Published:Updated:

குஷ்பு கொடுத்த முத்தம்!

படங்கள் : ஜி.வெங்கட்ராம்

குஷ்பு கொடுத்த முத்தம்!

படங்கள் : ஜி.வெங்கட்ராம்

Published:Updated:
##~##

ன்சிகா மோத்வானி... பட்டர் ஸ்காட்ச் கன்னம்... ஊட்டி ரோஸ் வண்ணம்... பாதாம் பால் பளிங்கு தேவதை... சிம்பிளாக 'சின்ன’ குஷ்பு!  

 ''எப்படி இவ்வளவு பளீர்னு இருக்கீங்க?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் நிறம் சிந்திப் பெண்களுக்கே உரியது! அம்மா சீமா டெர்மடாலஜிஸ்ட். சரும மருத்துவர். இது போதாதா? நம்புவீங் களா? கடலை மாவு மாதிரி இயற்கையான பொருட்களைத்தான் சின்ன வயசுல

குஷ்பு கொடுத்த முத்தம்!

இருந்தே உபயோகிப்பேன். அதான் என் ஸ்கின் செம பாலீஷா இருக்கு!''

''அழகா இருக்கீங்க சரி... ஆனா, நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கிற பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் இல்லையே உங்ககிட்ட?''

''நம்பர் ஒன் பத்திலாம் நான் யோசிக்கவே இல்லை. 2003-ல இந்தியில் குழந்தை நட்சத்திரமா நடிச்சு, நாலே வருஷத்தில் தெலுங்கில் ஹீரோயினா அறிமுகமான 'தேசமுத்ரு’ படம் ஆந்திராவில் சூப்பர் டூப்பர் ஹிட். அப்போ சிறந்த புதுமுக நடிகைக்கான விருது கிடைச்ச சந்தோஷமே இன்னும் எனக்குக் குறையலை. அதுக்குள்ள நம்பர் ஒன், டூன்னு என்கிட்ட கேட்குறீங்களே. ஆனா, தமிழ் சினிமா மேல எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. அதனால தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். நிறைய வாய்ப்பு வந்தாலும், இப்போலாம் ரொம்ப செலெக்டிவா கதை கேட்டுத் தான் ஓ.கே. சொல்றேன். இப்போ நான் நடிச்சு வெளிவரப் போற 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் பார்த்துட்டுச் சொல் லுங்க என் பெர்ஃபார்மன்ஸ்பத்தி. 'ஓ.கே. ஓ.கே’-வுக்குப் பிறகு 'ஹன்சிகா டபுள் ஓ.கே.’னு நீங்களே சொல்வீங்க பாருங்க!''

குஷ்பு கொடுத்த முத்தம்!

''தமிழ் சினிமாவில் யார் உங்க ஃபேவரைட் ஹீரோயின்?''

''எப்பவும் என் ஃபேவரைட் குஷ்பு மேம்தான். என்ன ஒரு அழகு! ஒரு தடவை நாங்க மீட் பண்ணப்போ, என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் வெச்சாங்க.அவங்க எனர்ஜி லெவல் எனக்கு ரொம்பப் பிடிக் கும். அரசியல், டி.வி., சினிமா, குடும்பம்னு பறந்துட்டே இருப்பாங்க. கோர்ட், கேஸ்னு பிரச்னை வந்தாக்கூட சட்டப்படி போல்டா சமாளிப்பாங்க. இது எல்லாத்துக்கும் மேல எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாங்க. என்னை எல்லாரும் 'சின்ன குஷ்பு’னு சொல்றாங்க. என் கேரியரும் அவங்களை மாதிரியே இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா, எனக்கு கோயில்லாம் கட்ட வேணாம். சின்னதா ரசிகர்கள் மனசுல இடம் கொடுத்து, ஏதோ ஒரு ஊர் சொன்னாங் களே.... மீனாட்சி சாமிகூட இருக்குமே... ஆங்... மதுரை! அங்கே எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சா போதும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism