Published:Updated:

ஆனந்தி என்ற கனி என்ற மேகலை என்ற சீதம்மா!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: ஜி.வெங்கட்ராம்

ஆனந்தி என்ற கனி என்ற மேகலை என்ற சீதம்மா!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: ஜி.வெங்கட்ராம்

Published:Updated:

''காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு என்னைப் பத்தி கன்னாபின்னானு நியூஸ் எழுது றாங்க. அப்புறம் என்கிட்டயே வந்து, 'நீங்க ஏன் முன்ன மாதிரி மீடியா ஃப்ரெண்ட்லியா இல்லை?’னு கேட்கி றாங்க''-அலுப்பும் சலிப்புமாக ஆரம் பித்தாலும், அம்புட்டு அழகாக இருக்கிறார் அஞ்சலி.

ஆனந்தி என்ற கனி என்ற மேகலை என்ற சீதம்மா!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மாஸ் ஹீரோ, அறிமுகம்னு கலந்துகட்டி நடிக்கிறீங்களே... என்னதான் ஐடியா உங்க மனசுல?''

'' 'கற்றது தமிழ்’ ஆனந்தி, 'அங்காடித் தெரு’ கனி, 'எங்கேயும் எப்போதும்’ மணிமேகலை மாதிரி உங்களுக்காகவே ஒரு கேரக்டர் பண்ணியிருக்கோம். அதுல நீங்க மட்டும்தான் செட் ஆவீங்க’னு கேட்டு, எத்தனையோ புது இயக்குநர்கள் வர்றாங்க. அதேநேரம், 'பவர்ஃபுல் ப்ளஸ் செம கிளாமர் கேரக்டர். ரெண்டையும் ஒரே ஆளா உங்களாலதான் சமாளிக்க முடியும்’னு சீனியர்ஸ் வர்றாங்க. அப்போ நான் போற ரூட் கரெக்ட்தானே? நான் எப்பவும் இயக்குநரின் நடிகை. அவ்வளவுதான்!''

''போற ரூட் எல்லாம் சரின்னா, அப்போ ஏன் தமிழின் டாப் ஸ்டார் ஹீரோக்களுடன் அஞ்சலி இன்னும் நடிக்கலை?''

''தெலுங்கில் வெங்கடேஷ், மகேஷ்பாபுனு ரெண்டு பேருமே டிரெண்ட் செட்டர் ஹீரோஸ். அவங்க ரெண்டு பேரும் முதல்முறையா சேர்ந்து நடிக்கும் 'சீதம்மா வகிட்லே ஸ்ரீமல்லி செட்டு’ படத் தில் நான் நடிக்கும் கேரக்டர்தான் சீதம்மா. மாஸ் ஹீரோக்கள் ரெண்டு பேர் என் கேரக்டர் பேரோட ஆரம்பிக்கிற படத்தில் நடிக்கிறது எவ்ளோ பெரிய விஷயம்? தமிழிலும் அந்த மாதிரி நிலை வரும்!''

''இப்போ தமிழ்ல என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?''

''சுந்தர்.சி சார் இயக்கும் 'மசாலா கஃபே’ படத்தில் விமல், சிவா ரெண்டு பேருமே ஹீரோ. சுந்தர் சாரின் வழக்கமான காமெடி கலக்கல் படம். இதில் நான் ஹெல்த் இன்ஸ்பெக்டரா வர்றேன். அப்புறம் முருகதாஸ் சார்கிட்ட '7ஆம் அறிவு’ வரை வேலை பார்த்த கின்ஸ்லே இயக்கும் படத்தில் நடிக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி சரவணன்தான் ஹீரோ. இதில் 'எங்கேயும் எப்போதும்’ மணி மேகலைக்கு நேரெதிர் கேரக்டர்!''

ஆனந்தி என்ற கனி என்ற மேகலை என்ற சீதம்மா!

''காதல், கல்யாணம்னு உலவுற வதந்திகளுக்கு நீங்களே பதில் சொல்லிடுங்களேன்...''

''அதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனா, இன்னும் ரெண்டு வருஷத்துக்கு, நான் ரசிச்சு ரசிச்சு நடிக்கிற அளவுக்கு நல்ல நல்ல படங்கள் கையில் இருக்கு. முதல்ல அதுல ஹீரோக்களைக் காதலிச்சுட்டு வர்றேன். அப்புறம் ரியல் லைஃப் ஹீரோ யார்னு பார்க்கலாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism