Published:Updated:

2012 எனக்குச் சொந்தம்!

சமந்தா சவால்க.நாகப்பன், படம் : அ.ரஞ்சித்

2012 எனக்குச் சொந்தம்!

சமந்தா சவால்க.நாகப்பன், படம் : அ.ரஞ்சித்

Published:Updated:
##~##

ந்த ஆண் பார்த்தாலும் 'நீதானே என் பொன் வசந்தம்’ என்று கொண்டாடுவான். அப்பீலே இல்லை... சமந்தா அவ்வளவு ஸ்வீட் அண்ட் க்யூட்!

 ''சமந்தா சமர்த்தா... இல்லே குறும்பா...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் அம்மா கேரளா, அப்பா ஆந்திரா. கிட்டத்தட்ட 'காதலுக்கு மரியாதை’ ஷாலினி மாதிரி என்னைக் கொண்டாடுற ஜானதீன், டேவிட்னு ரெண்டு பிரதர்ஸ். சென்ட்டிமென்ட், மத நம்பிக்கை எதுவும் இல்லாத நார்மல் நல்ல பொண்ணு சமந்தா!''

''இவ்ளோ நல்லா தமிழ் பேசுறீங்களே...''

''ஹேய், என்னப்பா... ஸ்டெல்லா மாரீஸ் காலேஜ்ல பி.காம். படிச்ச சென்னைப் பொண்ணு தமிழ் பேசாம என்ன பேசுவா? என் அப்பா, அம்மா வேற ஸ்டேட்டா இருந்தாலும், நான் வளர்ந்தது எல்லாம் சென்னைதான். கொஞ்சல்ஸ் தமிழ் பேசுற தமிழச்சி நான்!''  

2012 எனக்குச் சொந்தம்!

'' 'நீதானே என் பொன் வசந்தம்’, 'கடல்’னு அடுத்தடுத்து பெரிய பேனர் படங்கள்... எப்படிச் சாத்தியம்?''

'' 'மாஸ்கோவின் காவிரி’, 'பாணா காத்தாடி’னு ஏற்கெனவே தமிழ்ல நான் ஹீரோயினா நடிச்ச படங்கள் எதிர்பார்த்த அளவு ரீச் ஆகலை. அடுத்து, தமிழ்ல நடிச்சா, அது பெரிய சென்சேஷன் உண்டாக்கணும்னு காத்துட்டு இருந்தேன். பிரார்த்தனைக்கும் காத்திருப்புக்கும் பலனா, 'நீதானே என் பொன் வசந்தம்’ வாய்ப்பு. கௌதம் சாருக்கு கோடி நன்றிகள். என் தெலுங்கு கேரியர்ல திருப்புமுனை தந்த கௌதம் சார், தமிழிலும் அதே மேஜிக் செஞ்சிருக்கார். 'நீதானே என் பொன் வசந்தம்’ வெளியானதும் தமிழ் ரசிகர்களின் நினைவெல்லா நித்யா            தான்.

'கடல்’ படத்துக்காக மணிரத்னம் சார் நடத்திய ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். ஆனா, நான் செலெக்ட் ஆவேன்னு அப்போ எதிர்பார்க்கலை. இப்போ ரொம்ப லக்கியா ஃபீல் பண்றேன்!''

''ஜீவா என்ன சொல்றார்?''

''ரொம்ப ஜாலியாப் பழகுறார். அவர் மட்டும் பெர்ஃபார்ம் பண்ணா போதும்னு நினைக்காம, நம்மோட பெஸ்ட் எதுன்னு தெரிஞ்சு, அதை வெளியே கொண்டுவர நிறையவே டிப்ஸ் தருவார். 'நீதானே என் பொன் வசந்தம்’ பட ஷூட்டிங்ல அடுத்தடுத்து நான் மூணு மொழிகளில் டயலாக் பேசணும். தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு ஹீரோக்களிடமும் 'ஐ லவ் யூ’ சொல்லிட்டு இருப்பேன். பிரேக்ல 'ஒரே டைம்ல மூணு பேரை டீல் பண்றியே... பெரிய ஆளும்மா நீ’னு கலாய்ச்சுட்டே இருப்பார்!''  

''காஜல், ஹன்சிகா, ஸ்ருதி, அமலா பால்னு இங்கே போட்டி பலமா இருக்கே..?''

2012 எனக்குச் சொந்தம்!

''அவங்க மட்டுமா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படத்தில் நடிச்சிருக்கும் ஒவ்வொரு ஹீரோயினும் எனக்குப் போட்டிதான். நான் நடிக்கிற படங்களை ரொம்பப் பிடிச்சு, ரசிச்சுப் பண்றேன். என் படங்கள் பெஸ்ட்டா இருக்கும்போது, மத்தவங்களைப் பத்தி நான் கவலைப்படத் தேவை இல்லை. தமிழ், தெலுங்குனு இந்த வருஷம் மட்டும் நான் நடிச்சு எட்டு படங்கள் ரிலீஸ் ஆகுது. எழுதிவெச்சுக்குங்க... 2012 சமந்தாவுக்குச் சொந்தம்!''

''சினிமாவில் யாரெல்லாம் உங்க ஃப்ரெண்ட்ஸ்?''

''தெலுங்கில் 'பிருந்தாவனம்’ படத்துல காஜலோட சேர்ந்து நடிச்சேன். அப்ப இருந்து அவ எனக்கு ரொம்பவே க்ளோஸ். மனசுக்கு நெருக்கமான பல விஷயங்களை அவகிட்டதான் பகிர்ந்துப்பேன். ஆனா, சினிமா பத்தி மூச்! தமன்னாவும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism