Published:Updated:

த்ரிஷாவுக்கு கல்யாணமா சான்ஸே இல்லை!

ஆர்யா ஆச்சர்யம்நா.கதிர்வேலன், படம் : கே.ராஜசேகரன்

த்ரிஷாவுக்கு கல்யாணமா சான்ஸே இல்லை!

ஆர்யா ஆச்சர்யம்நா.கதிர்வேலன், படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

''சார்... வீட்டுக்கு வர்றீங் களா... பிரியாணி சாப்பிடலாம்! ஸ்டிரைக்  நடக்கிறதால வீட்லயே இருக்கேன். 'புள்ளை நல்லா சாப்பிடட்டும்’னு பிரியாணி பண்ணி ஊட்டி விட்டுட்டே இருக்காங்க. எக்குத்தப்பா வெயிட் போட்டுட்டுப் போய் நிக்கப்போறேன்... செல்வா சார் அடிச்சுத்துரத்தப்போறார்!''- வசீகரமாகச் சிரிக்கிறார் கோலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட் பேச்சுலர்’ ஆர்யா!

 ''யாருமே எதிர்பார்க்காம திடீர்னு செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்’ படத்துல நடிக்கிறீங்க. அங்கே உங்க ஜாலி கேலி சேட்டைகள்லாம் செல்லாதே...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உண்மைதான் சார். ஆனா, ஒவ்வொரு நடிகனும் அவர்கிட்ட நிச்சயம் ஒரு படமா வது நடிக்கணும். பெரிய ஸ்கோப்கொடுப் பார். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக்கூட நடிக் கலாம். எல்லாத்தையும் அவர் பார்த்துக் குவார். 'இரண்டாம் உலகம்தான் என் படங்களில் ரொம்பப் பெரிசு ஆர்யா. என் கனவுப் படம் இதுதான்’னு சொன்னார். அப்படி அவர் நினைக்கிற படத்தில் நான் இருக்கேன்கிறது என் அதிர்ஷ்டம். சமத்தா நடிச்சு அவர்கிட்ட நல்ல பேர் வாங்க ணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருக் கேன்.

த்ரிஷாவுக்கு கல்யாணமா சான்ஸே இல்லை!

அவர்கிட்ட திட்டு வாங்காம நடிச் சாலே பெரிய விஷயம்னு தோணுது.சும்மா விளையாட்டுப் பையனாவே திரிஞ்சாலும் சரி வராது. அதான் அப்பப்போ இப்படிப் பட்ட கிரியேட்டர்களிடம் நம்மளைக் கொடுத்து பாலீஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன்!''

''அனுஷ்காதான் ஜோடியாமே. சாக்குபோக்கு சொல்லாம ஷூட்டிங்குக்கு ஆஜர் ஆகிடுவீங்களே...''

''அடப் போங்க சார். அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. எந்தப் படத்தில் நடிக்கும்போதும் 'ஒரு ஹீரோயின் இந்தப் படத்துல நடிக்கிறாங்க’ங்கிற ஃபீல் இருந்துட்டே இருக்கும். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல அனுஷ்கா வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது. நல்ல தமிழ் வார்த்தைகளா பேசுறாங்க. 'நான் கடவுள்’ல என் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்துச்சாம். ஒரு படமா 'மதராஸபட்டினம்’ அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ பார்த்துட்டு சிரிச்சுட்டே இருந்தாங்களாம். ஒரு அழகான பொண்ணு... நமக்குப் பிடிச்ச பொண்ணு... நல்ல விஷயங் களா சொல்லி நம்மைப் பாராட்டும்போது அதைக் கேட்கிறதே சுகமா இருக்குங்க. கேமரா முன்னாடி நடிக்க வந்துட்டா செம டஃப் கொடுக்குறாங்க. செல்வா சார், அனுஷ்கா ரெண்டு பேரையும் சமாளிச்சு நடிக்கிறது பெரிய சாதனைங்க!''

''லிங்குசாமி தயாரிப்பில் இருந்து விலகிட்டீங்க, நீங்கள் தயாரிச்ச 'படித்துறை’ படத்தை வெளியிட நீங்களே தயங்குறீங்கனு... திடீர்னு ஆர்யாவைச் சுத்தி ஏன் இத்தனை சர்ச்சைகள்?''

''லிங்குசாமி சாருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 'நானே உனக்கேத்த மாதிரி 'நச்’னு ஒரு கேரக்டர் வாங்கித் தர்றேன்’னு அவரே சொல்லிட்டார். இனிமே, அவரே எனக்கு டைரக்டர் ஏற்பாடு செய்துதருவார். என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். அவரோட பெஸ்ட் 'நண்பேன்டா’ நான். அப்புறம் 'படித்துறை’ படத்துல இன்னும் கொஞ்சம் புரொடக் ஷன் வேலை பாக்கியிருக்கு. வேற வேலை கள்ல சிக்கிட்டதால அதுல கவனம் செலுத்த முடியலை. படத்தை ரிலீஸ் பண்ணாம இருக்கணும்னுலாம் நான் நினைக்கலை. நிச்சயம் 'படித்துறை’ வெளிவரும்!''

''சேனல்ல சூர்யா குரோர்பதி பண்றார். விக்ரமும் வரப்போறதா சொல்றாங்க. உங்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சா பண்ணுவீங்களா?''

''நிச்சயமா! எனக்கு அதுக்கான எல்லாத் திறமையும் இருக்குங்க. சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னேன். நான் நடிக்கிறதைவிட அது நல்லாவே இருந்ததுனு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்கு எல்லாமே சேலஞ்ச் தான். ஷாரூக் கான் பண்றார். நான் பண்ண முடியாதா? சான்ஸ் கிடைச்சா பட்டையைக் கிளப்பிடலாம் சார்!''

''ஸ்டார் கிரிக்கெட்ல என்னதான் தகராறு?''

''பெங்களூரு டீம் நல்ல பலமான டீம். எங்களைத் தூக்கியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டு வந்தாங்க.  நாங்க நிதானமா, பொறுமையா, சாமர்த்தியமா விளையாடி னோம். அவங்க எப்பவும் ஒரு பதற்றத் தோடவே விளையாடினாங்க. அதுதான் அவங்க காலை வாரிடுச்சு. 'இவ்வளவு பலமான டீமா இருந்தும் தோத்துட் டோமே’னு அவங்களுக்கு ஆதங்கம். அது வருத்தமா வெளிப்பட்டு இருந்தா பரவா யில்லை. ஆத்திரமா மாறிடுச்சு. இதுக்கு மேல அதைப் பத்திப் பேச வேண்டாமே...

'' 'அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்’னு உங்க நெருங்கிய தோழி த்ரிஷா சொல்லி யிருக்காங்கபோல... பையன் யார்?''

''அட... நீங்க வேற சார்... த்ரிஷா சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு. அவளுக்கு இப்போதைக்கு கல்யாணமா? சான்ஸே இல்லை! இன்னைக்குச் சொன்னதை நாளைக்குக் கேட்டா இல்லேம்பா! அவளை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவளுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பண்ணுவா. கல்யாணம் பண்றதா இருந்தா என் கிட்ட சொல்லியிருப்பா. நான் விசாரிக்கிறேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism