என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

சினிமா விமர்சனம் : காதலில் சொதப்புவது எப்படி

விகடன் விமர்சனக் குழு

##~##

ண் மனசு - பெண் மனசு... முட்டல் மோதலும் ஒட்டல் காதலும்தான் கதை!

 கல்லூரி நண்பர்கள் சித்தார்த் - அமலா பால் இடையிலான 'ஆல் இஸ் வெல்’ காதலில் ஈகோ யுத்தங்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். 'காதலில் சொதப்பு வது எப்படி?’ என்று முக்கால்வாசிப் படம் சொல்ல, 'காதலைத் தக்கவைப்பது எப்படி?’ என்பதைச் சொல்கிறது க்ளைமாக்ஸ்.

சின்ன எஸ்.எம்.எஸ். ஒன் லைன். அதை சீனுக்கு சீன் தியேட்டரே சிரித்து ஆர வாரிக்கும்படி திரைக்கதை அமைத்தது ப்ளஸ். சில நிமிடக் குறும்படத்தை ஒரு முழு நீள சினிமாவாக மாற்றும் பரிசோதனையில் அறிமுக இயக்குநர் பாலாஜி மோகனுக்கு இது வெல்டன் வெற்றி!  

சினிமா விமர்சனம் : காதலில் சொதப்புவது எப்படி

காதலியிடம் கலர் கலர் பல்புகள் வாங்கும் அசட்டுக் காதலனாக சித்தார்த்... செம செம! தோழியிடம் கண்ணியம் காப்பதும், காதல் துளிர்த்ததும் உரிமை எடுத்துக்கொள்வ தும், பிறகு கடுப்படிப்பதுமாக... பிரமாதம் சித்து.  

'ஹோம்லி கம் மாடர்ன்’ ஏஞ்ச லாக அமலா பால். நினைத்தவாக்கில் கண்ணீர் அணையைத் திறப்பது, அப்பா-அம்மாவின் செகண்ட் இன்னிங்ஸ் காதலுக்குத் தூது போவது, 'ஏன் உன் ஃபேஸ்புக்ல இத்தனை பொண்ணுங்க ஃப்ரெண்டா இருக்காங்க?'' என்று சந்தேகப்படுவது என மின்மினிக் கண்மணி!  

மனைவிக்குக் காதல் கடிதம் கொடுத்த கம்பீரத்தோடும் வெட்கப் பெருமிதத்தோடும் நடக்கும் ஒரு காட்சி போதும்... வெல்கம் சுரேஷ்! கணவனின் காதல் கடிதத்தை மகள் முன் அடக்கமாகப் படித்துவிட்டு,  சமையல் அறைக்குள் ஒவ்வொரு வரிக்கும் ரசித்துச் சிரித்து, வெட்கத்தில் சுருங்கி, சிணுங்கும்போது... சூப்பர் சுரேகா!

ஒவ்வொரு பெண்ணிடமும் காதல் சொல்லி அறை வாங்கும் அர்ஜுனன், 'அண்ணா’ என்றாலும் விடாமல் காதலிக்கும் விக்னேஷ், சித்தார்த்தின் ஃப்ரெண்ட்லி அப்பா ரவி ராகவேந்திரா, பெண்களின் மனசாட்சியாகக் கேள்வி கேட்கும் பூஜா, காதலர்களுக்குள் சந்தேகத்தைக் கிளப்பி கேப்பில் கெடா வெட்டும் பாலாஜி, ஒவ்வொரு செமஸ்டருக்கும் ஒரு பெண்ணோடு சுற்றும் சீனியர் பாபி என முழுப் படத்தையும் தாங்கி நிற்பது குட்டிக் குட்டிக் கதாபாத்திரங்கள்.

'ஆம்பளைங்களால அரை மணி நேரம் எதைப் பத்தியும் யோசிக்காம சும்மா இருக்க முடியும். ஆனா, பொண்ணுங்களால எதைப் பத்தியும் யோசிக்காம ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது!’ போன்ற 'ரண்டக்க ரண்டக்க’ காட்சிகள் சிரிப்பை வரவழைத்தாலும்... படம் முழுக்க, சித்தார்த்

சினிமா விமர்சனம் : காதலில் சொதப்புவது எப்படி

கேமராவைப் பார்த்து ஆண் மனசு, பெண் மனசு பற்றி லெக்சர் கொடுத்துக்கொண்டே இருப்பது... ஒரு கட்டத்துக்குப் பிறகு அலுப்பு. அமலா பாலின் பெற்றோருக்கு இடையிலான விவாகரத்து அத்தியாயம் அழுத்தமே இல்லாமல் கடக்கிறது!  

க்ரீட்டிங் கார்டு விஷ§வல்களால் படம் முழுக்க இளமை தெளித்திருக்கிறார் ஒளிப் பதிவாளர் நீரவ் ஷா. பின்னணி இசையில் மட்டுமே ஈர்க்கிறது தமனின் இசை.

இளைஞர்கள் மட்டுமல்ல; எல்லா வயதினரும் காதலில் சொதப்புகிறார் கள் என்பதைச் சொன்ன விதத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும்வைத்த 'சொதப்பல்’ டீமுக்கு  விகடனின் ஷொட்டுகள்!