமான் பற்றிப் பேசுவது!
Bannari Shankar
இன்னமும் எனக்கு ஒரு தோழி இல்லையே என தினம் தினம் புலம்புவது!
Viyan Pradheep
96 படம் பாத்துட்டுத் தன்னை ராம்-னு நினைச்சுகிட்டு ஊர் ஊரா லூசாட்டம் சுத்துறது...
Rajendran Nachiyappan
இப்போதைய தமிழ் சினிமாக்களில் ஏதாவது ஒரு விஷயத்தை, ‘நிறுத்தணும்... நிறுத்தியே ஆகணும்’னு சொன்னா, எதைச் சொல்லுவீங்க?
காமெடி என்கிற பெயரில் ரெட்டை அர்த்த ஆபாச வசனங்கள்!
என்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை.
கதை இல்லாம, இன்னொரு கதையைத் திருடிப் படம் எடுக்கிறதை நிறுத்தணும்.
அவ்வை கே.சஞ்சீவிபாரதி, ஈரோடு
பாடகர் கதாபாத்திரங்கள் தவிர்த்து, மற்ற கதாபாத்திரங்கள் வாயசைத்துப் பாடுவதைத் தவிர்க்கலாம்...
mekalapugazh
பேய்கள் காமெடி பண்றத.
@ashoker
அநியாயம் நடக்கும்போது ‘இதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான்டா அப்படி'ன்னு ஒரு தாத்தாவோ ஒரு பாட்டியோ சொல்லும். அதை நிறுத்தித்தொலைங்க!
@billumohan83
சாதி சார்ந்த படங்கள் எடுப்பதை நிறுத்தலாம்.
@chandra_kalaS


இடைவேளை விடுறத நிறுத்தச்சொல்லுங்க பாஸ். பாப்கார்ன் செலவு கட்டுப்படியாவல...
@bommaiya
ரிலீஸுக்கு அப்புறம் முடி வெட்டக்கூடக் காசில்லாத நிலைமைல புரொடியூசர் இருக்கும் போது, கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டி கொண்டாடுறத ஹீரோக்கள் உடனே நிறுத்தணும்.
@JawaharGanesan
பொறுக்கி ஹீரோ... பணக்கார ஹீரோயின்...போதுண்டா யப்பா சாமி.
@p_g_arunkumar
பாகம்1, பாகம்2, பாகம்3 எனச் சென்று கொண்டிருப்பதை நிறுத்தணும்.
@imayavan340
`அவன் யாரு தெரியுமா... அவன் அடிச்சா எப்டி வலிக்கும் தெரியுமா’ன்னு வில்லன் க்ரூப்லயே ஒருத்தன வெச்சு பில்டப் பண்றத நிறுத்தணும்...
Selva Raj
சிரிக்கிற பேய், அழுகிற பேய், பழிவாங்கும் பேய், காமெடி பேய், கூடு விட்டுக் கூடு பாயும் பேய், காட்டேரிப் பேய்...... டேய்... அடங்குங்கடா...பேய்க்கே போரடிக்கப்போகுது!
Sushma
ராகவா லாரன்ஸ், பேய் பயம்ன்ற பெயரில், ஒவ்வொரு படத்திலும், பெண்கள் இடுப்புல ஏறி உட்காருவதை நிறுத்தணும்!
VC Krishnarathnam
ஹீரோவுக்கும் வில்லனுக்கும் மோதல்னா ஃபாரின்ல போயா ஃபைட் பண்றாங்க? ஆனா ஹீரோயினோட காதல்னா மட்டும் உடனே ஃபாரின்ல சாங்...
Rajendran Nachiyappan
மிக அவசரமா தடை பண்ண வேண்டிய செட் பிராப்பர்ட்டீஸ் : பெரிய காபி கோப்பை - 2, என்பீல்ட் பைக், மழை. போதும்யா... விட்ருங்கய்யா....
Sasi Varathan
இத நிறுத்தணும் அத நிறுத்தணும்னு எல்லாரும் கேமரா முன்னாடி பேசுவாங்களே அத நிறுத்தணும்...
ViirSri Gana ThanMuthu
குறியீடுன்னு சொல்லி எதையாச்சும் காட்டி கும்மி அடிக்கிற காட்சிகளை!
தமிழ் தனா
யூடியூப் வீடியோக்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?
பரிசோதித்துப் பார்க்காத மருத்துவ டிப்ஸ்கள்.
அவ்வை கே.சஞ்சீவிபாரதி, ஈரோடு
போர் வரும்வரை பொறுமையாய் இருப்பது மாதிரி... skip ad வரும்வரை காத்திருக்கணும்.
@manipmp
ஒரு பேச்சு/பேட்டியைப் பார்க்கலாமென நினைத்துப் பார்க்கும்போது முதல் இரண்டு மூன்று நிமிடங்கள் பின்னால் வரப்போவதை ஒரு சிறு தொகுப்பாகப் போடுவது கடுப்பேற்றுகிறது. இசையில்லாமலேயே பார்க்கக்கூடிய சிறு வீடியோக்களில் வரும் இசைக்கோவை பல நேரங்களில் கடுப்பே.
@mekalapugazh

டைட்டில்! இந்த நடிகை செய்த காரியத்தைப் பாருங்கள். இவ்வளவு சிம்பிளான ஆளா அந்த நடிகர்? போட்டோல ரெண்டு மூணு இடத்துல circle போட்டிருக்கும். உள்ள போனா, செருப்ப கழற்றி விட்டுட்டு அந்த நடிகை கோயிலுக்குள்ள போயிருக்கும். அந்த நடிகர் தன் கோட்ட அவரே கழற்றி டேபிள்ல வெச்சிருப்பாரு!
@podi_mass
நடிகர் நடிகைகளின் ஜாதி பற்றி வரிசைப்படுத்துவதும், சின்ன வீடு யார் யாரென்று பட்டியலிடுவதும்.
பொ.மாரிமுத்துக்குமார், திருச்சி
Cooking or beauty tips குடுக்கும்போது முகம் தெரியாத வீடியோன்னா nail polished விரல்களால் பரதநாட்டியம் ஆடுவது...
@gmuruganandi
சற்றுமுன் நடந்த பரபரப்புன்னு போட்டிருக்கும்... பார்த்தா, அதை போஸ்ட் பண்ணி ரெண்டு வருசம் ஆகியிருக்கும்.
@SENTHIL_WIN
ஒரு நிமிசத்துல சொல்ல வேண்டிய விசயத்த, ஜவ்வா இழுத்து, பத்து நிமிசமாக்க வேண்டியது...
Pugal Latha
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் - ஒரே வரியில் சுவாரஸ்யமாக நச்சுனு சொல்லுங்கள்!
கை விடப்பட்ட கை!
தஞ்சை தாமு, தஞ்சாவூர்
எஞ்சிய இந்தியாவின் தேர்வு, ‘ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்தியா எஞ்சி இருக்குமா’ எனச் சிந்திக்க வைக்கிறது.
எஸ்.நடராஜன், சென்னை 49
ஓபிஸ்&இபிஎஸ் டு ஸ்டாலின் : நீ பத்தாவது பெயில் அண்ணே, நான் எட்டாவது பாஸ் அண்ணே...
@priyam_vasanth
தமிழகத்தில் தாமரை மறந்தே தீரும்
-FB: Mohamed Yusuf
இந்தியாவின் டிரெண்டிங் #WelcomeModi
தமிழ்நாட்டின் டிரெண்டிங் #GobackModi
@kumarfaculty
வடக்கே மலர்ந்தது தெற்கே உதிர்ந்தது.
@chithradevi_91

கஜா புயலைக் கண்டுக்காத மோடி. மோடி புயலைக் கண்டுக்காத தமிழ்நாடு.
@amuduarattai
நாட்டுக்குள்ளே நல்ல நாடு தமிழ்நாடு
@uma_Maheshwari1
இந்தியா வேணா உங்க கன்ட்ரோல்ல இருக்கலாம்.... ஆனா தமிழ்நாடு எப்பவுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல்..!
@mohamedassen139
சங்கு... முழங்கியது வடக்கே.
ஊதியது தெற்கே.
@Senthil74107093
காங்கிரஸின் மீசை திமுக... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல.
-FB: Mohamed Yusuf
மோடி அலை ஆழிப்பேரலையாக, ராகுல் அலை வெறும் அலப்பறையானது.
@absivam
தாமரை மலரும் அளவுக்குத் தமிழ்மண் இன்னும் சேறு ஆகவில்லை...
-FB: ViirSri Gana ThanMuthu
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

• ? இளையராஜா இசை - ஒரே வரியில் கவிதையாகச் சொல்லுங்கள்...
• ? ஒருவேளை ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டால், காங்கிரஸ் தலைவர் ஆவதற்குப் பொருத்தமானவர் யார்? ஏன்?
(அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். லாஜிக் இருக்கணும்!)
• ? ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு. எந்த விஷயம் உங்கள் குழந்தைகளைவிட உங்களைப் பயமுறுத்துகிறது?
• ? தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் வடிவேலுவுக்குப் புதுசா பட்டம் கொடுங்களேன் (வைகைப்புயல், கறுப்பு நாகேஷ் தவிர)
• ? ‘யப்பா சாமி நான் கேட்டதிலேயே அண்டப்புளுகு ஆகாசப்புளுகு இதான்யா’-னு சொல்ற அளவு நீங்க கேட்ட பெரிய பொய் எது?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.