
ஓவியங்கள்: அரஸ், கார்த்திகேயன் மேடி
பாகிஸ்தான் டீமுக்கு ஒரு பன்ச்-அறிவுரை, ப்ளீஸ்!
இந்தியத் தலை கோலி! இதுக்கு மேல எகிறின, நீ காலி! உயிரைக் கொடுத்து விளையாண்டா விளையாட்டு... உசுப்பேத்தி விளையாண்டா அது ‘வினை’யாட்டு.
சு.பிரபாகர், சிவகங்கை

‘நேர் கொண்ட பார்வை’யுடன் ஆடு... ‘பிகில்’ பறக்கும். இங்கிலாந்தில் உன் ‘தர்பார்’தான்.
@parveenyunus
உங்களுக்கான கப் உடனுக்குடன் கிடைக்க அணுகவும்; காசியப்பன் பாத்திரக்கடை, கராச்சி போஸ்ட், பாகிஸ்தான்!
@manipmp
ஒழுங்கா விளையாடலன்னா, உங்க நாட்டுக்கு மோடி பிரதமர் ஆகிடுவாரு.
@smhrkalifa
விவேகமாக ஆடினால் நாட் அவுட்
வேகமாக ஆடினால் நாக் அவுட்.
@saravankavi
எதிரி நாட்ல இருந்தாலும் சரி, விளையாட்ல இருந்தாலும் சரி, பதற்றமில்லாதவனுக்குத்தான் பங்கு... பதக்கம்!
Sarala Devi
நீங்க வேர்ல்டுகப் ஜெயிக்கணும்னா பாகிஸ்தான்ல வீட்டு வீட்டுக்கு யாகம் நடத்தணும், பிளேயர்ஸ்லாம் அண்டாவுல கழுத்தளவு தண்ணில முங்கி தியானம் பண்ணணும் பாஸ்.
Manikandan Thirunavukkarasu
கொட்டாவி விட்டால் கோட்டை விடுவாய்.
Rishivandiya Baskar
இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு நான்கே வரிகளில் நச்சுன்னு ஒரு குட்டிக்கதை சொல்லுங்க...
யோகம் இல்லாத தி.மு.க. யாகம் வளர்க்கும் அ.தி.மு.க. தாகம் தீராத தமிழக மக்கள். ஸ்லோகம் கற்றுத் தரும் மத்திய அரசு..!”
பி.சரவணன், சென்னை 16

“தளபதி கிளி, தளபதி கிளின்னு ஒரு கிளி இருந்துச்சாம். இடைத்தேர்தல் மரத்துல 22 காய் பழுக்குமுன்னு ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்துச்சாம். ஆனா பாதி பழுக்காம பஞ்சா வெடிச்சதும், தளபதியோட நெஞ்சே வெடிச்சிடுச்சாம். இப்போ கொஞ்ச தூரம் தள்ளி இருக்கிற சட்டசபைத் தேர்தல் மரத்துல 234 காய் பழுக்குமான்னு கவலையோட காத்திட்டிருக்காம்.”
டி.செல்லதுரை, சென்னை
கடவுள் மனிதர்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேளென்றார்.
ராஜராஜ சோழன் சாதி எதுவென்று சொல்லென்றான் ஒருவன்.
அபிமான நடிகர் நடித்த படத்தின் டிரெய்லர் எப்போ ரிலீஸ் ஆகுமென்றான் மற்றொருவன்.
அவரமாக ஒரு லாரி தண்ணீர் வேண்டும் என்றான் கடைசியானவன்.
@RajiTalks
‘ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்...’ என்ற பாட்டியிடம் ‘அவர் டெல்லிக்கு அடிமையா இருந்தாராம். அதானே..?’ என்றான் கதை கேட்ட பேரன்.
@parveenyunus
1 ஓட்டு போட்டோம்; 2 ஆண்டில் 3 பேர் முதல்வர் ஆனாங்க! 4 வருசம் ஆகப்போகுது...
@sudhansts
வீதி வீதியாக, வீடு வீடாக ஓட்டு வாங்க வந்து வெற்றிபெற்றார் அவர், நன்றியை மட்டும், ஊருக்கு ஒரு பிளெக்ஸ் பேனரில் சொன்னார்.
@amuduarattai
பிரதமர்-ஏரோபிளேன் மோட்’ல இருக்காரு.
முதல்வர்-நாட் ரிச்சபள் இருக்காரு.
எதிர்கட்சிகள்- சைலன்ட் மோட்’ல இருக்கு.
மக்கள்-சார்ஜ் இல்லாமல் நடுத்தெருவுல நிற்கிறாங்க!
@billumohan83
நாகராஜசோழன்னு ஒரு கற்பனைப்பாத்திரத்தை உருவாக்கினார் டைரக்டர் மணிவண்ணன். இன்று அந்தக் கதாபாத்திரம் உயிர்பெற்று தவழ்ந்து எழுந்து வந்தபோது வியந்து நின்றது தமிழகம்.
@Mahalak45010287
அந்த எழுத்தாளர்க்கு ‘அரைச்சமாவையே அரைக்கிறீர்களே’ என்று ஒரு வாசகர் கடிதம் வந்தது. ‘மாவு பழையதென்று தூக்கி வீசிவிடவா முடியும்’ என்று பதில் எழுதினார் எழுத்தாளர்.
@absivam
ஒரு ஊருல பல ராஜா...
Karthiz Vigneshz
மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு எது; மோசமான கண்டுபிடிப்பு எது?
மகத்தான கண்டுபிடிப்பு: சம்பளம்.
மோசமான கண்டுபிடிப்பு: இ.எம்.ஐ.
மலர் சூர்யா, புதுச்சேரி
மகத்தானது- பாட்டி சொல்லும் கதை.
மோசமானது- சீமான் சொல்லும் கதை.
@parveenyunus
மகத்தானது: கலர் படம்;
மோசமானது: கலப் படம்!
@KrishnaratnamVC
மகத்தான கண்டுபிடிப்பு ‘சினிமா’
மோசமான கண்டுபிடிப்பு ‘தமிழ் ராக்கர்ஸ்’
@yugarajesh2
மகத்தான கண்டுபிடிப்பு : நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டி விட முடியும் என்றது.
மோசமான கண்டுபிடிப்பு: அலைபேசியைக் குழந்தையின் கையில் குடுத்துவிட்டு சாப்பாட்டை வாயில் திணிப்பது.
Rekha Rekha
காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம்... இப்படி எத்தனையோ தினங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு ஏற்றவாறு புதிதாக ஒரு தினத்தை உருவாக்கலாம் என்றால் என்ன ‘தினம்’ உருவாக்கலாம்?
லாரித் தண்ணீர் வரும் தினம்.
எஸ்.பத்மினி அருணாசலம், சென்னை
‘தாவலர் தினம்’ கட்சி தாவிய தலைவர்கள் கொண்டாட.
எஸ்.கருணாகரன், சென்னை - 53
கோஷ்டிகள் தினம்
அவ்வை. கே.சஞ்சீவிபாரதி, ஈரோடு
மொபைல் கொயட் தினம்... ஒரு நாள் எல்லா மொபைலையும் சுவிட்ச் ஆப் பண்ணி வைக்கணும். ஆனா அதையும் மொபைல் கொயட் தினம்னு தனி டேக் போட்டுதான் சொல்ல வேண்டியிருக்கும்.
@Elanthenral
நோ ராசிபலன் டே
@priyam_vasanth
அப்பல்லோ தினம், அன்று இட்லி மட்டும் சாப்பிட வேண்டும்.
@mohanramko
தூர் வாரும் தினம்! கோடை மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்து அனைவரும் அருகில் இருக்கும் குளம், ஆறு, ஏரி, கால்வாய், வாய்க்கால் என ஏதாவது ஒரு நீர்நிலைக்குச் சென்று ஆக்கிரமிப்பு அகற்றுதல், தூர் வாரி ஆழப்படுத்துதல். ஒரே ஒரு நாள் நாம் நமக்காகச் செலவழிக்க மாட்டோமா?
@tamil_twtz
தப்புப் பண்ணிட்டு அதிலிருந்து எஸ்கேப் ஆகிறவங்களுக்காக ‘அட்மின் தினம்’ கொண்டாடலாம்.
@Aruns212
“மாட்டிக்கோ, ஹெல்மெட் மாட்டிக்கோ தினம்” - ஹெல்மெட் போடாமல் போலீஸிடம் மாட்டுபவர்களிடம் பைன் போடாமல், போலீஸே ஹெல்மெட் விற்று அவர்களை மாட்டிக்கொள்ளச் சொல்லும் தினம்.
Karthikeyan Yeskha
“நாக்குப்பூச்சி தினம்” தினம் தினம் எதுக்கெடுத்தாலும் “உண்மையான தமிழனா இருந்தா ஷேர் பண்ணு” - என வெறியேத்து பவர்களை உசுப்பேத்த.
Karthikeyan Yeskha
லஞ்சம் வாங்குபவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து தொடங்கி கருட புராணத் தண்டனை வரை பல வித்தியாசமான தண்டனைகளைத் தமிழ் சினிமாவில் சொல்லிவிட்டார்கள். இதுவரை இல்லாத, புதுசா ஒரு தண்டனை சொல்லுங்க பார்ப்போம்!
லஞ்சம் வாங்கின உடன் ‘யூதாஸ் டச் மாதிரி வாங்கின கை மரக்கையா மாறிடணும்! லஞ்ச மாமா வர்றார்னு தெருப்பசங்களே ஒருவழி பண்ணிடுவாங்க!
வி.தமிழரசி, உடுமலைப்பேட்டை.
லஞ்சம் வாங்குபவர்கள் ஆயிரம் மாணவரின் கல்விக் கடனை அடைக்க வேண்டும். மாணவருக்கும் கடன் தீர்த்த மாதிரி ஆகும். லஞ்சம் வாங்குபவர்க்கும் தண்டனை கொடுத்த மாதிரி ஆகும்.
சி.ராமநாதன், திருவான்மியூர்.

சென்னை விமானநிலையத்தில் ஒரு மாசம் நிற்க வைக்கணும். எப்படியும் கண்ணாடி உடைந்து கீழ விழும்.
@manipmp
லஞ்சம் வாங்குபவரின் மொபைல் போனை ஒரு வாரத்திற்கு அவர் மனைவியிடம் தர வேண்டும் பாஸ்வேர்டு உட்பட...
@Dharanishraja
“சார்! எனக்கு ஒரு டவுட்டு... லஞ்சத்துக்கு இதுவரை யாரும் சொல்லாத தண்டனையை நான் சொன்னால், அதுக்கு எவ்வளவு லஞ்சம் தருவீங்க?”
@KrishnaratnamVC
ரேஷன், ஆதார், பேன், வங்கி உட்பட அனைத்து கார்டுகளையும் பிரத்யேக கலரில் அச்சடிக்க வேண்டும். அதை உபயோகிக்க நீட்டும்போதெல்லாம் தலைக்குனிவை உண்டாக்கும்.
Mohamed Yusuf
ஒவ்வொரு சினிமாவுக்கு முன்னாடியும் புகைப்பழக்க எச்சரிக்கை விளம்பரத்துக்கு பதிலாக லஞ்சம் வாங்குன ஆட்களோட போட்டோக்களைப் போடலாம்.
வைகை சுரேஷ்
இனிமேல் காலம் முழுக்க வாங்கப்போகும் சம்பளத்தில் 20 சதவிகிதத்தை ஆதரவற்றோர் விடுதிக்கு மாதா மாதம் தரவேண்டும்.
Karthikeyan Yeskha
கழிவறையில் உருவப்படத்திற்கு லஞ்சம் வாங்குபவரின் படத்தைப் பயன்படுத்தலாம்.
சக்தி பிரியன்
விஜிபி கோல்டன் பீச்சில் சிலை மனிதனாக நிற்க வைத்து “லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சிரிக்கும் அதிசய சிலை மனிதன்” என்ற போர்டைக் கழுத்தில் மாட்டி விடலாம்.
Rishivandiya Baskar
காசியப்பன் பாத்திரக்கடை கராச்சி, பாகிஸ்தான்

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு.
வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம்.
கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன்... அடுத்து என்ன ‘ஒரே’ திட்டம் கொண்டுவரலாம்?
? கடவுள் ஃபேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ அக்கவுன்ட் ஆரம்பித்து ஸ்டேட்டஸ் போடுவதாக இருந்தால், அவரது முதல் ஸ்டேட்டஸ் என்னவாக இருக்கும்?
? தினகரனின் அரசியல் வரலாற்றை வைத்து ஒரு வெப் சீரிஸ் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
? பள்ளிக்காலம், கல்லூரிக்காலம் - ரெண்டு வித்தியாசம், ஜாலியா சொல்லுங்க பார்ப்போம்.
? ஏதாவது ஒரு சினிமாவில் நீங்களே கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்த குறியீட்டைச் சொல்லவும்.

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.