Published:Updated:

அர்ஜுன் இஸ் பேக்

ம.கா.செந்தில்குமார்படங்கள் : கே.ராஜசேகரன்

அர்ஜுன் இஸ் பேக்

ம.கா.செந்தில்குமார்படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ணிரத்னத்தின் 'கடல்’, வஸந்த்தின் '3 பேர் 3 காதல்’, 'பிரசாத்’ எனும் மும்மொழிப் படம், வீரப்பன் சினிமாவான 'வன யுத்தம்’, தானே இயக்கி நடிக்கும் ஒரு படம், இது போக ஓர் இந்திப் படம்... அர்ஜுன் இஸ் பேக்!

 ''வழக்கமான உங்க ஆக்ஷன் ஃபார்முலாவில் இருந்து விலகி நடிச்சிருக்கிற 'பிரசாத்’ படம் ரொம்ப நல்லா வந்திருக்குனு சொல்றாங்களே... படத்துல என்ன விசேஷம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் சினிமா கேரியர்ல மிஸ்ஸான ஏதோ ஒண்ணு 'பிரசாத்’ படத்தில் நடிச்சதன் மூலம் நிறைவடைந்த மாதிரி இருக்கு. ஒரு ஆண் குழந்தை பிறந்தா தலையெழுத்தே மாறிடும்னு நினைக்கிற சாதாரண மெக்கா னிக்கா நடிச்சிருக்கேன். ஆண் குழந்தையே பிறக்குது எனக்கு. ஆனா, வாய் பேச முடியாத குழந்தையாப் பிறக்குறான் அவன். அந்தக் குடும்பத்தின் கவலைதான் படம். படத்தின் க்ளைமாக்ஸுக்காகத்தான் அதில் நடிக்கவே ஒப்புக்கிட்டேன். படத்தில் என் மகனா அறிமுகமாகும்

அர்ஜுன் இஸ் பேக்

எட்டு வயசு சங்கல்ப், நிஜமாவே வாய் பேச முடியாத ஒரு மாற்றுத் திறனாளி. 'அப்படி நடி, இப்படி நடி’னு அவனுக்குச் சொல்லிப் புரியவைக்கிறதே கஷ்டம். ஆனா, சங்கல்ப் எல்லாரையும் உருகவெச்சிருக்கான்!''  

'' 'வன யுத்தம்’ படம் வீரப்பனை வில்லனாகச் சித்திரிக்கிறதுனு இப்பவே எதிர்ப்புக் கிளம்பியிருக்கே?''

''ஒரு காட்டைக் கொள்ளையடிச்சுட்டு இருந்த ஒருத்தனைப் பிடிக்க போலீஸ் வகுத்த வியூகம், அதில் இரு தரப்பிலும் உண்டான சேதம். இவ்வளவுதான் கதை. வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் உட்பட அவன் உயிருடன் உலவிய இடங்களுக்குப் போய் உண்மைக்கு ரொம்பப் பக்கத்தில் படமாக்கி இருக்கோம். நான் படத்துல டி.ஜி.பி. விஜயகுமார் சார் கேரக்டர் பண்றேன். 'சார், உங்க கேரக்டரை என்னைப் பண்ணச் சொல்லியிருக்காங்க. ஒரு ரியல் ஹீரோ கேரக்டரை ஒரு ரீல் ஹீரோ பண்றேன்’னு அவர்கிட்ட சொன்னேன். வாய்விட்டுச் சிரிச்சவர், 'உங்களை எனக்கு நல்லாத் தெரியும். அந்த கேரக்டருக்குப் பொருத்தமான ஆள் நீங்க தான்’னு வாழ்த்தினார்!''  

'' 'கடல்’ படத்தில் உங்களுக்கு என்ன கேரக்டர்?''

''அது மணி சார்தான் சொல்லணும். படத்துல மூணு வித்தியாசமான கெட்டப்ல வர்றேன். இதுவரை ரெண்டு கெட்டப் செட் ஆகிடுச்சு. இன்னும் ஒரு கெட்டப்புக்காக மணி சார் ரொம்ப மெனக்கெட்டுக்கிட்டு இருக்கார். 150 படங்களுக்கு மேல நடிச்ச பிறகு, அவரோடு வேலை செய்ய வாய்ப்புக் கிடைச்சாலும், ரொம்பவே திருப்தி அளிக்கிற கேரக்டர்!''

அர்ஜுன் இஸ் பேக்

'' 'அர்ஜுனுக்கு ஷ§கர்... அதான் மெலிஞ்சுட்டார்’, 'ரொம்ப நாளா சிக்ஸ்பேக் வெச்சிருந்ததால இப்ப உடம்பு சரியில்லாமப்போச்சு’னு உங்களைப் பத்தி பல வதந்திகள் உலவுதே?''  

''இப்பத்தான்... ரொம்ப சமீபத்தில் மெடிக்கல் செக்கப் பண்ணிக்கிட்டேன். 'இன்னும் 20 வருஷத்துக்கு உங்களை எந்த நோயும் நெருங்காது’னு டாக்டர் சொன்னார். நான் உடம்பு வெயிட் போடாம மெலிய எவ்வளவு கஷ்டப் படுறேன்னு எனக்குத்தான் தெரியும். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஜிம்ல இருக்கேன். போட்டோஸ்ல பார்த்தா எனக்கு 16 வயசுலயே சிக்ஸ்பேக் இருந்திருக்கு. மாங்குமாங்குனு கராத்தே, உடற்பயிற்சினு ஓடிட்டு இருந்ததால தானாவே சிக்ஸ்பேக் வந்திருக்கு. சினிமா வில் ஹீரோ சிகரெட் பிடிக்கிறது பார்த்து சிகரெட் பழகும் கலாசாரத்தைவிட, சிக்ஸ்பேக் கலாசாரம் பரவுறது நல்லதுதான். இத்தனை வருஷம் நான் ஃபிட்டா இருக்கிறதுக்குக் காரணம் என் உணவுப் பழக்கம்தான்.  உணவுதான் 70 சதவிகிதம் நம்ம உடம்பை ஃபிட்டா வெச்சுக்க உதவும். உடற்பயிற்சிகளின் பங்கு மீதி 30 சதவிகிதம்தான்!''

''இப்போதைய தமிழ் சினிமா ஹீரோக்களில் யாரு உடம்பை ஃபிட்டா வெச்சிருக்காங்க?''

''சூர்யா, ஆர்யா, விஷால்... அப்புறம் இன்னொரு ஹீரோ... ஆர்ஜுன்!''

''நீங்க சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருஷம் ஆச்சு. திரும்பிப் பார்த்தா திருப்தியா இருக்கா?''

''போலீஸ் ஆகணும்கிற ஆசையில் வந்தவனை சினிமா உள்ளே இழுத்துக்கிடுச்சு. தெரியாம நிறைய நல்லது பண்ணியிருக்கேன். அதேபோல் தப்பும்  பண்ணியிருக்கேன். ஆரம்ப காலத்தில் நான் நடிச்ச சில படங்களை இப்பப் பார்த்தா எனக்கே சகிக்கலை. அந்தப் படங்களை டி.வி-யில் பார்த்தா, நானே சேனலை மாத்திடுறேன். இல்லைன்னா, வீட்ல என் பொண்ணுங்களே என்னைக் கிண்டல் பண்ணிச் சிரிக்கிறாங்க. உண்மையைச் சொல்லணும்னா, கிட்டத்தட்ட 50 படங் கள் நடிச்ச பிறகும் நடிப்புன்னா என்னன்னே எனக்குத் தெரியாது. டைரக்டர் என்ன பண்றாரோ, அதை அப்படியே பண்ணிட்டுப் போயிடுவேன். அப்ப கோடி ராமகிருஷ்ணா சாரின் ஒரு தெலுங்குப் படம், ஸ்ரீதர் சாரின் தமிழ்ப் படம்னு ஒரு சில படங்கள்ல நல்லா நடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். அதுக்குக் காரணம், அந்த இயக்குநர்கள்தான்!''

''குடும்பத்தைப் பத்திச் சொல்லுங்க?''

''மனைவி நிவேதிதா. ரொம்ப வருஷமா ஹவுஸ் ஒய்ஃபா மட்டும் இருந்தாங்க. கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடிதான் பத்மா சுப்ரமணியத்திடம் சேர்ந்து நடனம் கத்துக்கிட்டு அரங்கேற்றமும் பண்ணாங்க. மூத்த மகள் ஐஸ்வர்யா டிகிரி பண்ணிட்டு இருக்காங்க. ரெண்டாவது பொண்ணு அமெரிக்கன் ஸ்கூல்ல ப்ளஸ் டூ படிக்கிறாங்க. 'உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணுங்க. நான் அந்த விருப்பத்தைப் பக்கத்துல இருந்து நிறைவேத்துறேன்’னு பொண்ணுங்ககிட்ட சொல்லிஇருக்கேன்!''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism