Published:Updated:

அவங்களா இவங்க?!

க.நாகப்பன்

அவங்களா இவங்க?!

க.நாகப்பன்

Published:Updated:

அவங்களா இவங்க?!

அவங்களா இவங்க?!

குத்துப் பாடல்களில் கெட்ட ஆட்டம் போட்ட சுஜா வாருணி, இப்போது சிக்கென மெலிந்து 'அமளி துமளி’ படத்தின் ஹீரோயின்!

 ''எப்படி இப்படி மெலிஞ்சுட்டீங்க?''

''அரிசி சாதத்துக்குக் கண்டிப்பாத் தடா. தினமும் நீச்சல். டயட்ல இருந்து ஜூஸ் மட்டுமே குடிச்சு உயிர் வாழ்ந்தேன். 16 கிலோ குறைஞ்சதில், ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டேன்!

இப்போ 'அமளி துமளி’ படத்தில் சாந்தனு வுக்கு ஜோடியா நடிக்கிறேன். அடுத்து சி.எஸ்.அமுதனின் 'ரெண்டாவது படம்’லயும் நடிக்கிறேன்!''

''மறுபடி குத்துப்பாட்டு வாய்ப்பு வந்தா நடிப்பீங்களா?''

''சத்தியமா மாட்டேன். 'குட்டி’, 'தோரணை’, 'போக்கிரி’, 'சகுனி’, 'சிறுத்தை’னு நிறையப் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடச் சொல்லிக் கேட்டாங்க. 'ரொம்ப ஸாரி’னு சொல்லிட் டேன். என்னை ஒரு புதுமுகமா நினைச்சு உற்சாகப்படுத்துங்க. இன்னும் பெரிய ரவுண்ட் வரணும்!''

வாம்மா மின்னலு!

வாழ்க்கை வாழ்வதற்கே!

அவங்களா இவங்க?!

'அலிபாபா’, 'கற்றது களவு’ படங்களில் கவனம் ஈர்த்த கிருஷ்ணாவின் அடுத்த படம் 'கழுகு’. ''விரக்தியால் நிறைய பேர் சூசைட் பாயின்ட்டில் தற்கொலை பண்ணிக்குவாங்க. மலை அடிவாரத்தில் இருந்து அந்தப் பிணங்களைத் தூக்கிட்டு வர்றவங்களோட வாழ்க்கை எப்படி இருக்கும்? பிணத்தோட காலத் தைக் கழிக்கிற அவங்களோட அன்பு, சோகம், காதல், நட்புனு எல்லாப் பக்கங்களையும் பதிவு செஞ்சிருக்கோம். பள்ளத்தாக்கில் பிணம் தூக்குற வங்களோட பதினஞ்சு நாள் தங்கியிருந்து 'ஹோம் வொர்க்’ பண்ணேன். அப்போதான் வாழ்க்கை எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்னு புரிஞ்சது'' - கிருஷ்ணா நெகிழ்கிறார்!  

அழகாய்ப் பூத்த அழகி!

அவங்களா இவங்க?!

'உன்னைப் போல் ஒருவன்’ படத் தில் தில்லாகத் தம் அடிக்கும் பத்திரிகையாளராக நடித்த அனுஜா ஐயர், 'விண்மீன்கள்’ படத்துக்காக சின்சியர் எழுத்தாளர் ஆகியிருக்கிறார். ''டெல்லியில் விளம்பரம், பத்திரிகைத் துறை சார்ந்த படிப்பு படிச்சேன். விளம்பர நிறுவனங் களின் தேவைக்கு ஏற்ப மாடல்களைத் தேர்ந் தெடுக்கும் வேலை பார்த்துட்டு இருந்தேன். 'நீங்களே நடிக்கலாமே’னு நிறையப் பேர் உற்சாகப்படுத்தினதால், நடிகை ஆனேன். என்.எஃப்.டி.சி. தயாரிப்பில் 'மெட்ரோ எம்.வி 3’ங்கிற படத்தில் நடிச்சேன். படத்துக்கு நியூயார்க் சர்வதேசத் திரைப்படத் திருவிழா வில் விருது கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' - கண்கள் மினுங்கச் சிரிக்குது பொண்ணு!

மயக்கமும் தயக்கமும்!

அவங்களா இவங்க?!

''ஆணோ பெண்ணோ காதல்னா ஒரு ரசாயன மயக்கமும் அதை வெளிப்படுத்துறதுல ஒரு தயக்க மும் இருக்கு. கால் டாக்ஸி பையனும் கால் சென்டர் பெண் ணும் முகம் பார்க்காம, வார்த்தை களால் வசீகரிக்கப்பட்டு காதலில் விழும் கதை இது!'' - 'மயங்கினேன் தயங்கினேன்’ படத்தின் ஒரு வரியை அழகாகச் சொல்கிறார் இயக்குநர் எஸ்.டி.வேந்தன். 'இன்பா’ படத்துக்குப் பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம்.

'' 'ஸ்டார் வேல்யூ வேண்டாம். சிம்பிளே சிறப்பு’ ட்ரெண்ட்ல நீங்களும் களம் இறங்கிட்டீங்கபோல?''

''அப்படி இல்லை... அது இந்தத் திரைக்கதை தந்த நம்பிக்கை. நிதின் சத்யா, 'தமிழ்ப் படம்’ ஹீரோயின் திஷா பாண்டே, தேஜாஸ்ரீ, கஞ்சா கருப்புனு ரசிகர் கள் அறிஞ்ச முகங்கள்தான். 'போக்கிரி’க்கு வசனம் எழுதிய பிரபாகர், 'தமிழ்ப் படம்’ இசைஅமைப்பாளர் கண்ணன்னு எனக்குப் பிடிச்ச கூட்டணி. நம்பிக்கையா வேலை பார்க் கிறோம்!''