Published:Updated:

வாசகர் மேடை: ஆபீஸ்லயே குளிக்கலாம்!

வாசகர் மேடை: ஆபீஸ்லயே குளிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை: ஆபீஸ்லயே குளிக்கலாம்!

ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்

வாசகர் மேடை: ஆபீஸ்லயே குளிக்கலாம்!

ஆபீஸ் வேலையின்போது மேனேஜருக்குத் தெரியாம ஓபி அடிக்க என்னென்ன பண்ணுவீங்க?
அதென்ன, ‘மேனேஜருக்குத் தெரியாம?’ அவரைவிடவா நாம ஓபி அடிச்சுடப்போறோம்?

  பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

ஃபைல் மிஸ் ஆயிடுச்சுன்னு தேடுவதுபோல ஆபீஸை விட்டுக் கெளம்பற வரை தேட வேண்டியதுதான்!
   சு.பிரபாகர். தேவகோட்டை.

மேனேஜரின் மொக்கை ஜோக்குக்குச் சிரிச்சு, அவரோட  மொக்கை ஸ்டேட்டஸுக்கு fb-யில் லைக் போட்டுதான்.
  parveenyunus

தீவிரமாக வேலை செய்வதுபோல், சிஸ்டத்தில் ‘விகடன் மேடை’க்கு பதில் அளிப்பது... நான் இப்போது அதைத்தான் செய்கிறேன்...
  prabacurren

மேனேஜர்தான்  எங்க கண்ணுல படாம ஒளிஞ்சு ஒளிஞ்சு போவாரு...
  SumiSumathi

கூப்பிடும்போது காது கேட்காத மாதிரி நடிச்சி சின்சியரா வேலை பார்க்கிற மாதிரி சீன் போடுவோம்.
  kssr26

கீ போர்டுல டைப் பண்ணிட்டே ரொம்ப தீவிரமா வேலை பாக்கிறாப்ல சிஸ்டத்துல சீரியல் பாப்போம்...
  sinamika143

ஆதி காலத்து மெயில் எல்லாம் எடுத்து வச்சுப் படிச்சுக்கிட்டுக் கிடப்போம்..!
  Thaadikkaran

நாங்க ஏங்க ஓபி அடிக்கிறோம், எங்கள வேலை செய்ய விட்டு மேனேஜர்தான் ஓபி அடிக்கிறாரு.
  bharathjee1

வாசகர் மேடை: ஆபீஸ்லயே குளிக்கலாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேனேஜருக்குத் தெரியாத விசயத்தப் பத்திப் பேசினோம்னா, அவரும் நம்மகூட உக்காந்து ஓபி அடிக்க  ஆரம்பிச்சுடுவார்.
  Yuvi_Twitz

ஏதோ ஒரு எக்ஸெல் ஃபைல் இருந்தா போதும், ஒரு நாளென்ன ஒரு வாரத்தையே ஓட்டுவேன். சம், ஆவரேஜ், கட், காபி, பேஸ்ட்னு எல்லா ஆபரேஷனும் பண்ணுவேன்.
  vrsuba

இந்தப் பிரச்னையைத் தீர்க்கணும்னா, மீட்டிங் போட்டே ஆகணும்னு சொல்றது. மீட்டிங் போனா,  டீ, வடை, முந்திரிப் பக்கோடான்னு அப்படியே செட்டில் ஆயிடவேண்டியதுதான்.
  RamuvelK

ஓபி அடிச்சுட்டிருக்கும்போது மேனேஜர் வந்தால், ‘சார் ஒரு சின்ன டவுட்டு’ன்னு அவரிடமே டவுட்டு கேட்டு வேலையில் சின்சியர்னு காட்டிக்குவோம்.
  RahimGazzali

எங்க ஆபீஸ்ல நான்தான் மேனேஜர்... நான் ஒரு கேள்வி கேட்டா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரி ஒரு பதில சொல்வாங்க எங்க ஸ்டாப்ஸ்.
  Dharanishraja

மேனேஜருக்கு துரோகம் செய்ய விரும்பாத காரணத்தால், வேலைக்குப் போவதைத் தவிர்த்து வாழ்கிறவன் நான்!
  HariVdp

திங்கள்கிழமை ஆபீஸுக்குப் போறதுன்னாலே சலிப்புதான். இந்த ‘மண்டே புளூஸ்’-ஐ சமாளிக்க உருப்படியான ஒரு ஐடியாவும் ஜாலியான ஒரு ஐடியாவும் குடுங்களேன்! சுருக்க்க்க்க்கமா!

ஆபீஸ்ல நமக்குப் பிடிச்சவங்களை நேத்து, சண்டே ஒருநாள் பாக்கல. இன்னைக்குப் பார்க்கப்போறோம்னு சந்தோஷமா நினைச்சுட்டுக் கெளம்பலாம்!
  சி.ஸ்ரீதேவி, திண்டுக்கல்.

திங்கள்தோறும் ‘நமக்கு நாமே’ விடுமுறைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டியதுதான்!
  எஸ்.சேதுகுமாரி, துவரங்குறிச்சி

திங்கள்கிழமை வேலைக்கு வந்தா ஆபீஸ்லயே குளிச்சுக்கலாம்னு அறிவிச்சுப் பாருங்க.
  Janani42783749

சனிக்கிழமை லீவுக்குப் பதில் செவ்வாய் லீவுவிட்டா, திங்கள் வேலைக்குப் போனா அடுத்தநாள் லீவுன்னு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.
  imparattai

நமக்குப் பிடித்த வேலை, நமக்குப் பிடித்த நண்பர்கள் நம்முடன் பணியாற்றினால் திங்கள் கிழமையும் சொர்க்கமே.
  amuduarattai

அட விடுங்க பாஸ்,  திங்கட்கிழமைன்னா மட்டும் என்ன வேலையா பார்க்கப்போறோம்?
  h_umarfarook

திங்கட்கிழமை வந்தா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமா கொடுக்கலாம். 
  Annaiinpillai

உருப்படியான ஐடியா -  கிரெடிட் கார்டு பில் எவ்ளோ வந்திருக்குன்னு பார்த்தா போதும்.
ஜாலியான ஐடியா - ஒரு வேளை மண்டே லீவா இருந்து, மண்டேவும் மனைவியோடு ஷாப்பிங் போற நிலைமை வந்தா என்ன ஆகும்னு கற்பனை பண்ணிப் பார்க்கலாம்.
  Jawahar_Ganesan

 ஞாயிற்றுக்கிழமை நைட்டு பொண்டாட்டியோடு சண்டை போட்டாலே போதும்... திங்கள்கிழமை வேலைக்கு ஈஸியா போகலாம்.
  Kavi Chennappan

திங்கட்கிழமை லீவு போட்டா புளிச்சமாவுலதான் இட்லி, தோசைன்னு கன்டிஷன் போட்டா போதும்... பேசாம கெளம்பிடுவோம்.
  வைகை சுரேஷ் 

சம்பளத்துல ஒரு பகுதிய பிரிச்சு திங்கட்கிழமை காலைல வாராவாரம் கொடுத்திட வேண்டியதுதானே!
  Visu Aathi

நிலா, ரோஜா... இவையெல்லாம் இல்லாமல் மூன்றே வரிகளில் வித்தியாசமாக ஒரு காதல் கவிதை சொல்லுங்க!

வெற்றுக்குடமாய்த் தவிக்கிறேன்.

தமிழக அரசைப் போல பாராமுகமாய் இருக்கிறாய்...
  umakrishh

GST வந்த பிறகு ‘வரி’களைக் குறைத்துவிட்டேன்,
உன் அழகை வர்ணிப்பதற்கு!
  Thaadikkaran

நான் மட்டுமே
எழுதித் தேர்ச்சி பெற முடிந்த
தகுதி நுழைவுத்தேர்வு
நீ...
  Tamil Johnson

ஒரு ஜோடி விழிகளுக்குள்
ஒரு கோடி மதுக்கடைகள்,
எனக்கு மட்டுமான `பார்’வை!
  Safath Ahamed

நேசமணியாய் டிரெண்டான நம் காதலைப் பிரிக்க
சௌக்கிதாராய் உன் அப்பன்.
அதனால் என்ன?
தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடுவோம்,
அமித்ஷாவால்கூட ஒன்றும் செய்ய முடியாது நம் காதலை.
   ரஹீம் கஸ்ஸாலி
அநேகமாய் நீ
அறுவை சிகிச்சையில்தான்
பிறந்திருக்கக்கூடும்...
ஆம்
தங்கத்தை வெட்டித்தானே
எடுக்க முடியும்! 
 Naki Prasath

ஓடவே ஓடாத படத்துக்கு ‘வெற்றிகரமான,’ ‘மெகா ஹிட்’ என்று போடற வசனங்கள் மாதிரி உங்களை எரிச்சலடைய வைக்கிற டெம்ப்ளேட் வசனங்கள் எவை? (சினிமா மட்டும்னு இல்லை! எதுவாவும் இருக்கலாம்)

மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்!
 டி.சரஸ்வதி, சென்னை

முடிப்பிரச்னைக்கு கேரண்டி. இல்லையென்றால் உங்கள் பணம் வாபஸ்.
  பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

மரியாதை நிமித்த சந்திப்பு.
   ashoker

கைதாகிச் செல்லும்போது அரசியல்வாதிகள் சொல்லும் இந்த வசனம்... ``சட்டப்படி சந்திப்பேன்.” ஒண்ணும் புரியல... கைதானபின் வேறெப்படி சந்திக்க முடியும், மதிலேறிக் குதித்தா வெளியே வரமுடியும்..?!
  mekalapugazh

கொள்கை அடிப்படையிலான கூட்டணி.
  Gnanakuthu 

சென்னைக்கு மிக மிக அருகில்.
  Gnanakuthu

வலியுறுத்தியுள்ளோம்; வலியுறுத்துகிறோம்; வலியுறுத்துவோம்.
  kssr26

வாசகர் மேடை: ஆபீஸ்லயே குளிக்கலாம்!

காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை செய்யும்.
  isureshraju16

பஸ்ஸில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நடுநிசி நேரம், திடீரென பிளாஸ்டிக் காலி பாட்டிலால் பஸ்ஸின் பக்கவாட்டில் சடார் சடாரெனத் தட்டி ‘பஸ் பத்து நிமிஷம் நிக்கும்...டீ, காபி குடிக்கிறவங்க வாங்க...’ன்னு கர்ணகடூரக் குரல்ல கத்தித் தூக்கத்தக் கெடுப்பாங்க பாருங்க அதுதான் உலக எரிச்சல்களில் உச்ச எரிச்சல்.
  தாரை செ.ஆசைத்தம்பி

இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். யாராவது லஞ்சம் கேட்டால் புகார் செய்ய வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் .........
  Shanmugasundaram-Tss Thirumalai Kozhundhu

அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும்’ என்னும் ராஜன் செல்லப்பாவின் கருத்தைக் கேட்டதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் - இருவரின் மைண்டு வாய்ஸ் என்னவாக இருக்கும்?

சலசல சலசல இரட்டைக்கிளவி
தகதக தகதக இரட்டைக்கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ.
  manipmp

எடப்பாடி மைண்டு வாய்ஸ் - இந்தத் தடவ நான்தான் தர்மயுத்தம் பண்ணணும் போல!
ஓபிஎஸ் மைண்டு வாய்ஸ் : இப்பவே பையன்கிட்ட சொல்லி நம்ம பேர்ல ஒரு கல்வெட்டு அடிக்கச் சொல்லணும்.
  gips_twitz

ஏற்கெனவே அமித்ஷாவின் ஒற்றைத் தலைமையின் கீழ்தானே இருக்கிறோம்.
  mohanramko

செல்லப்பா... உனக்குப் பிடிக்காட்டி வேற கட்சிக்குச் செல்லப்பா.
மோடி இருக்கிறவரை எங்களுக்குக் கவலை இல்லப்பா.
  shivaas_twitz

ராஜன் செல்லப்பா... நீ இரட்டை இலைக்குள்
`ஸ்லீப்பர் செல்லப்பா.’
  balasubramni1

எங்களுடன் குனிந்து கும்பிடு போட வந்தாயா; காலில் விழ வந்தாயா; டெல்லியில் போய்க் கெஞ்ச வந்தாயா; அம்மா சமாதியில் தர்மயுத்தம் செய்ய வந்தாயா; நீ மோடியா, அமித்ஷாவா... உனக்கெதுக்கு வர வேண்டும் ஒற்றைத் தலைமை?!
  Amudu Gurusamy

பரவாயில்லை, எதிர்த்துக் குரல்கொடுக்கிற அளவுக்கு நம்ம கட்சிக்காரர்களுக்கு தைரியம் வந்திருக்கு.
   பொ.பாலாஜி கணேஷ்

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு.
வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம்.
கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: ஆபீஸ்லயே குளிக்கலாம்!

? ‘பசிக்குது ஆனா சாப்பிட முடியலை’, ‘உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்’ - இப்படியெல்லாம் காதல் வந்தவர்களுக்கான விநோத அறிகுறிகளை விதவிதமா சொல்லியாச்சு. நீங்கள் பார்த்த, அனுபவித்த விநோதமான காதல் அறிகுறிகளைச் சொல்லுங்க.

? ‘விரைவிலேயே எடப்பாடி ஆட்சி கவிழும்’ என்று இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லிவருவதைக் கேட்கும் தி.மு.க, அ.தி.மு.க-வினரின் மைண்டு வாய்ஸ் என்னவாக இருக்கும்?

? ‘பிகில்’ - டைட்டில் காரணம், நான்கே வரிகளில் ஜாலியா சொல்லுங்க.

? ஒரு நண்பர்  தன் மனைவி பெயரைத் ‘தொல்லை’ என்று சேவ் பண்ணியிருக்கார். அப்படி  உங்க  கான்டாக்ட் லிஸ்ட்ல யார் பேரையாச்சும் வித்தியாசமா சேவ் பண்ணி வெச்சிருக்கீங்கன்னா யார் பேரை என்னன்னு சேவ் பண்ணி வெச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க. (உண்மை மட்டும்)

? நடிகர் சங்கத் தேர்தல் - சிறுகுறிப்பு வரைக...

வாசகர் மேடை: ஆபீஸ்லயே குளிக்கலாம்!

உங்கள்  பதில்களை  அனுப்ப  வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை 600 002.