Published:Updated:

சிம்புவோடு ஆல் இஸ் வெல்!

நா.கதிர்வேலன்படம் : கே.ராஜசேகரன்

சிம்புவோடு ஆல் இஸ் வெல்!

நா.கதிர்வேலன்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ன்றைய தேதிக்கு கோடம்பாக்கத்தின் 'டைரக்டர்ஸ் ஆக்டர்’ ஜீவா தான்!

 ஜீவாவுக்குள் ஒரு 'கோ’ இருப்பது உண்மைதான். அவரே எடுத்த அழகழகான புகைப்படங்கள் அலங்கரிக்கும் அறையில்  சந்தித்தேன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'நீதானே என் பொன்வசந்தம்’னு கௌதம் உங்களை எப்படி ஃபிக்ஸ் பண்ணார்?''

'' 'நடுநிசி நாய்கள்’ படத்துக்குப் பிறகு அழகான ஒரு லைஃப் சைஸ் படம் பண்ணணும்னு கௌதம் சார் நினைச்சு இருக்கார். அப்போ மனசுல தோணின ஸ்க்ரிப்ட்டுக்கு நான் கச்சிதமாப் பொருந் துறதா சந்திச்சப்போ சொன்னார். கதையைக் கேட்டப்போ, எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான காதல் நாட்களின் அன்புப் பரிமாற்றம், சின்னச் சின்ன சண்டைகள், சமாதானம், செல்லக் கொஞ்சல்கள் எல்லாமும் ரீவைண்ட் ஆச்சு. 'விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை விட இதில் எமோஷன்ஸ் இன்னும் அழகா இருக்கும். காதல் கலெக்ஷன்களில் 'நீதானே என் பொன்வசந்தம்’ மிஸ் பண்ணாம இடம் பிடிக்கும்!''  

சிம்புவோடு ஆல் இஸ் வெல்!

'' 'இந்த வருடத்தின் மிகச் சிறந்த நடிகன் ஜீவாதான்’னு விஷால் மனம் திறந்து பாராட்டி இருக்காரே?''

''அது அவர் மனசு. இப்படி வெளிப்படையா சொல்ல எனக்கே மனசு வருமானு தெரியலை. விஷால் என் பத்து வருஷ நண்பன். என் வெற்றியில் சந்தோஷப்படுபவன். ரவி, ஆர்யா, விஷால்... யாருக்கும் கள்ளங்கபடமே கிடையாது. எல்லாமே பாசிட்டிவ்வா நடக்கக் காரணம், எங்களுக்குள் எந்தப் போட்டி, பொறாமையும் இல்லை.''

''ஆர்யா, விஷால், ரவி எல்லாம் உங்க தோஸ்த் ஆச்சே... அடிக்கடி சந்திப்பீங்களா?''

''எங்களைச் சேர்த்துவெச்சது கிரிக்கெட். இப்போ நாங்க ரொம்பவே பெர்சனல் ஃப்ரெண்ட்ஸ். ரவி அருமையான நண்பன். நாங்க சேர்ந்தா அங்கே கலாட்டாதான். எங்க எல்லாரையும் அதட்டி மிரட்டி வழிக்குக் கொண்டுவர்ற பொறுப்பு விஷாலுக்கு. ஆர்யா எப்பவும் செம சேட்டை. எதுக்குமே பதற்றப்பட மாட்டான். ஒரு பால்ல ரெண்டு ரன் எடுக்கவேண்டி இருக்கும். நாங்க பதறிக்கிட்டு இருப்போம். 'மச்சான்... லெக் பீஸ்வெச்சு ஒரு பிரியாணி சொல்லேன்’னு கூலா சொல்வான். 'பீட்ஸா ஆறிடும். சாப்பிட்டு வந்து பார்த்துக்கலாம்’னு அடம்பிடிப்பான். ஆனா, பேட்டைக் கையில் பிடிச்சு இறங்கிட்டா, விளாசித் தள்ளிருவான். 'இப்படி விளையாட்டுத்தனமா இருக்கானே’னு பார்த்தா, இப்போ சினிமாவில் பிரமாதமா ஒரு இடத்தைப் பிடிச்சிட்டான். 'எப்படா  வெள்ளிக் கிழமை வரும்... பசங்களைப் பார்ப்போம்’னு மனசு துடிக்கிற அளவுக்கு நாங்க எல்லோரும் செம தோஸ்த். அவனுங்களைப்பத்தி நினைக்கிறப்பலாம், 'என் ஃப்ரெண்ட்ஸைப் போல யாரு மச்சான்’னு எனக்கு நானே காலரைத் தூக்கிவிட்டுக்குவேன்!''

''வாழ்க்கையில் 'ஆல் இஸ் வெல்’னு சொல்றீங்க... அது சிம்புவுடனான மனஸ்தாபத்தையும் சேர்த்துதானா?''

சிம்புவோடு ஆல் இஸ் வெல்!

''என்ன சார் பெரிய சண்டை? ஏதாவது ஒரு வார்த்தை தப்பாத் தெரிஞ்சிருக்கலாம். அவ்வளவுதான். சிம்பு 'நண்பன்’ பார்த்துட்டு எனக்கு வாழ்த்து தெரிவிச்சார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. என் பிறந்த நாளுக்கும் வாழ்த்து சொன்னார். ஆமா... இப்போ நிஜமாவே ஆல் இஸ் வெல்!''

''உங்களைப் பத்தி 'கிசுகிசு’வே வர்றதில்லையே, எப்படி?''

''ரொம்ப சிம்பிள். யார் பின்னாடியும் போறதில்லை! (சிரிக்கிறார்). எனக்கு கேரியரைவிடவும் குடும்பம் முக்கியம். பார்த்துப் பார்த்துக் காதலிச்ச பொண்ணு. எப்பவும் பக்கத்தில் இருந்து ஒரு நண்பன் மாதிரி அன்பு செலுத்துகிற மனைவி. நான் குடும்பத்தை கோயில் மாதிரியே நினைப்பேன். எம்.பி.ஏ. படிச்சுட்டு, குழந்தையையும் என்னையும் கவனிச்சுக்கிட்டு, என் ரெஸ்டாரென்ட்டையும் நடத்திக்கிட்டு, அப்பா - அம்மாவுக்கும் பிடிச்ச மாதிரி இருக்கிற பொண்ணுக்கு நான் என்ன செய்ய ணும்? உண்மையா இருக்கணும் இல்லையா? அதான் இருக்கேன்!''