Published:Updated:

அரசியல் பிரியாணி!

நா.கதிர்வேலன், படங்கள் : ஆர்.எஸ்.ராஜா

பிரீமியம் ஸ்டோரி
##~##
'ம
ங்காத்தா’ ஷூட்டிங் ஸ்பாட் டில் அஜீத்தும் விஜய்யும் சென்ற வாரம் சந்தித்துக்கொண்டதுதான் கோடம்பாக்கத்தின் ரகளை!

 ''தல வந்தா... ஏரியா அதிரும். தளபதியும் சேர்ந்து நின்னா, அலறும்ல!'' - ஜாலி டைரக்டர் வெங்கட் பிரபுவின் குரலில் டபுள் டோஸ் உற்சாகம்...

''செட்ல  அஜீத் சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்த விஜய், 'என்ன வெங்கட், படம் நல்லா எடுக்குறீங்க போல!’ன்னு என்னைக் கலாய்ச்சார். 'அப்படியா வெங்கட்... படம் நல்லா வந்துட்டு இருக்கா? சொல்லவே இல்லை!’ன்னு அஜீத்தும் பதிலுக்கு கவுன்ட்டர் கொடுத்தார். நான் சும்மா இருப்பேனா... 'அடுத்த படத்துல ரெண்டு பேர் கால்ஷீட்டும் கொடுங்க... பின்னி எடுத்துடலாம்’னேன்.  ரெண்டு பேரும் உஷார் ஆகிட்டாங்க!'' - அதிர அதிரச் சிரிக்கிறார் வெங்கட் பிரபு!

அரசியல் பிரியாணி!

''எப்படி நிகழ்ந்தது இந்தச் சந்திப்பு?''

அரசியல் பிரியாணி!

'' 'மங்காத்தா’ ஷூட்டிங் ஸ்பாட்டுக் குப் பக்கத்திலேயே, விஜய் நடிச்சுட்டு இருக்கும் 'வேலாயுதம்’ ஷூட்டிங்கும் நடந்துட்டு இருந்தது. நான் ரெண்டு பேருக்கும் ரசிகன். அவங்க ரெண்டு பேரையும் நிக்கவெச்சு, நான் நடுவில் நின்னு ஒரு படம் எடுத்துவெச்சுக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அஜீத்கிட்ட  சொன்னேன். 'அவ்வளவுதானே... விஜய் பக்கத்துல தானே இருக்கார். வாங்க போலாம்’னு கிளம்பிட்டார். என்னால நம்பவே முடியலை.

'வேலாயுதம்’ ஷூட்டிங்   ஸ்பாட்ல டைரக்டர் ராஜா, கேமராமேன் ப்ரியன்லாம்,விஜய்யை வெச்சு பரபரப்பா ஷாட்ஸ் எடுத்துட்டு இருந்தாங்க. எங்களைப் பார்த்ததும் 'என்னங்ண்ணா... இந்தப் பக்கம்?’னு ஆச்சர்யத்தோடு வரவேற்றார் விஜய். கை குலுக்கி, கட்டித் தழுவி, நலம் விசாரிச்சுன்னு விஜய்யும் அஜீத்தும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா சிரிச்சுப் பேசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பல கதைகளை பேசிட்டு இருந்தாங்க. சின்ன கேப் கிடைச்சப்போ, 'உங்க ரெண்டு பேர் காம்பினேஷன்ல  நான் ஒரு படம் டைரக்ட் பண்ணணும்’னு சொன்னேன். அப்படிச்

அரசியல் பிரியாணி!

சொல்லிட்டு, 'உங்க ரெண்டு பேர் கூட நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கணும்’னு சொன்னா, ஈஸியா வேலை முடிஞ்சிரும்னு நினைச்சேன். ஆனா, அவங்க, 'சூப்பர்... நிச்சயம் நடிக்கலாம்!’னு ஒரே குரல்ல சொல்லிட்டு, 'படத்தில் நான் தான் ஹீரோ... நீங்க வில்லன்’னு அவங்களுக்குள் சீரியஸாப் பேசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடைசியில் அவங்களுக்கு நடுவில் என்னை நிக்க வெச்சு போஸ் கொடுத்து, அடியேனின் பேராசையையும் நிறைவேத்திட்டாங்க!''

''ஆமா, அது என்ன கதை? அடிக்கடி அஜீத் பிரியாணி விருந்து தர்றாராமே? தலப்பாகட்டி ஹோட்டலுக்குப் போட்டியா தல பிரியாணி பிசினஸ் ஆரம்பிக்கிற ஐடியாவா?''

''செம ஐடியாவா இருக்கே! 'மங்காத்தா’, 'வேலாயுதம்’ ரெண்டு யூனிட்டுக்கும் என் கையால் சமைச்ச பிரியாணி விருந்து’ன்னு சொன்னார் அஜீத். அடுத்த நாள் ஸ்பாட்ல

அரசியல் பிரியாணி!

முஸ்லிம் வீட்டுக் கல்யாணக் களை. அஜீத் மேற்பார்வையில், கைவண்ணத்தில் தயாரான கமகம பிரியாணி ரெடி. 'சூப்பர் லஞ்ச். சமைச்ச கைக்கு என்னோட பரிசு இந்த வாட்ச்’னு சொல்லி அஜீத் கையில் ஒரு புது வாட்ச் கட்டினார் விஜய். அன்னிக்கும் ரெண்டு பேரும் உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசிட்டே இருந்தாங்க. ஆனா, அரசியல் பேசினாங்களான்னு சத்தியமா எனக்கும் தெரியாது! அந்த 'அரசியல்’ பிரியாணி விருந்து முடிஞ்சதும் மும்முரமா 'மங்காத்தா’ வேலைகளில் பரபரப்பாகிட்டோம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு