Published:Updated:

கற்றது களவு!

ஆர்.சரண், படங்கள்: கே.ராஜசேகரன்டீம் அரவான்

கற்றது களவு!

ஆர்.சரண், படங்கள்: கே.ராஜசேகரன்டீம் அரவான்

Published:Updated:

'அரவான்’... 18-ம் நூற்றாண்டின் தமிழர்களின் வாழ்வியலைப் பேசிய அழகியல் படம். தமிழ் சினிமாவின் கவனம் ஈர்க்கும் முக்கியப் படங்களில் அரவானுக்கும் நிச்சயம் இடம் உண்டு. 'அரவான்’ குழுவினரைச் சங்கமித்தேன்.      

கற்றது களவு!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'அரவான்’ படத்தில் நிகழ்ந்த வித்தியாச அனுபவங்களைப் பேசுங்களேன்...'' என்று கேட்டதும், ''முதல்ல நம்ம படத்தோட ரியல் கதை நாயகன் சு.வெங்கடேசன் அவர்கள் பேசுவார்!'' என வசந்தபாலன் 'மீட்டிங் ஓப்பனிங்’ கொடுத்தார். ''பீரியட் ஃபிலிம்னா ஒருவித ஆமைத்தன்மை இழையோடும். ஆனா, இந்தப் படம் ஒரு த்ரில்லர் பார்த்த திருப்தியை எனக்குத் தந்தது. வசந்தபாலன் என் 'காவல் கோட்ட’த்துக்கே அழகு சேர்த்துட்டார். காவல் கோட்டம் நாவலை எழுத உழைத்த உழைப்புக்குச் சற்றும் குறையாமல் என் படைப்புக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் என் நண்பர்!'' என நெகிழ்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன்.

தொடர்ந்தார் கலை இயக்குநர் விஜய் முருகன், ''பெரும் பாறைகள் இருந்த பண்டைய தமிழகம் என்பதால், கரடுமுரடாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மனிதர்கள் அதிகம் நடமாடாத பகுதிகளைத் தேடித் தேடி செட்கள் போட்டோம். கானாடுகாத்தான், சிறுகூடல்பட்டி, அரிட்டாபட்டி மலை, குற்றாலம், ஒகேனக்கல், அச்சன்கோவில், ஹம்பி, ஹூக்ளி, கடப்பா, கந்திக்கோட்டானு லொகேஷன்களைத் தேடி அங்கே செட் போட ரொம்பவும் சிரமப்பட்டோம். பல நாட்கள் மொத்த யூனிட்டும் தூங்காமல் வேலை செஞ்சிருக்கோம். எனக்கு ஒரு ஹார்ட் அட்டாக் வந்து ட்ரீட்மென்ட் எடுக்கிற அளவுக்கு ஆச்சுனா பார்த்துக்கோங்க!'' என்று சொல்லி அதிர்ச்சி கிளப்புகிறார்.

''டிஜிட்டலில் ஒரு மிரட்டல் பீரியட் ஃபிலிம் வேணும்னு பாலன் கேட்டதும் 'ஃபிஷ் ஐ லென்ஸ், 7டி கேமரா எல்லாம் வெச்சுப் பல காட்சிகளைப் பிரயத்தனப்பட்டு ஒளிப்பதிவு செஞ்சோம். இப்போ ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கி இருக்கீங்கனு பிரபலங்கள் பாராட்டுறப்போ, பெருமையா இருக்கு. தயாரிப்பாளர் சிவாவுக்கும் இயக்குநருக்கும் என் நன்றிகள்!'' - சிலிர்க்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.

''பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழன் உடல் வலுவோட இருந்தவன்கிற ஒரு வரியைப் பிடிச்சுக்கிட்டு ஒரே மாசத்துல சிக்ஸ் பேக்கோட வாங்கன்னு சொன்னார். நான் எயிட் பேக்கோட போய் சார் முன்னாடி நின்னேன். தினமும் உடம்பு பூரா முடியை ஷேவ் பண்ணி டாட்டூஸ் குத்தி லொகேஷன் போறதுக்குள்ள எனக்குத் தூக்கமே வந்துரும். படத்துல நான் ரத்தம் சிந்தாத காட்சின்னா... அது தன்ஷிகாவுடனான ரொமான்ஸ் சீனாத்தான் இருக்கும். நிஜமாவே எருமைக் கன்றைத் தூக்கிட்டு ஒரே டேக்ல ஓடி இருக்கேன். காளையை அடக்கி உடம்பு பூரா கொம்புக் காயங்கள் வாங்கி இருக்கேன். க்ளைமாக்ஸ்ல இயேசு மாதிரி நிஜ மரத்தை முதுகுல சுமந்து மூணு நாட்கள் தொடர்ந்து நடிச்சேன். என் உடம்புல மட்டும் 18 தையல்கள், 36 சிராய்ப்புகள் சார். 'அரவான்’ல நடிச்சப்போ என் மேக்கப் கிட் முழுக்க மருந்துகள் நிரம்பி வழியும் முதல் உதவிப் பெட்டியாகத்தான் இருந்துச்சு. ஒரு நேஷனல் அவார்டு பார்சல் சொல்லிடுங்க சார்!'' - காயங்கள் காட்டிச் சிரிக்கிறார் ஆதி.  

கற்றது களவு!

''என்னோட கன்னி முயற்சி இப்படி ஒரு பீரியட் ஃபிலிமாக் கிடைச்சது ஆனந்தம். அதிலும் நா.முத்துக்குமாரோட வரிகள் கிடைச்சது பேரானந்தம். கூடவே, விவேகாவோட ஒரு பாட்டும் கிடைச்சது பரமானந்தம். இப்போ 'நிலா நிலா...’ பாட்டையும் 'ஊரே ஊரே...’ பாடலையும் சார்ட் லிஸ்ட்டில் பார்க்கிறப்போ பெருமையா இருக்கு!'' - நா.முத்துக்குமார்- விவேகாவின் தோள் பற்றி நன்றி நவில்கிறார் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் பாடகர் கார்த்திக்.

கற்றது களவு!

''மும்பைப் பக்கம் சிவனேனு ரியல் எஸ்டேட் பெரும்புள்ளியா ஹேப்பியா சுத்திட்டுத் திரிஞ்சவன் சார் நானு. என்னைக் கூட்டிட்டு வந்து 'மொட்டாக்’ ஹேர் ஸ்டைல் கொடுத்து, வழுக்குப் பாறைல உருட்டி விளையாடிட்டாங்க சார்!'' என்று சிரிக்கிறார் கரிகாலன்.

''படத்துல கொழுந்தியாவை வாழவைப்போர் சங்கப் பிரதிநிதியா செம குதூகலமா நடிச்சிருந்தாலும், ஒரு சீன்ல ஆதியோடவும் திருமுருகனோடவும் ஓடவெச்சு, எனக்கிருந்த சிங்கிள் பேக்கையும் கரைச்சுப்புட்டார். நானும் எவ்வளவு நாள்தான் முள்ளு குத்தினாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது சொல்லுங்க!'' -தொப்பை குலுங்கச் சிரிக்கிறார் சிங்கம்புலி.      

''பசித்த புலிதான் அதிகமா வேட்டையாடும்னு சொல்வாங்க... பசுபதியும் பசித்த புலிதான்!'' என்றபடி வெடித்துச் சிரிக்கிறார் பசுபதி. '' 'கொம்பூதி கள்ளன்’ கேரக்டருக்காகப் பல படங்களை நான் கமிட் பண்ணிக்கலை. 'வெயில்’ முருகேசனுக்குப் பிறகு 'அரவான்’ கொம்பூதி அப்படி ஒரு தனித்துவமான ஆள். நானும் ஆதியும் நிஜமாவே காட்டுக்குள்ள அழுக்கேறி, முறுக்கேறி வாழ்ந்தோம். இப்போ ஆதி என் தம்பியாவே மாறிட்டான். தேள்கடி, பாம்புக் கடி எல்லாம் அங்கே கொசுக்கடி மாதிரி. ஆதியாச்சும் தன்ஷிகாவோட ரொமான்ஸ் பண்ணிக் காயத்துக்கு ஒத்தடம் கொடுத்துக்கிட்டான்... நான்?!'' என்று பசுபதி கலாய்க்க... அங்கே சிரிப்புச் சத்தம் கும்மியடிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism