Published:Updated:

வில்லன் சந்தானம்!

ம.கா.செந்தில்குமார்படம் : கே.ராஜசேகரன்

வில்லன் சந்தானம்!

ம.கா.செந்தில்குமார்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

''சென்னையைக் கலக்கும் டான் வில்லன்... அவனைப் போட்டுத்தள்ள நாள் குறிக்கும் சிக்ஸ்பேக் சிங்கம் ஹீரோ. காக்கிக்குள் காதல் முளைக்குது... துப்பாக்கிக்குள் துப்பட்டா சிக்குது! இவங்களோட லவ்வுக்கு தூதுப் புறா சந்தானம். எல்லாரையும் நனைக்கப் பெய்யுற மழை சந்தானத்தை மட்டும் நனைக்காம பைபாஸ்ல போயிடுது... அது ஏன்?'' - இயக்குநர் ராஜேஷ் ஓர் அமானுஷ்ய எஃபெக்ட் கொடுக்க... பக்கத்தில் இருந்த உதயநிதிக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

 ''இப்படியான ஆக்ஷன், ரிவெஞ்ச், மெசேஜ் எதுவும் இல்லாத சாதாரண படம் பாஸ் இது. ஆனா, கூட்டமா வந்து குதூகலமா கிளம்பிப்போவீங்க. அதுக்கு நாங்க கியாரன்ட்டி!'' - சியர்-அப் சொல்கிறார் இயக்குநர் ராஜேஷ். 'சிவா மனசுல சக்தி’, 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டு ஹிட்களுக்குப் பிறகு, உதயநிதியுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ எடுத்துவருகிறார்.

வில்லன் சந்தானம்!

''உதய் சார் என்கிட்ட, 'நான் ஹீரோவா பண்ணலாம்னு இருக்கேன். நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க’ன்னார். அப்ப சும்மா ஒரு அவுட்லைன் சொன்னேன்'' என்கிற ராஜேஷை இடைமறித்த உதயநிதி, ''ஏங்க... அதுக்குப் பேர் அவுட்

லைனா? டெட்லைன் பாஸ்... செம டெரரா 'போக்கிரி’ விஜய் மாதிரி ஆக்ஷன் கதை சொல்லிக் காலி பண்ணப் பார்த்தாருங்க. அப்புறம் கெஞ்சிக் கூத்தாடி இந்தக் கதை யைப் பண்ணவெச்சேன்'' என்கிறார் உதயநிதி.

''வேணும்னா சொல்லுங்க நிறைய லைன்ஸ் வெச்சிருக்கேன். நீங்க ஹீரோ, சந்தானம் உங்க ஃப்ரெண்டு'' என்ற ராஜேஷிடம், ''சார்... இந்த ஒன் லைன் மட்டும்தான் உங்களுக்குத் தெரியுமா?'' - இது உதயநிதி!

''நான் ஹீரோயின் இல்லாமக்கூடப் படம் எடுப்பேன்... சந்தானம் இல்லாம சான்ஸே இல்லை!''- சிரிக்கிறார் ராஜேஷ்.

வில்லன் சந்தானம்!

''ஆமாமா... அதுலயும் படத்துல சந்தானம்தான் வில்லன்னு என்கிட்ட கதை சொன்னாரு. இப்பப் பார்த்தா படம் முழுக்க பார்ட்டி பட்டையைக் கிளப்பி இருக்காரு. படத்தோட வில்லன் கம் ஹீரோ சந்தானம்தான்!''

''எஸ்.எம்.எஸ்-ல டாஸ்மாக், பாஸ்ல டுடோரியல் சென்டர், இந்த டைப்ல 'ஓ.கே. ஓ.கே’-வுல என்ன லேண்ட் மார்க்?'' என்றதும் ''சென்னை சாலைகள்தான்!'' - பளிச்சென அடிக்கிறார் உதயநிதி.

''ஆமாம். இதுல நிறைய சீன்களை சென்னையின் பளிச் இடங்களில் ஷூட் பண்ணியிருக்கோம். ஒரு சிங்கிள் செட்கூடப் போடலை. அவ்வளவு லைவ்வா இருக்கும் படம்!''

''ஆர்யா, சினேகா, ஆண்ட்ரியானு ஏகப்பட்ட கெஸ்ட் அப்பியரன்ஸ் இருக்காம்ல?'' என்ற நம்மிடம், ''படம் ஏப்ரல் ரிலீஸ்னு பிளான் பண்ணி இருக்கோம். அதுக்குள்ள எல்லாத்தையும் உருவிடுவீங்க போல் இருக்கே! எல்லாம் நட்புக்காகத்தான். அந்த எபிசோடு நல்ல கலகலப்பா இருக்கும்'' என்றார் ராஜேஷ்.

''ரொமான்ஸ் ஏரியால நிறைய ரீ-டேக் வாங்கினீங்களாமே?'' என்றதும் வெட்கமும் சிரிப்புமாக உதயநிதி, ''ஏங்க? நான் வீட்ல அடி வாங்கணுமா? அப்படி எதுவுமே இல்லை. உண்மையைச் சொல்லணும்னா, செம சைவப் படமா வந்திருக்கு!'' என்கிறார்.

வில்லன் சந்தானம்!

''என்னது... ஹன்சிகா இருந்தும் ரொமான்ஸ் இல்லையா? இது ரொம்ப அநியாயமா இருக்கே?'' என்ற நம்மிடம், ''சார்... எல்லாம் இருக்கு. கிஸ்ஸிங் சீன்கூட இருக்கு தெரியுமா? ஒரு சீன்ல ஹன்சிகா

வில்லன் சந்தானம்!

இவரை கிஸ் பண்ணுவாங்க. 'ஐயையோ! முடியவே முடியாது’னு பதறிட்டார். சார் சம்மதிக்கலைன்னா, திடீர்னு கிஸ் அடிச் சிரும்மானு ஹன்சிகாட்ட சொல்லிட்டேன். அதுக்கு, 'நான் எப்பவும் ரெடி சார். முதல்ல அவரைத் தயார் பண்ணுங்க’னு  செம வாரு வாரிட்டாங்க!'' என்று சிரித்த ராஜேஷ், ''உதய் சார் கேரக்டர் பேர் சரவணன். அவர் சத்யம் தியேட்டர்ல டிக்கெட் கிழிப்பவர். சந்தானம், பார்த்தா என்கிற பார்த்தசாரதி. தியேட்டர் கேன்டீன்ல வேலை செய்றவர். ஹன்சிகா கேரக்டர் பேர் மீரா. ஹீரோ-ஹீரோயின் எப்படி மீட் பண்றாங்க, எப்படிக் காதல் வந்துச்சு. ஒண்ணா சேர்ந்தாங்களா, இல்லையானு ரொம்பவே வழக்கமான காதல் கதைதான். 'வேண்டாம் மச்சி... வேண்டாம் மச்சி... பொண்ணுங்க மேட்டரு... அந்த மேட்டரால விக்கிது நிறைய குவார்ட்டரு’னு ஒரு பாட்டு பட்டையைக் கிளப்பும்!'' என்று கோரஸ் வெற்றிக் குறி காட்டுகிறார்கள்.

படத்துலயும் காட்டுகாட்டுனு காட்டுங்க!