என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

சினிமா விமர்சனம் : அம்புலி 3D

விகடன் விமர்சனக் குழு

##~##

ரு கிராமத்தையே வேட்டையாடிப் பசி தீர்க்கும் மனித மிருகமே... அம்புலி!

 பூமாடந்திபுரம் என்ற கிராம மக்கள், இரவு நேரத் தில் அருகில் இருக்கும்சோளக் காட்டுக்குள் செல்ல மாட்டார்கள். கோட்டை கட்டித் தடுத்தும் குறுக்கு வழியில் சென்ற பலர் உயிரை விடுகி றார்கள். காரணம், அந்தக் காட்டுக்குள் இருக்கும் அம்புலி. அந்த அம்புலி யார்... அம்புலியிடம் இருந்து கிராமத்தினர் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை!

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு 3டி படம். ஸ்டீரியோகிராஃபி 3டி தொழில்நுட்பத்துக்காக மெனக்கெட்டு இருக்கும் ஒளிப்பதிவாளர் சதீஷ§க்கும் இரட்டை இயக்குநர்கள் ஹரி சங்கர்- ஹரீஷ் நாராயணனுக்கும் பாராட் டுக்கள். படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த சோளக் காட்டுக் காட்சி மிரட்டல் ரகம். படத்தில் கதை இல்லை, அநேக இடங்களில் லாஜிக் இல்லை. ஆனால், கதை நடக்கும் காலம்,

சினிமா விமர்சனம் : அம்புலி 3D

இரவு நேர 3டி எஃபெக்ட், திகிலூட்டும் பின்னணி இசை ஆகியவை அம்புலியை ரசிக்கவைக்கிறது.

அஜெய்-சனம், ஸ்ரீஜித்-ஜோதிஷா காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் ஆங்காங்கே தொனிக்கும் 'என்னமோ போங்க’ நடிப்பு வேகத் தடை. திகில் படத் துக்கு ஏற்ற பின்னணி இசை மிரட்டலைக் கச்சிதமாக அளித்திருக்கிறது வெங்கட் பிரபு சங்கர், சாம்ஸ், சதீஷ், மெர்வின் சாலமன் கூட்டணி. 'ரோமியோ - ஜூலியட் காலத்துல இருந்தே ஹீரோயின் ரூம் வீட்டு மாடிலதான் இருக்கும்,’ 'ஊருக்கே ஊது பத்தி விக்குறவங்க நாங்க... எங்களுக்கே தூபமா’ என வசனத்தில் ஆங்காங்கே பன்னீர் தெளிக்கிறார்கள்.  

யாரையும் எவரையும் 'இவர் அம்புலியா?’ என்று சந்தேகிப்பது தான் படத்தின் ப்ளஸ். 10 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், கோகுல்நாத்தின் உடல்மொழி அபாரம். ஒரு பக்கம் சரிந்து, மரங்களின் மேல் பாய்ந்து நியான் டர்தால் மனிதனோ என்று சந்தேகிக்க வைக்கிறார்.

சினிமா விமர்சனம் : அம்புலி 3D

பார்த்திபன், படத்தின் திகில் கூட்டப் பயன்பட்டு இருக்கிறார். மிருகக் குழந்தை பிறக்கக் காரணமான கல்லூரி முதல்வரைக் கொல்லும் பார்த்திபன், அம்புலியைக் கொல்ல ஏன் க்ளைமாக்ஸ் வரை காத்திருக் கிறார்... சோளக் காட்டுக்குள்ளேயே சுற்றித் திரியும் பார்த்திபனை அம்புலி ஏன் கொல்லவில்லை என்பதெல்லாம் லகலக லாஜிக் ஓட்டைகள். மற்ற படங்களில் க்ளைமாக்ஸில் போலீஸ் வரும் என்றால், இங்கே சொல்லாமல்கொள்ளாமல் மிலிட்டரியே வருகிறது!  

ஆனாலும், கண் முன் நீளும் இரட்டைக் குழல் துப்பாக்கி, எதிரில் அசைந்து திகிலூட்டும் சோளக் கொல்லைப் பொம்மை, சின்னதாகப் பறந்து வந்து விழும் இலைகள், அந்த ராட்சஸ மிருகத்தின் பாய்ச்சல் என வித்தியாச 3டி அனுபவத்துக்காக லாஜிக்கைக் கப்பல் ஏற்றி விட்டு ஒருமுறை அம்புலியைப் பார்க்கலாம்!