Published:Updated:

மெரினாவில் நிர்வாண பிகினி!

க.நாகப்பன்

மெரினாவில் நிர்வாண பிகினி!

க.நாகப்பன்

Published:Updated:

கோலிவுட் கிளிகளின் ஸ்டேட்டஸ் அப்டேட் இங்கே...  

 'காதல்’ சரண்யா

மெரினாவில் நிர்வாண பிகினி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'காதல்’, 'பேராண்மை’ படத்துல அவ்ளோ பாந்தமா நடிச்சுட்டு, இப்போ 'மழைக் காலம்’ படத்துல நிர்வாணமா நடிக்கிறீங்களாமே?''

''அச்சச்சோ... அப்படி இல்லைங்க! ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவியா, ஓவியத்துக்கு மாடலா ஒரு காட்சியில் போஸ் தருவேன். அது நிர்வாண மாடலிங்தான். ஆனா, 'ஸ்கின் கலர்’ ஆடை போட்டுத்தான் நடிச்சேன். அப்படியும் முதுகு மட்டும்தான் தெரியும். துளிகூட ஆபாசம் இருக்காது. படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட்தான் கொடுத்திருக்காங்க!''

''காதல் அனுபவங்கள்...''

''அட போங்கப்பா! நம்புவீங்களா... இதுவரை ரெண்டே ரெண்டு புரொபோசல்ஸ்தான் வந்திருக்கு. சரவணபவன் சர்வர் ஒருத்தர், என் சீனியர் ஒருத்தர். அதில் அந்த சீனியரை நானும் காதலிச்சேன். ஆனா, மூணே மாசத்துல வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சதும் காதல் உடைஞ்சிருச்சு. ஒரே பொண்ணு. மொத்த சொத்தும் எனக்கே எனக்குத்தான். பாய்ஸ்... துணிஞ்சு வாங்க!''

ஓவியா

மெரினாவில் நிர்வாண பிகினி!

''சமீப சந்தோஷம்?''

'' 'களவாணி’ படம் ரிலீஸ் ஆனதுல இருந்தே எங்கே என்னைப் பார்த்தாலும், 'கட்டிக்கிறேன்னு சொன்னாத்தான் விடுவேன்’னு ரசிகர்கள் ஜாலியாக் கலாட்டா பண்ணுவாங்க. இப்போ சமீபத்துல ஒரு குட்டிப் பையன். பார்த்ததுமே தூக்கிவெச்சுக் கொஞ்சணும் மாதிரி இருந்தான். அவ்வளவு க்யூட். என்னைப் பார்த்ததும் அவன் 'கட்டிக்கோ சொல்லு... விடுறேன்’னு கொஞ்சிக் கொஞ்சி சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு. அப்படியே தூக்கிவெச்சுக் கொஞ்சிட்டே இருந்தேன்!''

''சமீப கலாய்...''

'' 'பீச்சுக்குப் போறேன். இந்த நேரத்துக்கு அங்கே என்னல்லாம் கிடைக்கும். எங்கே கூட்டம் கம்மியா இருக்கும்?’னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னைக் கலாட்டா பண்ணி கலாய்க்குறாங்க. பேசாம நான் மெரினா பீச்சுக்கு கைடாகலாம்!''

''மிஸ் பண்ணிட்டோம்னு நினைக்கிற கேரக்டர்?''

'' 'சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா கேரக்டர்!''

லட்சுமி ராய்

மெரினாவில் நிர்வாண பிகினி!

''தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டிட்டீங்கபோல?''

மெரினாவில் நிர்வாண பிகினி!

''அப்படி ஒண்ணும் இல்லை. 'மங்காத்தா’, 'காஞ்சனா’ படங்கள், எனக்கு தெலுங்கு, கன்னடத்தில் வாய்ப்பு வாங்கித் தந்திருக்கு. சீக்கிரமே தமிழுக்கு வர்றேன்!''

''காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... பிகினி டிரெஸ்ல ரொம்ப கிளாமர் காட்டி நடிக்கிறீங்கனு பரபரப்பாவே இருக்கீங்களே?''

''அது சும்மா! அதான் 'மங்காத்தா’லயே பிகினி போட்டு இருப்பேனே. இப்போதைக்குக் கல்யாணம் யோசிக்கவே முடியாது. ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிச்சு முடிச்ச பிறகுதான் அது பத்தி யோசிக்கவே முடியும்!''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism