Published:Updated:

சினிமா விமர்சனம் : மேதை

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : மேதை

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

ரு பள்ளிக்கூட வாத்தியார், ஊருக்கே வாத்தியாரானால்... அவர்தான் மேதை!

நல்லாசிரியர் விருது பெற்ற ராமராஜன், வில்லன் கோட்டை குமாரைத் திருத்துவதே 'மேதை’ கதை. அறிமுக இயக்குநர் என்.டி.ஜி. சரவணன் 'கிராமத்து நாயகன் ராமராஜன் இருப்பதே போதும்’ என்று நினைத்துவிட்டாரோ என்னவோ? கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு போன்ற எந்த வஸ்துகளுக்கும் மெனக்கெடவே இல்லை!

'உதாரண புருஷன்’ குறித்த ஓர் உதாரணக் காட்சி... ராமராஜனோடு திருமணம் முடிந்து முதலிரவுக்கு நாயகி காத்திருக்கிறார். ஆனால், ராமராஜனுக்குக் கடமைதானே முக்கியம்? கருமமே கண்ணாக மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். நாயகி காத்திருந்து காத்திருந்து, வெறுத்து தூங்கப்போகும் சமயம் வருகிறார் ராரா. நாயகி ஆசையாகப் பாலைச் சொம்பில் இருந்து டம்ளருக்கு ஊற்ற, அது

சினிமா விமர்சனம் : மேதை

தயிராகி இருக்கிறது. பால் தயிராக மாறுகிற வரை நாயகன் கடமை ஆற்றியிருக்கிறார். அடேங்கப்பா!    

கனத்த உடல், உப்பிய கன்னங்கள் என்று 'ஒரு மாதிரி’ இருக்கிறார் ராமராஜன். ஸ்கேல் வைத்துச் செதுக்கப்பட்டது போன்ற மீசையும் ரோஸ் பவுடரும் 'சிவீர்’ லிப்ஸ்டிக்கும்தான் பழைய ராமராஜனை நினைவுபடுத்துகின்றன. வயதும் உடலும் ஏறினாலும், அசராமல் முட்டிக்கால் தூக்கி டான்ஸ் ஆடுவதும் தோள்பட்டையில் கையைத் தட்டி தலையை ஆட்டிக்கொண்டே பாடுவதுமாக 'பேக் டு பெவிலிய’னுக்கு முயற்சித்திருக்கிறார் ராரா.  

ஊரில் எவ்வளவு நல்ல மாப்பிள்ளைகள் இருந்தாலும், மாமனை மணப்பதுதானே முறைப்பெண்ணுக்கு அழகு?! அறிமுக நாயகி கவுசிகா அதைத் தவறாமல் செய்கிறார். அட... அதுகூடச் சரிங்க. ஆனால், முதல் பாதியிலேயே இறக்கும் அவர் பின் பாதியில் ஆவியாகவோ, பேயாகவோ இல்லாமல் நினைவு களாக இரண்டு பாடலுக்குக் கவர்ச்சி நடனம்(!) ஆடிச் செல்வதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?    

கோ

சினிமா விமர்சனம் : மேதை

ட்டை குமார் படத்தின் பன்ச் வில்லன். 'எனக்கு மனசே இல்லை. எப்படி மனசாட்சி இருக்கும்?’, 'நீ அரிவாளால சாதிப்ப... நான் அறிவால் சாதிப்பேன்’ (இது ஹீரோ டயலாக் ஆச்சே!) போன்ற பன்ச்களால் மாஸ் ஹீரோக்களுக்கே பாடம் கற்பிக்கிறார்!

குடிக்கக் கூடாது, திருடக் கூடாது, குழந்தை களைப் படிக்கவைக்க வேண்டும், வன்முறை கூடாது என்று படம் முழுக்கப் போதிப்பதும் வில்லனைக் கொல்ல வாய்ப்பு இருந்தும் அவரது உயிரை ராமராஜன் காப்பாற்றுவதும் நல்லன சொல்லும் காட்சிகள். ஆனால், அவை சொல்லப்பட்ட விதம் நாடகத்தனமாக இருப்பதால், சிலபல கொட்டாவிகளோடு கடந்து செல்கின்றன!  

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கும் ராமராஜன் படம். எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்துப் போகிறோமோ... அப்படியே இருக்கிறது!