. பூ.ஜா சோப்ரா... 'பொன்னர் சங்கர்’ படத்தின் இளவரசி! புனேவில் இருந்து தங்கத் தமிழ்நாட்டுக்குத் தரிசனம் தர வந்திருக்கும் பஞ்சாப் கோதுமை. 'மிஸ் இந்தியா 2009’ பட்டம் வென்ற ஐஸ் பெண்ணின் ஜில் குறிப்புகள் இங்கே... .
''தமிழக முதல்வரின் ஸ்பெஷல் அக்கறையில் உருவாகும் படத்தில் உங்களுக்கு முக்கியமான ரோல். அவரைப்பத்தி ஏதாவது தெரியுமா உங்களுக்கு?''

மேலும் படங்களுக்கு...

''அவரைத் தெரியாம இருக்குமா? இந்தியாவின் சீனியர் அரசியல்வாதிகளுள் அவரும் ஒருத்தராச்சே!ஆக்ச்சுவலி மிஸ் இந்தியா பட்டம் ஜெயிச்சதும் ஒரு ஆக்சிடென்ட்ல அடிபட்டுட்டேன். அதனால மீடியா பக்கம் எட்டிக்கூடப் பார்க்க வரலை. அப்புறம் தேறி வந்ததும் 'மிஸ்டர் மஸில்’, 'டாபர் ஹனி’ன்னு சில விளம்பரங்களில் நடிச்சேன். அதன் மூலமாகக் கிடைச்சதுதான் 'பொன்னர் சங்கர்’ வாய்ப்பு. இது கலைஞர் சாரோட 'கனவுப் படம்’னு சொன் னாங்க. படத்தில் எனக்கு இளவரசி கேரக்டர். புத்தகத்தில் மட்டுமே படிச்ச இளவரசி வாழ்க்கையை நிஜத்தில் வாழ்ந்து பார்க்க செம சான்ஸ். கலைஞர் சாருக்கு நன்றி!''

''எப்படி இருந்தது 'பொன்னர் சங்கர்’ அனுபவம்?''

''நான் வட இந்தியப் பொண்ணுங்கிறதால ரொம்பப் பயந்துட்டே இருந்தேன். ஆனா குஷ்பு, ஜெயராம், சினேகான்னு எல்லோருமே ஒரு குடும்பம் மாதிரி பழகி என்னைச் சகஜமாக்கிட்டாங்க. திருச்சியில்தான் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும். சென்னையில் இருந்து பஸ்ல போறப்போ எதாச்சும் விளையாடிக்கிட்டே இருப்போம். ரொம்பவே ஜாலியான அனுபவங்கள்!''

''உங்க குடும்பப் பின்னணி..?''

''நான், அக்கா, அம்மான்னு மூணே பேர்தான். நாங்க ரெண்டு பேருமே பெண்ணாப் பிறந்துட்டதால், அப்பா அம்மாவை விட்டுப் பிரிஞ்சுபோயிட்டார். நான்கு நாள் சிசுவான என்னையும், ஏழு வயசு அக்காவையும் தனி ஆளா அம்மா சிரமப்பட்டு வளர்த்திருக்காங்க. 'நீங்க எந்தப் புள்ளையை வேணாம்னு சொன்னீங்களோ... அந்தப் பொண்ணு ஒருநாள் எனக்குப் பெருமை தேடித் தருவா’ன்னு அம்மா,

அப்பாகிட்ட சபதம் போட்டிருக்காங்க. நான் 'மிஸ் இந்தியா’ பட்டம் ஜெயிச்சதை அப்பா கேள்விப்பட்டாரான்னு தெரியலை. ஆனா, ஒருநாள் அவர் வெட்கப்படுற மாதிரி ஜெயிச்சுக் காட்டணும்!''

''ஸாரிங்க... வேற என்ன சோகம் இருக்கு உங்க வாழ்க்கையில?''

''ஆங்... இருக்கே! சினிமாவுக்கு வந்தாச்சு. ஆனா, இதுவரை ஒரு கிசுகிசுகூட வரலையே! ஏதாவது இருந்தா நீங்க கொளுத்திப் போடுங்க. நானும் அதையே மெய்ன்டெய்ன் பண்ணிக்கிறேன்!'' -

குறும்பாகச் சிரிக்கிறார் பூஜா சோப்ரா!