பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

“மன்னர் எதற்காக வாயிற்காவலனைத் தலைகீழாகத் தொங்கவிட்டிருக்கிறார்?”

“மன்னர் வரும்போதும் போகும்போதும் போர்முரசு சத்தத்தை ‘ஹம்’ செய்து வெறுப்பேற்றினானாம்!”

ஜோக்ஸ் - 2

- அஜித்

“கட்சியை சுயபரிசோதனைக்கு உட்படுத்தணும்.’’

“நீங்க வேற தலைவரே... நியாயமா பிரேதப் பரிசோதனைக்குத்தான் உட்படுத்தணும்…”

ஜோக்ஸ் - 2

- தஞ்சை தாமு

“தேர்தல் தோல்வி குறித்த கூட்டத்தை, தலைவர் ஏன் ஒத்தி வெச்சுட்டார்?”

“உள்ளாட்சித்தேர்தல் முடிஞ்ச பிறகு ஒரே கூட்டமா வெச்சுக்கலாம்னு சொல்லிட்டார்.”

ஜோக்ஸ் - 2

- க.சரவணகுமார்

“கட்சி வரலாறு காணாத தோல்வி அடைந்தும் தலைவரு மகிழ்ச்சியா இருக்காரே?”

“தன் தலைமையில கட்சி வரலாறு படைச்சிடுச்சே என்ற மகிழ்ச்சியாம்!”

ஜோக்ஸ் - 2

- எ.முகமது ஹுமாயூன்