Published:Updated:

பாவனா எனக்கு படா தோஸ்த்!

ம.கா.செந்தில்குமார், படங்கள் : சந்தோஷ்ராஜ்

பிரீமியம் ஸ்டோரி
##~##
''த
மிழில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும்,  'இளைஞன்’ படத்தில் இருந்துதான் என் கணக்கு ஆரம்பம்னு சொல்லலாம். அந்த அளவுக்கு பவர் ஃபுல் கேரக்டர் எனக்கு. நிச்சயம் 'இளைஞன்’ இன்னிங்ஸ் என் சினிமா கேரியரில் முக்கியமான படம்!''- கொஞ்சு தமிழில் கதைக் கிறார் சோட்டாணிக்கரை சேச்சி ரம்யா நம்பீசன்!

 ''அப்பப்ப வந்துட்டுப் போறீங்க... தமிழ்ல ஹீரோயின் பஞ்சம் இருக்குற நேரத்தைப் பயன்படுத்திக்க மாட்டேங்குறீங்களே?''

பாவனா எனக்கு படா தோஸ்த்!

'' 'ராமன் தேடிய சீதை’யில் நல்ல கேரக்டர்தான் எனக்கு. ஆனா, அடுத்தடுத்து வந்த எல்லா வாய்ப்புகளும் அதே டிட்டோ அழுமூஞ்சி கேரக்டர்கள்தான். அதுல நடிச்சு பேரைக் கெடுத்துக் கறதுக்குச் சும்மாவே இருக்கலாம்னுதான் இருந்தேன். அப்படிக் காத்திருந்து கவர்ந்தது 'இளைஞன்’ வாய்ப்பு. நிச்சயம் என்னைப் பற்றிய அபிப்பிராயத்தை அந்தப் படம் மாத்தும். தமிழில் அழுத்தமான இடத்தைச் சீக்கிரமே பிடிப்பேன்!''

''ஆனா, தமன்னா, அனுஷ்கான்னு  கிளாமர் கிளிகள் மத்தியில் உங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா?''

''ஒரே ஆள் எவ்வளவு நாள்தான் கிளாமர் பண்ணிட்டே இருக்க முடியும்! ரசிகர்களுக்கு எப்பவும் ஒரு சேஞ்ச் தேவைப்படும். அப்போ நிச்சயம் எனக்கான ஸ்பேஸை நான் பிடிப்பேன். கதைக்குத் தேவைன்னா கிளாமரில் நானும் பவர் பெர்ஃபார்மன்ஸ் கொடுப்பேன். பரபரப்பா நிற்கக்கூட நேரம் இல்லாம நடிக்கிறதுக்கு எல்லாம் எனக்கு ஆசை இல்லை. கொஞ்சமாவது நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர் என்றால், அதைவிட டபுள் மடங்கு கிளாமர்கூட எனக்கு ஓ.கே-தான்!''

பாவனா எனக்கு படா தோஸ்த்!

''நடிகைகளில் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் யார்?''

''ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு... பாவனா! நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணிப்போம். கொச்சின், திரிச்சூர்னு நாங்க ஷாப்பிங் போகாத இடமே இல்லை. நான் நடிச்சு சமீபத்தில் வெளியான 'டிராஃபிக்’ படம் கேரளாவில் செம ஹிட். அதே போல திலீப், பாவனா காம்பினேஷனில் வந்த படமும் சூப்பர் ஹிட். ரெண்டு பேருக்குமே கொண்டாட்டமான நேரம் இது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு