. செ.ன்னை மற்றும் சென்னை சார்ந்த களங்களில் மட் டுமே நடித்துக்கொண்டு இருந்த தனுஷுக்கு... 'ஆடுகளம்’தான் ஆசிட் டெஸ்ட்!.
''ஒரு வார்த்தை, ஒரு வரிகூட டயலாக் பேச முடியாம சிரமப்பட்டேங்க. 'தண்ணி குடுங்க’ன்னு கேட்டாக்கூட சென்னை ஸ்லாங்கைத் தவிர்க்க முடியலை. 'ஆடுகளம்’ கதையை வெற்றிமாறன் சொன்னபோதே, 'அந்தப் படத்துல நடிக்கிறது விளையாட்டு இல்லை’னு புரிஞ்சது. ஒவ்வொரு டயலாக்கும், ஒவ்வொரு ரியாக்ஷனும் இதில் புதுசு. கமர்ஷியலாகவும், கிளாஸிக் ரசனையிலும் உருவாகும் ஒரு படத்தில் 'ஜஸ்ட் லைக் தட்’ நடிச்சுட முடியாது. ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி, 'கொஞ்சம் அவசரப்பட்டு இந்தப் படத்தில் கமிட் ஆகிட்டோமோ’னு தோணும். ஆனா, ராத்திரி ஷூட்டிங் முடிஞ்சு தூங்கப்போறப்போ, மனசுல ஒரு திருப்தி பரவும் பாருங்க... உயிரையே கொடுக்கலாம் சார்! 'ஃபிலிம் மேக்கர்’னா ஒவ்வொரு படத்திலும் அவங்க வளர்ச்சி தெரியணும். நிச்சயம் 'பொல்லாதவன்’ படத்தில் பார்த்த வெற்றிமாறன் இவர் இல்லை. தினமும் நேர்ல பார்த்துட்டுத்தான் இருக்கேன். ஆனா, எப்படியோ... எங்கேயோ வித்தியாசம் காட்டிடுறார்!''

''ஐந்தாவது தடவையா விஜய் படமும் உங்க படமும் சேர்ந்து ரிலீஸ் ஆகுது... இந்தப் பொங்கல் யாருக்கு ஜாக்பாட்?''

''எனக்கே ஆச்சர்யமாவும் பெருமையாவும் இருக்கு. விஜய் என்னைவிட சீனியர். அதிகவெற்றி களைக் கண்டவர். ஸ்கூல் படிக்கிறப்பலாம் நான் கட் அடிச்சுட்டுப் போறது, அவர் படங்களாகத் தான் இருக்கும்.

'அது ஒரு கனாக்காலம்’ - 'திருப்பாச்சி’, 'பொல்லாதவன்’ - 'அழகிய தமிழ்மகன்’, 'யாரடி நீ மோகினி’ - 'குருவி’, 'படிக்காதவன்’ - 'வில்லு’ வரிசையில் இப்போ 'ஆடுகளம்’ - 'காவலன்’!

ரெண்டு பேர் படங்களும் ஜெயிக்கணும். அதுக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்!''

''காமெடியில் கவனம் செலுத்திட்டு, இப்போ சட்டுனு சீரியஸ் சினிமா பக்கம் திரும்பீட்டீங்க?''

''சினிமாவில் காமெடியா நடிப்பதுதான் ரொம்பக் கஷ்டம். டைமிங் செட் ஆகாமல் ஆரம்பத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டு போயிட் டேன். இதுவரை நான் கஷ்டப்பட்டு நடிச்ச படம்னா, 'திருவிளையாடல் ஆரம்பம்’னு சொல்லலாம். காமெடிக்குத்தான் உயிரைக் கொடுத்து நடிக்கணும். ஒரு கதையில் இயல்பாவே காமெடி இருக்கிற மாதிரி பார்த்துக்கிறது அதைவிடக் கஷ்டம்!''

''நீங்களும் சிம்புவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் 'சோலோ ஹீரோ’க்களா நடிக்க ஆரம்பிச்சீங்க... இப்ப ரெண்டு பேர்ல 'யார் பெஸ்ட்’னு மனசுவிட்டுச் சொல்ல முடியுமா?''

''இந்தக் கேள்விக்கு இப்ப பதில் அவசியமா? இரண்டு பேருக்கும் இப்ப தனி அடையாளம் இருக்கு. நிச்சயம் அவரும் திறமையானவர்தான். அல்ட்டிமேட்டா... படம் ஓடணும், தயாரிப்பாளர்கள் சந்தோஷப்படுற அளவுக்கு முதலீடு திரும்ப வரணும். அதுதான் முக்கியம். இதில் 'யார் பெஸ்ட்’ங்கிற கேள்விக்கு, அந்தந்தத் தயாரிப்பாளர் பதில் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு ரேஸ் நடந்தா, அந்த ரேஸில் நான் இல்லை. அதில் கலந்துக்கிற பொறுமை எனக்குக் கிடையாது. எனக்குத் தொழில், நடிப்பது மட்டும்தான்!''