பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...

வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...

வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...

வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...

தமிழக பா.ஜ.க-வுக்கு எந்த நடிகரைத் தலைவராக நியமித்தால் தாமரை மலரும்... ஏன்?

* ‘பவர்’ ஸ்டாரை நியமிக்கலாம். அப்பவாவது தாமரைக்குத் தமிழகத்தில் ‘பவர்’ வருகிறதா என்று பார்க்கலாம். - பிரதீபா ஈஸ்வரன், சேலம்

* நிச்சயமா ரஜினிதான்! காலில் கயிறு கட்டிக் காரை நிறுத்துவது, வாயால் ஊதி வில்லன்களை வீழ்த்துவது, கத்தியைக் கையைக்காட்டித் தடுப்பது, இதுபோன்ற ஜீபூம்பா வேலைகளை ரஜினியால்தான் செய்ய முடியும்! இதைத் தவிர தாமரை மலர வேறு வழியில்லை! -  தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்

* இப்போதைக்கு யோகி பாபு... அவசர யுகத்தில் நகைச்சுவைதானே எல்லோரையும் மலரச் செய்கிறது. - பெ.பச்சையப்பன், கம்பம்

* நடிகர் வினீத். அவருதான் ‘ஆவாரம்பூ’ பாடத்தில ‘தாமர’, ‘தாமர’ன்னு உயிரை விடுவாரு. -  @manipmp

* இன்றைய நிலைமையில் வடிவேலுவை நியமித்தால் மட்டுமே மலரும். ஏனெனில், இது நேசமணி சர்க்கார். - @RedManoRed

* சிவகுமாரைப் போடலாம்... செல்போனை எல்லாம் உடைச்சிட்டார்னா பா.ஜ.க-வைக் கலாய்ச்சு யாரும் மீம்ஸ் போட முடியாது.தாமரை சுலபமா மலர்ந்துடும். - @parveenyunus

* கார்த்திக். அவர்தான் ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ன்னு ‘அலைகள் ஓய்வதில்லை’-ல பாடியிருக்கிறார். -  @drkvm

வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...

* சி.ஆர்.சரஸ்வதி... சரஸ்வதி என்பதால் தாமரை மலரக்கூடும்! - @maathorubhagan

* பாடலாசிரியர் தாமரையை வேணும்னா தலைவராக்க ட்ரை பண்ணுனா, பெயரளவுலேயாவது மலரும்.
-  @Rag_ivan

* நடிகர் விக்னேஷ்... தாமர பூவுக்கும்(பா.ஜ.க) தண்ணிக்கும் (அ.தி.மு.க டாஸ்மாக் தண்ணி) என்னைக்கும் சண்டையே வந்ததில்ல... -  கோகுல்ராம் சதாசிவம்

* சந்தான பாரதி. ‘அமித்ஷாவே தமிழகத்தின் தலைவரா?’ன்னு நெனச்சு பா.ஜ.க தொண்டர்கள் கட்சிப்பணி ஆற்றுவர். - R Sudar Vannan

உலகக்கோப்பைப் போட்டியில் ஆடும் இந்தியாவை உற்சாகப்படுத்த ஒரு கவுண்டமணி வசனம் டெடிகேட் பண்ணுங்க!

* அய்யோ... இப்போ நா எதையாவது வாங்கணுமே... இந்த வேர்ல்டு கப்பு என்ன விலைன்னு கேளு...-  மலர் சூர்யா, புதுச்சேரி

கோலி: ‘`வேர்ல்டு கப்”

கவுண்டமணி: “வாங்கிட்டு வந்தியளா... எங்க அது?”

கோலி: “இதோ... இதான்க அது...”

கவுண்டமணி: “இது 2011-ல் தோனி வாங்கினது நீங்க வாங்கினது எங்க?”

கோலி: “அதாங்க இது..!”

கவுண்டமணி: “டேய்... என்ன கொலைகாரனா ஆக்காதேடா... இந்த வருஷம் நீ வாங்குற! அட்றா... அட்றா..!” - வே.விநாயகமூர்த்தி, சென்னை 115

  * விராட்: ஏதோ வேர்ல்டு கப்பாம் ரெண்டு தடவைக்கு மேல ஒரே டீம்தா அடிச்சிருக்காம். இப்ப நம்மல அடிக்கச் சொல்றானுங்க... அட இதுகூட பரவாலைங்க... ஐ.பி.எல் கப்லாம் அடிக்கச் சொல்றாங்க...
 - @Ramesh46025635

வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...

* நான் பனங்காட்டு நரி. ஓநாய்களின் சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்... -  @johnwick194

* இந்த கிரிக்கெட் விளையாடுறாங்களே அவங்க தொல்லை தாங்க முடியலே. மட்டை வைச்சிருக்கறவங்க எல்லாம் World cup-க்குப் போகணுமாம். -  @azam_twitz

* பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்னு சொல்லுங்க ப்ளேயர்ஸ். -  @nanbanvela

* பியூட்டிபுல் கேம்... இந்த கேமுக்கு பேரு என்னங்க...! - @Krish_Tweetzz

* இந்தத் தடவை வேர்ல்டுகப்பை இந்தியா வச்சிருக்கப் போகுதுடோய், அதை நான் பாத்துட்டன்டோய்... இதை யாருகிட்டயாச்சும் சொல்லலைன்னா என் தலை வெடிச்சிரும்டோய்...
 - @sengol3

* இந்தியாவுல.. ஏன் இந்த world-லேயே தோனி இருக்குற கிரிக்கெட் டீம் நம்ம டீம் தான்! - @Thuruvasan3

* 9-ஆம் தேதி லண்டன்ல இருக்கேன்.

13-ஆம் தேதி நாட்டிங்கம்ல இருக்கேன்.

16-ஆம் தேதி எங்க இருக்கேனே தெரியலயே,
ஆங்... பாகிஸ்தான்ல இருக்கேன்!

உங்களுக்காக பாகிஸ்தான் புரொகிராம கேன்சல் பண்ணிக்கிறேன்.

மான்செஸ்டர்-ங்கிறீங்களே... மான் ஏதும் தொரத்தாதில்ல..? - @IamJeevagan

* இதான் நம்ம டீமில ஒரு ஆல் இன்ஆல் ஆல்ரவுண்டர் அழகுராஜா வேணும்ங்கிறது. இதெல்லாம் நீ போய் இங்கிலாந்துல போய் சொல்லணும்டா. அண்ணன் அழகுராஜா 360டிகிரியில் அடிப்பாரு, ஓடுவாரு, பாயுவாருன்னு... அப்பத்தான் எதிரி டீம் பயப்படுவான். கப்பு நமக்குதான்டா கோமுட்டித் தலையா... - Karthikai Rajan

* அடடடடா இந்த எதிரணித் தொல்லை தாங்க முடியலையே, மேட்சுக்கு 60 ரன், 80 ரன் எடுக்கிற டீமெல்லாம் கப்பு எங்களுக்குத்தான்னு வாய் கூசாம சொல்றானுங்களே...பிளடி பெக்கர்ஸ்.
- Prem Prathap

* ஐயோ நான் அவுட்டில்ல அம்பயரு கோபாலு... அது நோபாலுடா மங்கூஸ் மண்டையா... ட்ராபிக்போலீஸாடா நீ ஆய் ஊய்னா கையத் தூக்குற. டேய் மூணாவது நாட்டாமைய கேள்ரா ஐயோ நான் அவுட்டில்ல அவுட்டில்ல... இத பாருங்க ஜனங்கோஸ்... - Sami Bala

ஒரே ஓர் அ.தி.மு.க எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வார் என்று எதிர்பார்க்கலாம்?

* அவருடைய குடும்பப்பெருமையைக் காப்பாற்றுவார்... வேறென்ன, பணிவுதான்.இவரது பணிவைப்பார்த்து வடஇந்தியாவே தமிழர்களைப் பற்றிய தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.
- @mekalapugazh

* டீக்கடைக்காரர்களை அரசியலில் ஈடுபட விடாமல் பார்த்துக்கொள்வார். - @Gnanakuthu

* தமிழ்நாட்டுக்கு என்ன செய்வாருன்னு தெரியலை... ஆனா, அந்தக் கோயில்ல கல்வெட்டு வெச்ச ஆளுக்கு ஒரு கோயிலே கட்டுவார்... -  @shivaas_twitz

* கான்ட்ராக்டர் நேசமணிக்கு நியாயம் கிடைக்கப் போராடுவார்! - @ezhilandentist

* ஆக்ராவுல போய் உட்கார்ந்துட்டு தியானம் பண்ணாம இருந்தால் போதும்! - @Aruns212

* OPR: இது வரைக்கும் எங்க அப்பா என்ன செஞ்சிருக்காரு?

மக்கள்: ஒண்ணுமில்லை!

OPR : அதேதான் இனி நானும் செய்யப்போறேன். - @saravananucfc

* அவர் எதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. - Mano Red

* கொஞ்சம் மாத்தி யோசிப்போமே. புது எம்பிங்கறதுனால ஏதாவது செய்ய முயற்சி செய்வார் என்றுதான் நம்பித் தொலையுங்களேன். சில சமயம் எதிர்பாராமல்கூட நல்லது நடக்கலாம். நம்பிக்கைதான் வாழ்க்கை. ஏன்னா இதில் அப்பா மகன் இருவரது வாழ்க்கையும் இணைந்துள்ளது. அனைவரும் கூட்டுப் பிரார்த்தனைபோல ஒன்றாக நல்லதை நினைப்போம். நிச்சயம் நல்லது நடக்கட்டும். அப்படியே ஆகக் கடவது. - Shanmugasundaram-Tss Thirumalai Kozhundhu

நாடாளுமன்றத்தில் ‘தென்மேற்குப் பருவக் காற்று தேனிப் பக்கம் வீசும் போது சாரல்’ என்ற எம்ஜிஆரின் தத்துவப் பாடலைப் பாடுவார் - Viyan Pradheep

* டெல்லியில எங்கேயாவது அடுத்த பிரதமர்னு கல்வெட்டு வைக்காம இருந்தா சரி! - Velanganni Velu

சில சினிமா விடுகதைகள் ப்ளீஸ்!

* சினிமா ஒரு தொடர்கதை. அரசியல் ஒரு விடுகதை. அவர் யார்?

- ரஜினிகாந்த்

  அ.யாழினி பர்வதம், சென்னை

* “கழுகுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?”

 - இரண்டுமே ரஜினி நடித்த படம்தான். - @manipmp

* குரு சுட்ட வடை சரியாக விற்கல. அதே மாவைக் கொண்டு சிஷ்யன் சுட்ட வடை நல்லா வித்துச்சு.
- வேதம் புதிது, இது நம்ம ஆளு.
 - @amuduarattai

* கார்த்தியும் விக்ரமும் சேர்ந்து நடித்தா அந்தப் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?

 - மெட்ராஸ் ஐ

  @h_umarfarook

* ரூல்ஸ் படியே நடப்பான். ஜென்டில்மேன் அல்ல. உருகி உருகிக் காதலிப்பான். காதலன் அல்ல. அநியாயங்களைத் தட்டிக் கேட்பான். இந்தியன் அல்ல. மாறி மாறி நடிப்பான். சிவாஜியும் அல்ல... அவன் யார்?

- அந்நியன்

 - @IamJeevagan

* `ரெண்டுல ஒண்ணு இல்லேனாலும் வெளியே போக மாட்டீங்க... அது என்ன..?'

- ஒத்த செருப்பு

  Manicka Vasagam

* கமல் இந்தித் திணிப்பு கூடாதுன்னு சொல்லிட்டாரு... இதே கருத்தை மய்யமா வெச்சு, படமெடுத்தால் என்ன பேரு வைக்கலாம்?

- ‘இந்தி'யேன்?

  VC Krishnarathnam

* முதல்வார்த்தை சேலம் to சென்னை பசுமைவழிச்சாலையைக் குறிக்கும், இரண்டாவது வார்த்தை ஆடு,மாடு அடைக்கும் இடத்தைக் குறிக்கும், மூன்றாவது வார்த்தை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர். அது என்ன படம்?

- எட்டுப்பட்டிராசா.

  Karthikai Rajan

* பார்க்க முடியும், பிடிக்க முடியாது. தண்ணீரல்ல... அது என்ன?

 - தமிழ் ராக்கர்ஸ்.

  Mohamed Yusuf

* ஜி.எஸ்.டியை எதிர்த்த முதல் தமிழ்த் திரைப்படம் எது?

 - வீர பாண்டிய கட்டபொம்மன்

வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...

  விக்னேஷ் ஆகிய நான்

* ஸ்டாலின் பாத்த படம்... இன்னும் கிடைக்காத பட்டம்.

 முதல்வன்

  திருமாளம் எஸ்.பழனிவேல்

அன்புமணி, பிரேமலதா - இருவருக்கும் சிறப்புப்பட்டங்கள் தருவதாக இருந்தால் என்னென்ன பட்டங்கள் தரலாம்?

* `அன்புமணி + 1’ (ராஜ்யசபா)

துணை கேப்டன்...

  பிரதீபா ஈஸ்வரன், சேலம்

தகப்பன் சாமி / அலட்டல் அண்ணியார்

  எஸ்.பத்மினி அருணாசலம், சென்னை

* மழுப்பல் மாம்பழம் / அலப்பறை அண்ணியார்

-  @bharathjee1

* அன்புமணி: ஆணியே புடுங்க வேண்டாம்.

பிரேமலதா: நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.

 -  @aathithyad

* `அய்யா பிள்ளை' அன்புமணி

`தம்பிக்கோட்டை' பிரேமலதா

-  @KrishnaratnamVC

* அன்புமணி: `அப்பா’டக்கர்

பிரேமலதா: `பிரஸ்மீட் பிரபலம்'

 -  Safath Ahamed

* பதவிமணி  / டிமாண்ட் லதா

  Thullukutti 

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...

1.? ‘அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும்’ என்னும் ராஜன் செல்லப்பாவின் கருத்தைக் கேட்டதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் - இருவரின் மைண்டு வாய்ஸ் என்னவாக இருக்கும்?

2.? ஆபீஸ் வேலையின்போது மேனேஜருக்குத் தெரியாம ஓபி அடிக்க என்னென்ன பண்ணுவீங்க?

3.? ஓடவே ஓடாத படத்துக்கு ‘வெற்றிகரமான,’ ‘மெகா ஹிட்’ என்று போடற வசனங்கள் மாதிரி உங்களை எரிச்சலடைய வைக்கிற டெம்ப்ளேட் வசனங்கள் எவை? (சினிமா மட்டும்னு இல்லை! எதுவாவும் இருக்கலாம்.)

4.? திங்கள்கிழமை ஆபீஸுக்குப் போறதுன்னாலே சலிப்புதான். இந்த ‘மண்டே புளூஸ்’-ஐ சமாளிக்க உருப்படியான ஒரு ஐடியாவும் ஜாலியான ஒரு ஐடியாவும் குடுங்களேன்! சுருக்க்க்க்க்கமா!

5.? நிலா, ரோஜா... இவையெல்லாம் இல்லாமல் மூன்றே வரிகளில் வித்தியாசமாக ஒரு காதல் கவிதை சொல்லுங்க!

வாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...

உங்கள்  பதில்களை  - அனுப்ப  வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை 600 002.