. ர.ஜினி, கமல் என மாஸ் ஹீரோக்களின் 'மாஸ்டர் ஹிட்’ படங்களை இயக்கியவர். தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான் கான் என மொழி எல்லைகள் கடந்து ஹீரோக்களை ஆட்டிப் படைத்தவர்... திரையுலகப் பயணத்தில் 'ஐம்பதாவது படம்’ என்ற அரிய மைல்கல்லை 'இளைஞன்’ மூலம் தொடுபவர், சுரேஷ் கிருஷ்ணா! தனது இளமைக் காலம் தொட்டு 'இளைஞன்’ காலம் வரை நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சுரேஷ் கிருஷ்ணா..
''ரஜினி, கமல் என சூப்பர் ஸ்டார்களை இயக்கியவர் நீங்கள்... பா.விஜய்யை ஹீரோவாக இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?''

''பா.விஜய் என் படங்களுக்குப் பாடல்கள் எழுதி இருக்கிறார். அந்த அறிமுகம்தான். ஒருநாள் திடீர்னு 'முதல்வர் ஐயா வீட்டுக்கு வெளியில்தான் நிக்கிறேன். அவர் ஒரு கதை சொன்னார். நிச்சயம் படம் சூப்பர் ஹிட்டாகும். நீங்கதான் அந்தப் படத்தை இயக்கணும்’னு சொன்னார். அவர் அதற்கு முன் ஹீரோவாக நடித்த 'ஞாபகங்கள்’ படம் நான் பார்க்கலை. ஒரு ஹீரோவா அவர் எப்படி செட் ஆவார்னு நானும் யோசிச்சேன். ஆனா, பா.விஜய்யின் நட்பு, முதல்வரின் கதை - வசனம் என இரண்டு காரணங்களுக்காக அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். முதல் நாள் ஷூட்டிங்கில், 'சார், நீங்க என்ன சொல்றீங்களோ அதன்படி நடிப்பேன் சார். நீங்க என்னை எப்படியும் வேலை வாங்கலாம்’னு சொன்னார் பா.விஜய். இயக்குநர் சொல்வதை நடிக்கும் கதாநாயகர்கள்தான் இப்போதைய தேவை. இயக்குநர் சொல்வதைச் செய்தார் பா.விஜய்!''

''படம் பார்த்துட்டு முதல்வர் கருணாநிதி என்ன சொன்னார்?''

''கதை, வசனத்தோடு சரி... மற்றபடி படம் சம்பந்தமான எந்த விஷயத்திலும் கலைஞர் தலையிடவில்லை. இரண்டு இரண்டு வரிகளில் அழகான வசனங்கள் பளிச்சுனு ஈர்க்கும். முழுப் படத்தையும் பார்த்த கலைஞர், 'தமிழ்ப் படம் எடுப்பேனு பார்த்தா இங்கிலீஷ் படம் எடுத்திருக்கியே!’ன்னு சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தது!''

''50 படங்கள் இயக்கிவிட்டீர்கள்... நீங்கள் நினைத்ததைச் சாதித்த திருப்தி இருக்கிறதா?''

''எனக்கும் சினிமாவுக்கும் துளி சம்பந்தம் கிடையாது. நான் இயக்குநர் ஆனதே ஒரு விபத்து. மும்பையில் வளர்ந்தவன் நான். கே.பாலசந்தர் சார் 'ஏக் துஜே கேலியே’ படத்தை இயக்கும்போது, மும்பை அலுவலகத்தில் அக்கவுன்ட்ஸ் பார்ப்பதற்காகச் சேர்ந்தேன். முதல் நாள் ஷூட்டிங்கில் கமல், ரதிக்கு இந்தி உச்சரிப்பு சொல்லித் தர்ற ஆள் வரலை. உடனே என்னைக் கூப்பிட்டு அனுப்பினாங்க. வந்த வேலை முடிஞ்சதும் திருப்பி அனுப்பாம ஷூட்டிங் ஸ்பாட் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார் கே.பி சார். அப்படியே உதவி இயக்குநர், துணை இயக்குநர்னு முன்னேறினேன். பத்து வருட நட்புக்குப் பரிசாக 'சத்யா’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார் கமல்ஹாசன். ரஜினி சாரின் 'அண்ணாமலை’ படத்தை முதலில் வசந்த்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி சில காரணங்களால் அவர் விலக, கே.பி சார் என்னை இயக்கச் சொல்லிட்டார். ரஜினியே விரும்பிக் கொடுத்ததுதான் 'பாட்ஷா’ பட வாய்ப்பு!''

மேலும் படங்களுக்கு...

''தமிழ் சினிமாவில் பஞ்ச் டயலாக் டிரெண்ட் ஆரம்பிச்சதே உங்க படங்களில்தான். ஆனா, இப்போ முதல் படத்திலேயே பல நடிகர்கள் பொறி பறக்க பஞ்ச் டயலாக் பேசுறாங்களே?''

''பஞ்ச் டயலாக்கை சப்போர்ட் பண்ற அளவுக்குக் கதை ஸ்டிராங்கா இருக்கணும். 'பாட்ஷா’வில் 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ டயலாக் படத்தில் நாலே இடத்தில்தான் வரும். ஆனால், அது இப்பவும் ரசிகர்கள் மனசுல பதிஞ்சிருக்கு. காரணம், அழுத்தமான காட்சிகளும் பரபர பில்ட்-அப்பும்தான். கதையில் டெம்போ சூடு பிடிச்ச பிறகுதான் பஞ்ச் டயலாக் வரணும். முதல் ஸீனிலேயே பஞ்ச் டயலாக் பேசினால், அது நிச்சயம் எடுபடாது!''

படம் : என்.விவேக்