படிக்கப் பிடிக்காத 'கிரிக்கெட்’ பித்து மகனுக்கும் அவனைப் படிக்கவைக்கப் போராடும் மிடில் கிளாஸ் அப்பாவுக்கும் இடையிலான 20:20தான் 'தோனி... நாட் அவுட்.’

அரசாங்க கிளார்க்கான பிரகாஷ்ராஜின் மகன் ஆகாஷ் பூரிக்கு (அறிமுகம்) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி போல ஆக வேண்டும் என்பதே கனவு. ஆகாஷின் கனவுக்குக் குறுக்கே நிற்கிறது பானிபட் போர்கள், 17-வது வாய்பாடுகள் மற்றும் பள்ளியின் 'சென்டம் ரிசல்ட்’ கெடுபிடி! படிப்பு வராத மகனைக் கோபத்தில் பிரகாஷ்ராஜ் அடிக்க, கோமா நிலைக் குச் செல்கிறான் ஆகாஷ். மகனின் கனவை உணர்ந்து, அவனது கோமா நிலைக்குக் காரணமான கல்விமுறைக்கு எதிராகப் போராடுகிறார் பிரகாஷ். ஆகாஷ§க்கு நினைவு திரும்பியதா, அவன் கனவு நிறைவேறியதா... பிரகாஷ்ராஜின் போராட்டம் வென்றதா என்பது க்ளைமாக்ஸ்!

மராட்டியப் படமான 'ஷிக்ஷனாச்சிய ஆய்ச்சா கோ’வின் ரீ-மேக் இது. சமூகத்துக்கு அதிஅவசியத் தேவையான செய்தி சொல்ல மெனக்கெட்டதற்காகவே, 'இயக்குநர்’ பிரகாஷ்ராஜைக் கட்டித் தழுவி வரவேற்கலாம்.

'எல்லாருக்கும் எல்லாம் தெரியணும்னு சொல்றீங்கள்ல... எங்கே நீங்க சொல்லுங்க... 17 இன்ட்டு 8 எவ்வளவு? தெரியலைல்ல... அப்ப நீங்க ஏறி நில்லுங்க பெஞ்சு மேல!’ என்று வகுப்பு ஆசிரியரிடம் கொதிக்கும்போதும், 'நான் என் மகனை அடிக்கலை சார்... என்னை எல்லாரும் அடிக்கவெச்சுட்டாங்க!’ என்று டி.வி. ஷோவில் கதறும்போதும், தான் ஒரு 'சீஸன்டு ஆக்டர்’ என்பதை உணர்த்துகிறார் பிரகாஷ்ராஜ். 'எனக்கு என்ன பிரச்னைனு உங்களுக்குத் தெரியுமா?’ என்று பிரகாஷ்ராஜிடம் குமுறும்போதும், பிறகு அவருக்கு உதவும் சமயங்களிலும் ராதிகா ஆப்டேவின் (அறிமுகம்) கண்களே கச்சிதமாகக் காய் நகர்த்திவிடுகின்றன.

கிரிக்கெட் என்றால் சுறுசுறுப்பு, படிப்பு என்றால் அலுப்பு என முன் பாதியில் துறுதுறுப்பு காட்டும் ஆகாஷ், பின் பாதியில் கோமா நோயாளியாக உணர்ச்சிகளே காட்டாமலும் அசத்தி இருக்கிறான். பூவாக மலர்ந்த தருணத்தில் வெட்கப் பூரிப்பு காட்டும் இடத்தில் வசீகரிக்கிறார் பிரகாஷ்ராஜின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரீதேஜா. பார்வையின் அதட்டல், மிரட்டல், நக்கல்களிலேயே ஸ்கோர் செய்கிறார் 'கந்து வட்டி கனி’ முரளிஷர்மா.

'இன்டிபென்டன்ஸ்ங்கிற வார்த்தைக்கு நீங்க ஸ்பெல்லிங்தான் சொல்லித்தர்றீங்க. அர்த்தம் சொல்லித்தர்றதில்லையே?’, 'பேன்ட் சட்டை போட்டவங்கள்லாம் ஆம்பளை கிடையாது. இப்பல்லாம் பொம்பளைங்களே நிறைய அதுதான் போடுறாங்க!’ போன்ற த.செ.ஞானவேலுவின் வசனங்கள்

படத்துக்கு அழுத்தம் சேர்க்கின்றன.

ஆகாஷ§க்குப் படிப்பு வரவில்லை என்ற ஒரே விஷயத்துக்குள் சுற்றிச் சுழலும் திரைக் கதையை இன்னும் இறுக்கி இருக்கலாம். மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையைக் காட்டும் காட்சிகளிலும் யதார்த்தத்தைவிடப் புலம்பல்களே எஞ்சி நிற்கின்றன. ஒரே ஒரு டி.வி. ஷோவில் பிரகாஷ்ராஜ் சொன்னதைக் கேட்டு மாநிலம் முழுக்க மக்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பதும்... அந்த முதல்வர் முன் பிரசாரமும் செம சீரியஸ் டிராமா!

இளையராஜா இசையில் 'வாங்குற காசுக்கும்..’ பாடல் மட்டுமே மங்கலாக நினைவில் நிற்கிறது.

' 'படி படி’ என்று அதட்டும் முன் உங்கள் குழந்தைக்கு என்று ஒரு மனசு இருக்கிறது. முதலில் அதைப் படியுங்கள்!’ என்ற நல்ல விஷயத்தை 'மிக மெதுவாகச்’ சொல்லியிருந்தாலும், இந்த தோனி 'நாட் அவுட்’தான்!