Published:Updated:

தமன்னான்னா வம்பு... அனுஷ்கான்னா அன்பு!

கார்த்தி கணக்குஇர.ப்ரீத்தி

பிரீமியம் ஸ்டோரி
##~##
'கா
பி வித் கார்த்தி?!’ சில எத்திராஜ் ஏஞ்சல்களுக்கு மெசேஜ் அனுப்பினோம். 'எங்கே... எப்போ?’ என்று உடனே குவிந்தன ரிப்ளை பட்டர்ஃப்ளைகள்!

 சத்யம் தியேட்டரின் 'ப்ளர்’ கேமிங் ஸோன். ''கார்த்தி வந்தஉடனே ரோஸ் கொடுத்து புரபோஸ் பண்ணப் போறேனே!'' என்று கண் இமைகளைப் படபடக்கவிட்டார் வந்தனா.

''ஹலோ மச்சான்... இந்த விஷயம் உன் ஆளுக்குத் தெரியுமா?'' என்று ஐஸ்வர்யா கடுப்பு கவுன்ட்டர் கொடுக்க, மற்றவர்கள் ''ஹோய்!'' என்று கைதட்டி ஆரவாரிப்பதற்கும் கார்த்தி என்ட்ரி கொடுப்பதற்கும் சரியாக இருந்தது.

''என்ன கேர்ள்ஸ்... ஏதோ ரோஸ், புரபோஸ்னு வார்த்தைகள் காதுல விழுந்துச்சு!'' என்று தனது டிரேட் மார்க் சிரிப்புடன் கேட்டார் கார்த்தி.

''ஆங்... இதுவரை உங்களுக்கு எத்தனை பொண்ணுங்க ரோஸ் கொடுத்து புரபோஸ் பண்ணியிருப்பாங்கன்னு ஒரு கணக்கெடுப்பு நடத்திட்டு இருந்தோம். வந்துட்டீங்க... நீங்களே சொல்லுங்க மிஸ்டர் ஹாண்ட்சம்?'' என்று சமாளித்தார் ஸ்ருதி.

தமன்னான்னா வம்பு... அனுஷ்கான்னா அன்பு!

''ஐயோ, எனக்கும் கேர்ள்ஸுக்கும் எப்பவுமே ஏணி வெச்சாலும் எட்டாதுப்பா. நான் பாவம்... அப்பாவி. எனக்கு வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க!'' என்று ஜகா வாங்கினார் கார்த்தி.

''ஹய்யய்யோ... அப்ப தமன்னா வாழ்க்கை!'' என்று அதிர்ச்சியுடன் கேட்டார் ஸ்வாதி.

''ஏங்க, நான் எப்பங்க தமன்னாவுக்கு வாழ்க்கை கொடுக்குறேன்னு சொன்னேன். எதாவது எக்குத்தப்பா பத்தவெச்சிறாதீங்க!'' என்று அலர்ட் ஆனார் கார்த்தி.

''தமன்னா கூட லவ் இல்லைன்னு சொன்னா நம்பலாம். ஆனா, லவ்வே இல்லைன்னு சொன்னா நம்ப முடியாது கண்ணு!'' என்று விழிகளால் மிரட்டினார் காயத்ரி.

தமன்னான்னா வம்பு... அனுஷ்கான்னா அன்பு!

''அட... அது பெரிய சோகக் கதைங்க. நான் ப்ளஸ் டூ வரை படிச்சது எல்லாமே பாய்ஸ் ஸ்கூல்தான். வாசல்ல நின்னு எதிர் பஸ்ஸ்டாப் பொண்ணுங்களை சைட் அடிக்கிறோம்னு எங்க பிரின்சிபல் ஸ்கூல் நேரத்தையே மாத்திட்டார். இதுக்கு நடுவுல எங்கே போய் லவ் பண்றது. 'பருத்திவீரன்’ல பிரியாமணிகிட்ட நான் காதல் சொல்ற காட்சி யில் சொதப்புனதைப் பார்த் துட்டு, 'இவன் ஓவரா வழியு றான்டா. அதையே ஸீனா வெச்சுரலாம்’னு முடிவுஎடுத்தார் அமீர் சார்!'' என்று கூற... கிக்கிபிக்கி சிரிப்புகள்!

''உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் யார் கார்த்தி?'' என்று திடீர் உரிமையில் ஒருமைக்குத் தாவினார் ஸ்ருதி.

''முன்னாடி அமலா, அப்போ குஷ்பு, இப்போ அனுஷ்கா!''

''வீட்ல யார் செல்லம்... சூர்யாவா... நீங்களா?'' உர்சிலாவின் கேள்வி.

''அண்ணன் எப்பவுமே அம்மா செல்லம். நான் அப்பாகூடவே அதிகமா வளர்ந்ததால, அவர்கூடத்தான் எனக்கு சிங்க் ஆகும்!''

''உங்க வீட்டு வாண்டு களைப்பத்திச் சொல்லுங்க?'' என்று திசை திருப்பினார் வந்தனா.

''அண்ணன் குழந்தைங்க தியா, தேவ் ரெண்டு பேருக் கும் இப்போதைக்கு நான்தான் க்ளோஸ்

தமன்னான்னா வம்பு... அனுஷ்கான்னா அன்பு!

ஃப்ரெண்ட். 'சித்தப்பா’னு ஒரு தடவைகூட  கூப்பிட்டதே கிடையாது. 'கார்த்தி’ன்னு அதிகாரமாத் தான் கூப்பிடுவாங்க. செம வாலுங்க! அப்புறம் கேர்ள்ஸ்... அடுத்து உங்களை 'சிறுத்தையா’ வந்து அட்டாக் பண்றேன்! என்கிட்டயே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. உங்க சாட்டிங், டேட்டிங், ஷாப்பிங் பத்திலாம் கொஞ்சம் பேசலாமே'' என்று கார்த்தி சொல்ல, ''பேசலாலாலாம்... ஆனா...'' என்று அந்தப் பெண்கள் அனைவரும் நம் பக்கம் பார்த்து ராகம் போட...

''ஆங், புரிஞ்சுருச்சு... புரிஞ்சுருச்சு!'' என்று குறிப்பறிந்து செருமிக்கொள்கிறார் கார்த்தி. ''கூடவே சுத்துறியே செவ்வாழை... பெர்சனல் விஷயம் பேசுறப்பவாச்சும் இடத்தைக் காலி பண்ணலாம்ல'' என்று கண்சிமிட்ட... அதற்கு மேல் அங்கே நமக்கு என்ன வேலை!

படங்கள் : கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு