என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
Published:Updated:

ஒரு படம்... ஐந்து என்கவுன்டர்!

நா.கதிர்வேலன்

##~##

''ஒரு மாணவனே தன் ஆசிரியரைக் கொலை செய்றான். மாணவர்களின் மனசு பெத்தவங்களுக்குக்கூடத் தெரியறது இல்லை. இயந்திரத்தனமான வாழ்க்கை, அன்பையும் அக்கறையையும் காணாம அடிச்சிருச்சு. எனக்கு சொல்லிக்கொடுத்த நல்ல வாத்தியார்களையும் இன்றைய மோசமான சூழ்நிலையையும் மனசுல வெச்சு இந்தப் படம் பண்ணி இருக்கேன். இது யூத் படமா, இல்லை பொழுதுபோக்குப் படமானு சொல்லத் தெரியலை. ஆனா, நம் மக்களுக்கு அவசியமான படம்!'' - தான் இயக்கிய 'கந்தா’ படத்துக்கு இப்படி ஓர் அறிமுகம் கொடுக்கிறார் பாபு கே விஸ்வநாத். 'திருவாரூர் பாபு’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியிருப்பவர்!

 ''படத்தில் கல்வி சம்பந்தமான மெசேஜ் மட்டும்தானா?''

''பரபரன்னு அஞ்சு என்கவுன்டர்கள் இருக்கு. என்கவுன்டர்களை போலீஸ் எப்படித் திட்டமிடுறாங்க, அதோட அவசியம் என்ன, விளைவுகள் என்னங்கிறதை ரொம்பவே டீட்டெய்லா பண்ணி இருக்கோம். இப்போதைய சூழலில் அதைத் தெரிஞ்சுக்கவும் இயல்பா ஒரு ஆர்வம் இருக்குமே!''

ஒரு படம்... ஐந்து என்கவுன்டர்!

''கரண் தேர்ந்தெடுக்கும் படங்களில் கதை பலமா இருந்தாலும், ஏதோ ஒண்ணு மிஸ் ஆயிடுதே?''

''அதுக்கு அவர் என்ன பண்ணுவார்? உயிரைக் கொடுத்துதான் ஒவ்வொரு படத்திலும் உழைக்கிறார். இந்தப் படத்தையும் தனி ஆளா தன் தோள்ல தாங்கியிருக்கார். விட்டதைப் பிடிக்கிற அளவு மிரட்டி எடுத்திருக்கார்.

அப்போ ஆசிரியர்களுக்குச் சமுதாயத்தில் அவ்வளவு முக்கியமான பங்கு இருந்தது. இப்பவும் அது அப்படியேதான் இருக்கு. ஆனா, அதை உணர வேண்டிய பெற்றோர்களும் மாணவர்களும் உணராமல் இருக்காங்க. ரொம்ப அக்கறையோட படத்தை உருவாக்கியிருக்கோம். ஒரு எழுத்தாளனைவிட, சமூகத்தைப் புரிஞ்சவங்க வேறு யார் இருக்க முடியும்?''