''எப்பவுமே மனித உணர்வுகள்தான் என் சினிமாவில் பிரதானம்! ஏமாற்றப்பட்ட ஒருவனின் பாதிப்பு, அவனோட நியாயமான ரௌத்ரம்தான் இந்த 'தாண்டவம்’. 'தெய்வத் திருமகள்’ படத்துக்காக விக்ரமுக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி, விருதுகளின் அணிவகுப்பை ஆரம்பிச்சுவெச்சிருக்கு விகடன். அந்த லெவலுக்கு இன்னும் மேலே, விக்ரமுக்குச் சவால் கொடுக்கிற படமா 'தாண்டவம்’ இருக்கும். நம் அனைவரின் நெருக்கடிச் சூழலையும் 'தாண்டவம்’ பேசும்!'' - சுவாரஸ்யம் சொல்லி ஆரம்பிக்கிறார் விஜய்.

விக்ரம், அனுஷ்கா, சந்தானம், நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ் என 'ஃபீல் குட்’ கூட்டணியுடன் தாண்டவமாடிக் கொண்டு இருக்கிறார் விஜய்.

'' எதிர்பார்த்த அளவுக்கு 'ராஜபாட்டை’ போகாத சூழல்ல, இப்போ விக்ரமுக்கு 'நிச்சய வெற்றி’யைத் தர வேண்டிய கட்டாயத்தில் 'தாண்டவம்’ இருக்கு... அந்த பிரஷரை உணர்றீங்களா?''

''ஒரு படம் வெற்றியோ தோல்வியோ... அது விக்ரம் சாரைக் கொஞ்சமும் பாதிக்காது. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, அவருடைய சினிமா அக்கறை என்னை ஆச்சர்யப்படுத்தும். 'தெய்வத் திருமகள்’ ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கிட்டு இருந்த சமயத்தில், ஒருநாள் ஸ்பாட்டுக்கு வந்த விக்ரம் ரொம்ப சோர்வா இருந்தார். முகத்தில் துளிச் சிரிப்பு இல்லை. 'சார்... ஏதாவது கோபமா?’னு போய் கேட்டேன். 'இன்னிக்கு நிலா என்னைப் பிரியுதுல்ல... அதான்’னு சொல்றார். ஒவ்வொரு படத்தையும் ஒரு ஜனனமாகத்தான் நினைக்கிறார் அவர்.

'தெய்வத்திருமகள்’ படத்தில் ஒரு அவதாரம் எடுத்தார். இதில் வேறொரு அவதாரம். இதை நான் ரொம்ப நம்பிக்கையாச் சொல்றேன்!''

''அஜீத், விக்ரம், ஆர்யானு டாப் ஸ்டார்களோட நெருங்கிப் பழகி இருக்கீங்க... அவங்க இயல்புகளைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்?''

''அஜீத் அருமையான நடிகர். ஆனால், அதைவிடவும் மிகச் சிறந்த மனிதர். அவர் கிட்ட நிறைய கத்துக்கலாம். அவர் மனசுக் குப் பிடிச்சிட்டா, நாம எதிர்பார்க்காத இடத்தில் நம்மைவெச்சுக் கொண்டாடுவார். எங்கே, எப்போ படத்தைப் பார்ப்பார்னு தெரியாது. நான் இயக்கிய படங்கள் வெளியானதும் அதைப் பார்த்துட்டுப் பேசிடுவார். மனசைத்தொட்டு ஆறுதல் சொல்லி, தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கிற மாதிரி இருக்கும் அவரோட ஒவ்வொரு வார்த்தைகளும்! ஆர்யா சூப்பர் பாய். 'தெய்வத்திருமகள்’ புரமோஷனுக்கு எல்லாம் என்கூட வந்து நின்னு தோள் கொடுத்தான். காரணமே இல்லாம 'பின்னிட்டடா’னு சும்மா பாராட்டிக்கிட்டே இருப்பான்.

விக்ரம் ரொம்பப் பிடிக்கும். அதிகம் பழகிட்டேன். வீட்ல அன்பான காதல் மனைவி, குழந்தைகள்னு கலகலப்பா இருப்பார். லவ்லி ஹ்யூமன்!''

''உங்களுக்கும் காதல் திருமணம்தான்னு ஒரு பேச்சு இருக்கே... அமலா பால் உங்களை ஃபாலோ பண்றாங்க... நீங்க அவங்களைப் பின்தொடர்றீங்க... எது சரி?''

''அமலா பால் நல்ல சிநேகிதி. சின்ன வயசுலயே நிறைய மெச்சூரிட்டியோடு இருக்கிற பொண்ணு. நானும் நிறைய விளக்கம் சொல்லிட்டேன். ஆனாலும், இந்தச் செய்தி என்னைத் தொடர்ந்து வருது!''

''ஓ.கே. நீங்க ஃப்ரெண்ட்லியான நபர்தான். ஆனா, அமலா பால் ஏர்போர்ட்ல இருந்து நேரா உங்க அலுவலகம்தான் வர்றாங்க. உங்க வீட்டு விசேஷத்துக்கு முதல் ஆளா வந்து நிக்கிறாங்க.

உங்களைப் பத்தி பேசினாலே சந்தோஷமாக் கேட்கிறாங்க... விசேஷம் இல்லாமலா?''

''ரெண்டு பேரும் நல்லாப் பேசிக்குவோம். ஏன்... நான் ஏமி ஜாக்சனோடும்தான் நல்ல பழக்கத்துல இருக்கேன். யார்கிட்டயும் நான் மரியாதையாப் பழகுவேன். தப்பான எண்ணம் எதுவும் இருக்காது!''

''காதலை யாரும் தப்புனு சொல்வாங்களா என்ன? இப்படி மறுத்த எல்லாருமே இப்ப கல்யாணம், குழந்தைனு சந்தோஷமா இருக்காங்களே...''

''இருக்கலாம். ஆனா, எனக்கு இப்போ எதுவும் தெரியலை. அமலா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். நம்பிக்கையான தோழி. அவ்வளவு தான். இப்போதைக்கு 'தாண்டவம்’ பத்திதான் மனசுல ஓடிட்டே இருக்கு. உங்களுக்காக ஒரு ஸ்கூப் சொல்றேன்... விஜய் என்னைக் கூப்பிட்டு, 'சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு சொன்னார். உறுதியான செய்தி. நான் அமெரிக்கா போயிட்டுத் திரும்பி வந்ததும்... 'விஜய்யை இயக்குகிறார் விஜய்’!''