Published:Updated:

வைஸ் கேப்டன்!

கேப்டன் வீட்டின் அடுத்த ஹீரோநா.கதிர்வேலன்

வைஸ் கேப்டன்!

கேப்டன் வீட்டின் அடுத்த ஹீரோநா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

மாம், வைஸ் கேப்டன் ரெடி!

 விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் சினிமா ஆர்வத்துடன் இருக்கிறார் என்று தகவல்கள் தந்தியடிக்கையில், அவரது இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் முஷ்டி முறுக்கி போஸ் கொடுக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நாம எதுவும் சொல்லிக்கொடுக்கலைங்க. சாருக்கு ஆக்ஷன்தான் பிடிக்குமாம். அதான் எடுத்த எடுப்புலயே இப்படி மிரட்டலா நிக்கிறார்!''- கரகர குரலில் ஆரம்பிக்கிறார் விஜயகாந்த்.  

''படிப்பே முடிக்கலை... அதுக்குள்ள சினிமாவா?''

''இதுல என் ஆசை எதுவும் கிடையாதுங்க. அதேசமயம், அவங்க ஆசைக்கும் நான் குறுக்கே நிக்கலைங்க. பெரியவன் விஜயபிரபாகரன் பி.ஆர்க். படிக்கணும்னு சொன்னான். 'ஏண்டா தம்பி... அது கஷ்டமான படிப்பாச்சே? சிரமமா இருக்கும்டா!’னு சொன்னேன். 'பிடிக்குது... படிக்கிறேன்’னு சொல்லிட்டான். சொன்ன மாதிரி நல்லாவும் படிக்கிறான். இளையவன் லயோலாவுல விஷ§வல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு இருக்கான். திடுக்குனு ஒரு நாள் 'சினிமாவில் நடிக்க ஆசையா இருக்கு’னு வந்து நிக்கிறான். எப்பவும் படம் பார்த்துக்கிட்டே கெடப்பான். இங்கிலீஷ் ஆக்ஷன் படங்களைப் பத்திக் கேளுங்க... ஒண்ணு விடாம சொல்வான். 'அந்தப் படத்தில் ஆக்ஷன் பிளாக் பிரமாதம்... இந்தப் படத்துல கிராஃபிக்ஸ்ல பின்னிட்டாங்க’னு பேசிட்டே இருப்பான்.

வைஸ் கேப்டன்!

சரி... நடிக்க ஆசைப்படுறான். நடிக்கவெச்சுடுவோம். மத்தபடி அவன் உழைப்புலதான் முன்னுக்கு வரணும். தகப்பன் ஸ்தானத் துக்கு நானே சொந்தமா, பிரமாண்டமா முதல் படம் எடுப்பேன். நிக்கிறதும் நிக்காததும் அவன் சாமர்த்தியம்!''

''டைரக்டர், ஹீரோயின் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா?''

''நாலஞ்சு கதை கேட்டு வெச்சிருக்கேன். புதுசா வர்ற டைரக்டர்கள்கிட்டயும் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். அவங்க சொல்ற கதை பிடிச்சா, அதையே எடுக்கலாம். காதல், ஆக்ஷன், காமெடினு எல்லாமே இருக்கணும். இப்பவே 6.4 அடி உயரம் இருக்கான். அமிதாப்பச்சன் உயரத் துக்கு வருவான்போல.

வைஸ் கேப்டன்!

கேட்டதும் பிடிக்கிற மாதிரி கதை கிடைச்சுட்டா, உடனே ஷூட்டிங் போக வேண்டியதுதான். அது சீனியர் இயக்குநர்களோ, புதுசா வர்றவங்களோ யார்னாலும் சரிதான். கதை செட்டாகிட்டா, அப்புறம் ஹீரோயின் தேடிக்கலாம். அது ஒரு விஷயமே இல்லை!''

''தம்பிக்கு நடிப்புல நீங்கதான் ரோல் மாடலா?''

''அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, தமிழ்ல அவனுக்கு என் படங்கள்தான் பிடிக்கும். நான் நடிச்ச எந்தப் படம் டி.வி-யில் ஓடிட்டு இருந்தாலும் சேனல் மாத்தாம பார்த்துக்கிட்டே இருப்பான். அதுலயும் 'கேப்டன் பிரபாகரன்’, 'வல்லரசு’, 'விருதகிரி’ மூணும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். தமிழ்ல எல்லா ஹீரோக்கள் படமும் பார்த்திருவான். அப்புறம் இங்கிலீஷ்ல யாரு... டாம் க்ரூஸாமே... அவர் படம்னா ரொம்ப இஷ்டம்! நானும் கேட்டேனே... 'உண்மையைச் சொல்லுடா... என்னைத் தவிர எந்த ஹீரோ உனக்கு ரொம்பப் பிடிக்கும்?’னு... 'உங்க தலைவரைப் பிடிக்கும்’னு சொல்லிட்டுச் சிரிப்பான். தலைவர் எம்.ஜி.ஆரைச் சொல்றான்!''

'' 'விஜயராஜ்’ சினிமாவுக்காக விஜயகாந்த் ஆனார். 'சண்முகபாண்டியன்’ பேர் மாற்றத்துக்கு உள்ளாகுமா?''

''ஏன்? அந்தப் பேரே நல்லாத்தானே இருக்கு. சினிமாவுக்காக ஸ்டைலா இருக்கணும்னு நினைச்சா, டைரக்டர்கள் மாத்திக்கலாம். ஒண்ணும் தப்பில்லை!''

''உங்க இயக்கத்திலேயே அறிமுகப்படுத்திடலாமே...''  

''இப்போ சினிமாவைப் புதுசு புதுசா எடுக்கிற இளைய தலைமுறை இயக்குநர்கள் யார் படத்திலாவது நடிச்சா நல்லா இருக்கும். கலகலனு ஒரு பெரிய படத்தில் அறிமுகமானா நல்லா இருக்கும். நடிகன்னா, எல்லார்கிட்டயும் வேலை பார்க்கணும். அதுதான் சரி. நான் சினிமாவில் கஷ்டப்பட்டு வந்தேன். என் குடும்பத்தில் யாரும் அதுக்கு முன்னே சினிமாவில் இருந்தது கிடையாது. இப்ப நான் இருக்கிறதால, அவனுக்குப் படம் தயாரிச்சுக் கொடுக்கிறேன். அவன் ஆர்வத்துக்கும் சுறுசுறுப்புக் கும் நல்லா வருவான்னு தோணுது. வாழ்த்துவோம்!''